;
Athirady Tamil News

மீன்பிடியில் ஈடுபட்ட எம்மை இராணுவத்தின் மூலம் தடுத்துள்ளனர் – முல்லைத்தீவு மீனவர்கள்!! (படங்கள்)

0

முல்லைத்தீவு, சிலாவத்தை தியோகுநகர் பகுதியில் இன்று (25)மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பிரதேச மீனவர்களை இராணுவம் தடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தில் ஹோட்டல் ஒன்றினை அமைத்துவரும் கனடாவை சேர்ந்த தமிழர் ஒருவருக்கு சொந்தமான தனியார் நிறுவனம் இராணுவத்தை ஏவி தம்மை அச்சுறுத்தி தொழில் நடவடிக்கையை தடுத்ததாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் .

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் ,

இன்று (25) குறித்த தனியார் நிறுவனம் அமைந்துள்ள கடற்கரைக்கு அண்மையாக கொரோனா பீதிக்கு பின்னர் நீண்டநாட்களின் பின்னர் இன்றையதினம் கரைவலை மூலம் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பிரதேச மீனவர்களை அப்பகுதியில் முகாம் அமைத்துள்ள படையினர் மீன்பிடியில் ஈடுபடவேண்டாம் என தடுத்ததோடு இப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட வேண்டும் என்றால் குறுித்த தனியார் நிறுவனத்தின் அனுமதி பெறவேண்டும் எனவும் எமது முகாம் கட்டளை அதிகாரியின் உத்தரவு இது எனவும் தெரிவித்து மீன்பிடியை தடுத்திருந்தனர் .

மீனவர்கள் தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை குறித்த தனியார் நிறுவன அதிகாரி பிரதேச இராணுவ அதிகாரிக்கு அழைப்பு மேற்கொண்டு தமது நிறுவனம் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் மீன்பிடியை மேற்கொள்வதை தடுக்குமாறு கூறி அருகில் இருந்த இராணுவ முகாம் படையினரை ஏவி தம்மை தடுத்ததாக பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர் .

இந்த நிலைமையை அடுத்து அப்பகுதிக்கு வருகைதந்த முல்லைத்தீவு பொலிஸார் மீனவர்களிடம் தொழில் செய்வதற்கான அனுமதி பத்திரம் போன்றவற்றை பார்வையிட்டு தொழிலில் ஈடுபடுவதை உறுதிப்படுத்தினர்.

ஏற்கனவே இந்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களை குறித்த தனியார் நிறுவனம் தமது பணி ஆட்களை ஏவி தாக்குதலை மேற்கொண்டு மீன்பிடியை தடுத்திருந்த நிலையில் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் மீண்டும் மீனவர்கள் தொழிலில் ஈடுபடும் கரையோரங்களை ஆக்கிரமித்து வைத்துள்ள இந்த நிறுவனம் தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்களை புகைப்படம் எடுப்பதும் இராணுவத்தை ஏவி கலைப்பதும் குறித்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மீனவர்களின் உறவினர்களான பெண்களிடம் கடற்தொழில் எமது பகுதி அமைந்துள்ள கடற்கைரையில் உங்கள் உறவினர்கள் மேற்கொண்டால் உங்களை பணியை விட்டு நிறுத்துவோம் என எச்சரிப்பதாகவும் நிறுவனத்தில் வழங்கப்படும் வேலையை காரணம் காட்டி வேலை வேண்டும் என்றால் கடற்தொழிலை செய்வதை இப்பகுதியில் நிறுத்துமாறு குறித்த தனியார் நிறுவனம் சண்டித்தனம் செய்வது ஆண்டாண்டு காலமாக மீன்பிடியையே வாழ்வாதாரமாக கொண்ட எம்மை அடக்கும் செயல் எனவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தாம் தொடர்ந்தும் இப்பகுதியில் தடையின்றி மீன்பிடியில் ஈடுபட இந்த பணபலம் படைத்த தனியார் நிறுவனத்தின் அடாவடியை நிறுத்தி தருமாறு மீனவர்கள் உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர் .
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

டெட்லி டே.. கருப்பு நாளாக அறிவித்த ஸ்பெயின்.. 3434 பேரை தொட்ட பலி எண்ணிக்கை.. சீனாவை முந்தியது!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதான சந்தைகள் மூடப்படும் – அரசாங்க அதிபர்!!

திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம்!!

கொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் பூரண குணமடைந்தார்!!

பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்!!

சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய 18 பேர் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில்!! (வீடியோ)

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

யாழ் வந்த மதபோதகருக்கு கொரோனா ! – மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல் !!

சுவிஸ்நாட்டு மதபோதகருக்கு கொரோனா தொற்று!!

ஒசுசல மருந்தகங்கள் திறக்கப்படும்!!

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு!!

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.!!

கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள வலயங்களாக கொழும்பு ,கம்பஹா மற்றும் களுத்தறை!!

நாளை முதல் உலர் உணவுப்பொருள்கள் வழங்க ஏற்பாடு – மாவட்டச் செயலாளர்!!

யாழ்ப்பாணம் தாவடி – சுதுமலை வீதியானது போக்குவரத்துக்கு தடை!! (படங்கள்)

8 மாகாணங்ளுக்கான ஊரடங்கு சட்டம் வௌ்ளிக்கிழமை வரை நீடிப்பு!!

கொரோனா தடுப்பு முகாம்களில் இருந்து 311 பேர் வெளியேறினர் !!

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!!

இராணுவத்தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்!!

கொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ என பிரகடனம்!!

வடக்கு மாகாணத்தில் செவ்வாய்வரை ஊரடங்கு நீடிப்பு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − seven =

*