;
Athirady Tamil News

ட்டக்களப்பு மக்களை தனிமைப்படுத்த வேண்டும் – வைத்திய நிபுணர் எச்சரிக்கை!!

0

கொரோனா தொற்று ஒரு சங்கிலித் தொடர் எனவே 14 நாட்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தை மூடி தனிமைப்படுத்த வேண்டும் இல்லாவிடில் மட்டக்களப்பில் 5 இலட்சம் பொதுமக்களில் 2 இலட்சம் பொதுமக்கள் கொரோனாவினால் பாதிக்கப்படப்போவது உறுதி என மட்டு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியிடம் வைத்திய நிபுணர். எஸ். மதனழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் நேற்று (25) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபரும் செயலணியின் தலைவியுமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்ட மட்டு போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் எஸ் மதனழகன் இவ்வாறு தெரிவித்தார்

கொரோனா தொற்று ஒரு சங்கிலித் தொடர் ஏப்ரல் மாதம் காலநிலை மாறும்போது பிரச்சனை பெரிதாகும் வாய்ப்புள்ளது. எனவே 14 நாட்கள் தனிமைப்படுத்தல் இல்லாமல் நெருக்கமாக இருந்தால் ஒட்டு மொத்தமாக மட்டக்களப்பில் 45 தொடக்கம் 75 வீதமான மக்கள் பாதிப்படையலாம்

குறைந்த பட்சம் 40 வீதம் கொரோனா தொற்றுக்கு இந்த மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றால் 5 இலட்சம் பொதுமக்கள் வாழுகின்ற இந்த மட்டகள்ளப்பு மாவட்டத்தில் 2 இலட்சம் பொது மக்கள் கொரோனாவினால் பாதிக்கப்படுவார்கள்.

இதை தடுக்கமால் போனால் 40 ஆயிரம் பேருக்கு வைத்தியசாலையிலை விடுதி வசதி தேவைப்படும், தற்போதைய நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆயிரம் கட்டில் மட்டுமே உள்ளன. இதனை 2 ஆயிரம் கட்டிலாக மற்றுமே மேற்படுத்த முடியும்.

இந்த 40 ஆயிரம் பேரில் 10 ஆயிரம் பேருக்கு நாங்கள் அவசரசிகிச்சை ஒட்சிசன் வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் வரலாம், ஆனால் தற்போதைய நிலையில் மட்டு மாவட்டத்தில் 55 பேருக்கு தான் அவசர சிகிச்சை ஒட்சிசன் வழங்க முடியும்.

இதன் தீவிரம் அதிகரிக்குமாக இருந்தால் அது எந்தளவுக்கு இருக்க போகின்றது என ஆராயாமல் பொது இடங்களில் மக்கள் கூடுதல் அனுமதிக்கப்பட்டால் இந்த தொடர் சங்கிலி தொற்று நோயை நிறுத்தமுடியாமல் போகும்.

இந்த 6 மணித்தியால ஊரடங்கு சட்டத்தை தளர்த்தி பொதுமக்களை பொருட்கள் கொள்வனவு செய்ய அனுமதிப்பது கூட இந்த பாதிப்பை கொண்டுவரப் போகின்றது. அதேவேளை நீங்கள் முககவசம் அணிவதே கையுறை போடுவதோ எதுவுமே 100 வீதம் இந்த தொற்றை கட்டுப்படுத்த போவதில்லை இது பாதிப்பை கொண்டுவரப் போகின்றது.

எனவே முடியுமாயின் வீட்டுக்கு வீடு பொருட்களை கொண்டு சென்று வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவும் அதற்கு ஒரு குழுவை நியமிக்கவும் இந்த மாவட்டத்தை ஒரு 14 நாட்கள் மூடமுடியுமாக இருந்தால் அது இந்த வைரஸ்ஸை தடுக்க ஒரு நல்ல செயலாக இருக்கும். இந்த தொற்று ஆரம்பித்தால் தொற்று சங்கிலியை நிறத்த முடியாமல் போகும்.

நாடளாவிய ரீதியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 பேராக காணப்பட்ட போதும் அது 20 ஆயிரம் பேர் வரை தொற்றி இருக்கும் வாய்ப்புள்ளது என கணிப்பிடப்பட்டுள்ளது ஆனால் நிச்சயமாக அதைவிட கூடுதலாகத்தான் இருக்கும்.

முககவசம் மற்றும் துணியை பயன்படுத்தும் போது அதில் மூக்கில் வருகின்ற ஈரப்பதன் படிந்ததும் அதில் வைரஸ் படியும். எனவே இந்த நிலையில் வெளிப்பக்கம் தண்ணீரை உறுஞ்சாததும் உட்பக்கம் எமது ஈரத்தை உறுஞ்சும் பொருத்தமானான தரமான முககவசங்களை பயன்படுத்தவேண்டும்.

எனவே அறிவுறுத்தல்களுக்கு அமைய முககவசம் கையுறை போன்றவைகளை அணிந்து கொண்டு சென்றால் வைரஸ் தொற்றாது என்ற எண்ணத்தை விடுத்து தனிமைப்படுத்தப்பட்டு இருந்தால் தான் இந்த தொற்றை தடுக்கமுடியும் என்றார் .
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

“நாம் வரும் வரை வீட்டில் இருங்கள்” வேலைத்திட்டம்!!

யாழ்ப்பாணம் நகரப்பகுதி சுத்தமாக்கும் பணி!! (படங்கள்)

அரசாங்கம் விடுக்கும் எச்சரிக்கை ! அடுத்த இரு வாரங்களில் கொரோனா அதிகரிக்கலாம்!!

24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் எவருக்கும் கொரோனா இல்லை!!

டெட்லி டே.. கருப்பு நாளாக அறிவித்த ஸ்பெயின்.. 3434 பேரை தொட்ட பலி எண்ணிக்கை.. சீனாவை முந்தியது!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதான சந்தைகள் மூடப்படும் – அரசாங்க அதிபர்!!

திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம்!!

கொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் பூரண குணமடைந்தார்!!

பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்!!

சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய 18 பேர் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில்!! (வீடியோ)

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

யாழ் வந்த மதபோதகருக்கு கொரோனா ! – மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல் !!

சுவிஸ்நாட்டு மதபோதகருக்கு கொரோனா தொற்று!!

ஒசுசல மருந்தகங்கள் திறக்கப்படும்!!

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு!!

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.!!

கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள வலயங்களாக கொழும்பு ,கம்பஹா மற்றும் களுத்தறை!!

நாளை முதல் உலர் உணவுப்பொருள்கள் வழங்க ஏற்பாடு – மாவட்டச் செயலாளர்!!

யாழ்ப்பாணம் தாவடி – சுதுமலை வீதியானது போக்குவரத்துக்கு தடை!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + 17 =

*