;
Athirady Tamil News

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பு கடைசி ரெயிலில் வந்த 196 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்..!!!

0

கொரோனா பீதி காரணமாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு கடைபிடிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டார். இந்த உத்தரவு வெளியாகும் முன்பு கவுகாத்தியில் இருந்து திருச்சூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு விட்டது.

இதனால் அந்த ரெயில் திருச்சூர் செல்ல அதிகாரிகள் அனுமதி வழங்கினர். நேற்று அதிகாலை 1.30 மணிக்கு இந்த ரெயில் திருச்சூர் சென்றடைந்தது.

ரெயிலில் மொத்தம் 196 பயணிகள் மட்டுமே இருந்தனர். இந்த ரெயில் கவுகாத்தியில் இருந்து கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மகாராஷ்டிரா மாநிலம் வழியாக பயணித்து கேரளா வந்தது.

இந்த தகவல் திருச்சூர் மாவட்ட நிர்வாகத்துக்கும் தெரியவந்தது. உடனடியாக அவர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் திருச்சூர் ரெயில் நிலையம் சென்றனர். ரெயிலில் வந்த 196 பயணிகளுக்கும் தனித்தனியாக மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் 20 பேருக்கு லேசான காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. எனவே அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மற்ற பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five − 5 =

*