நாளாந்த உழைப்பாளி மக்களுக்கு தருமலிங்கம் சித்தார்த்தனால் இரவு உணவு!! (படங்கள்)
ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட நாளாந்த உழைப்பாளி மக்களுக்கு தருமலிங்கம் சித்தார்த்தனால் இரவு உணவு – யாழ்.மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந் நேரில் வழங்கினார்
நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாகவும், நோய் பரவுதலைக்கட்டுப்படுத்தும் முகமாக அரசினால் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், கடைகள் யாவும் அடைக்கப்பட்டுள்ளதுடன், அவசியமின்றி வீதியால் பயணிப்போர் யாவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அன்றாட உழைப்பாளிகள். கூலி வேலை செய்வோர் மற்றும்பெண் தலைமைத்துவக்குடும்பங்கள் அன்றாட தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளதுடன், அன்றாட உணவுக்கும் திண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் யாழ் – காரைநகர் வீதியில் அமைந்துள்ள அராலி வீதி ஓட்டுமடம் பகுதியில் அமைந்துள்ள புதிய குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள நாளாந்த உழைப்பாளி மக்கள் உணவுக்கான கஷ்ட நிலையை எதிர்நோக்கியுள்ளதாக புதிய சோனகத்தெரு வட்டார தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமைப்பாளர் ஜெகன் அவர்கள் யாழ். மாநகரசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ப.தர்சானந் அவர்களின் கவனத்துக் கொண்டு வந்திருந்தார்.
இதனையடுத்து யாழ்.மாநகரசபையின் உறுப்பினர் ப.தர்சானந் அவர்களின் கோரிக்கையின் பேரில் புளொட் தலைவரும், முன்னாள் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றதின் பேரில், புளொட் தலைவரும், முன்னாள் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் சொந்த நிதி உதவியினால் மேற்படி மக்களுக்கான இரவு உணவாக பாண் கொள்வனவு செய்யப்பட்டு மக்களிடம் வழங்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு வேளையில், தாம் நடமாட முடியாத சூழ்நிலையில் வீடு தேடி வந்து உதவி செய்தமைக்கு புதிய சோனகத்தெரு வட்டார தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமைப்பாளர் ஜெகன் அவர்களுக்கும், யாழ்.மாநகரசபையின் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் ப.தர்சானந் அவர்களுக்கும், மேற்படி உதவியை வழங்கிய புளொட் தலைவரும், முன்னாள் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
மேற்படி உணவு வழங்கலில் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் கு.மதுசுதன் அவர்களும் கலந்து கொண்டிருந்ததுடன், உதவியினை வழங்கிய அனைவரும் முகமூடிகள் அணிந்திருந்ததுடன், கிருமிநாசினிகள் மூலம் கையை சுத்தப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம் விடுக்கும் எச்சரிக்கை ! அடுத்த இரு வாரங்களில் கொரோனா அதிகரிக்கலாம்!!
24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் எவருக்கும் கொரோனா இல்லை!!
யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதான சந்தைகள் மூடப்படும் – அரசாங்க அதிபர்!!
திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம்!!
கொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!
பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்!!
சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய 18 பேர் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில்!! (வீடியோ)
யாழ் வந்த மதபோதகருக்கு கொரோனா ! – மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல் !!
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு!!
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.!!
கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள வலயங்களாக கொழும்பு ,கம்பஹா மற்றும் களுத்தறை!!
நாளை முதல் உலர் உணவுப்பொருள்கள் வழங்க ஏற்பாடு – மாவட்டச் செயலாளர்!!
யாழ்ப்பாணம் தாவடி – சுதுமலை வீதியானது போக்குவரத்துக்கு தடை!! (படங்கள்)