இணையத்தளத்தில் மாணவர்களுக்கான இலவச கல்வி நடவடிக்கைகள்!!

நடைமுறையில் உள்ள விடுமுறை காலத்தில் வீட்டில் இருக்கும் பாடசாலை பிள்ளைகளுக்கு எந்தவொரு தொலைபேசி வலயத்தின் ஊடாகவும் கட்டணமின்றி e –தக்ஸலா இணையதளத்திற்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கல்வி அமைச்சினால் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க சகல தொலைபேசி நிறுவனங்களின் ஒப்புதலின் அடிப்படையில் இந்த வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய http://www.e-thaksalawa.moe.gov.lk/(IP43.224.124.108) ஊடாக e-தக்ஸலாவ கற்றல் முகாமைத்துவ முறைமைக்குள் பிரவேசிக்க முடியும்.
e தக்ஸலாவில் பிரவேசிக்கும் அனைத்து பாடசாலை சிறார்களுக்கு பாட செயற்பாடுகள், வினாத்தாள்கள் மற்றும் பாடநூல் தொடர்பான பயிற்சிகள் உட்பட கற்றல் செயற்பாடுகளுக்கு வழிகாட்டியாக அதிகமான பாடதிட்டங்களுடன் ஒன்றிணைவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். தரம் 1 முதல் 5 வரையிலான மாணவர்களுக்காக உள்ளக செயற்பாட்டுடன் கூடிய பாடங்கள் மற்றும் மின்னணு உள்ளடக்கங்களும், தரம் 10-11 தொடர்பாக வீடியோ பாடங்களும் தரம் 1-13 தொடர்பாக பரீட்சை வினாதத்தாள்கள் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த. (சா.தர) பரீட்சை மற்றும் க.பொ.த. (உ.தர) பரீட்சைக்குரிய கடந்த கால வினாத்தாள்கள், தரம் 1-13 வரை பாடம் சார்ந்த பொழுதுபோக்கான நிகழ்ச்சித் திட்டங்கள் , நூலகம், அகராதி மற்றும் பெருவாரியான வாசிப்பு கருவிகள் போன்றவை உள்ளடங்குகின்றன.
இந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நோயாளி இனங்காணப்பட்ட தருணத்திலேயே நாட்டின் சிறார்களின் முறையான பாதுகாப்பை கருத்திற்கொண்டு பாடசாலை விடுமுறையினை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சரின் வழிகாட்டலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சரியான, மற்றும் காலத்திற்கேற்ற தீர்மானம் மிகவும் பயனுள்ளதாக அமைவது இந்த விடுமுறை காலத்தில் சிறார்களை கற்றலுக்காக ஊக்குவிப்பதாகும் என்பதை கல்வி அமைச்சு வலியுறுத்துகின்றது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”
யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதான சந்தைகள் மூடப்படும் – அரசாங்க அதிபர்!!
திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம்!!
கொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!
பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்!!
சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய 18 பேர் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில்!! (வீடியோ)
யாழ் வந்த மதபோதகருக்கு கொரோனா ! – மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல் !!
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு!!
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.!!
கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள வலயங்களாக கொழும்பு ,கம்பஹா மற்றும் களுத்தறை!!
நாளை முதல் உலர் உணவுப்பொருள்கள் வழங்க ஏற்பாடு – மாவட்டச் செயலாளர்!!
யாழ்ப்பாணம் தாவடி – சுதுமலை வீதியானது போக்குவரத்துக்கு தடை!! (படங்கள்)
கொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ என பிரகடனம்!!