;
Athirady Tamil News

அம்பாறை மாவட்டத்தில் பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் காட்சி!! (படங்கள்)

0

ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் தமக்கான பொருட்களை கொள்வனவில் ஈடுபட்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் வியாழக்கிழமை(26) காலை ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் தமக்கான பொருட்களைக் கொள்வனவு செய்ய மிகவும் துரிதமாக செயற்பட்டனர்.கல்முனை பிரதான வீதிகளில் சிறிது நேரம் வாகன நெரிசல் காணப்பட்டதுடன் இதனை போக்குவரத்து பொலிசார் சீர் செய்வதை அவதானிக்க கூடியதாகவிருந்து .

கல்முனை பொது சந்தையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் முகமாக கல்முனை பொது சாந்தான்கேணி மைதானத்தில் மரிக்கறி வியாபார நிலையங்கள் தற்காலிகமாக காணப்பட்டது.மேலும் வியாபார நிலையங்கள்,பொது சந்தைகள்,சுப்பர்மார்க்கெட்டுகள்,பாமசிகள் ,வங்கிகள் ,எரிபொருள் நிலையங்கள் மற்றும் ஏனைய முக்கிய இடங்களில் பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நின்று பொருட்களை கொள்வனவு செய்தனர்.இதேவேளை தொடர்ந்தும் கல்முனை பிராந்திய சுகாதார சுகாதார சேவைகள் பணிமனையினால் பொது மக்களுக்கு கோரானா தொற்று தொடர்பாக அடிக்கடி விழிப்புணர்வு அறிவிறுத்தல் மேற்கொண்டு வருகின்றனர்.

வியாபார நிலையங்களில் பாதுகாப்பு பிரிவினர் மக்களை ஒழுங்கு படுத்தி வருவதுடன் கல்முனை தொடக்கம் மாளிகை காடு வரையுள்ள கடற்கரை வீதிகளில் மீன்கள் இமரக்கறி வியாபார நிலையங்கள் அதிகம் காணப்பட்டது .அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, பாண்டிருப்பு, பெரிய நீலாவணை ,சாய்ந்தமருது, கல்முனை ,காரைதீவு ,நற்பிட்டினை, சேனைக்குடியிருப்பு ,சம்மாந்துறை ,நிந்தவூர், ஆகிய பிரதேசங்களில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் பொதுமக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மக்களின் அத்தியாவசிய தேவைக்காக மருந்தகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஏனைய வர்த்தக நிலையங்கள் வியாபார தலங்கள் என்றனர் பூட்டப்பட்டு பாதைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.பாரிய சவாலாக அமைந்துள்ள கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளமை தொடர்ந்து நாடு ஊராகவும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்து வரும் நிலையில் அம்பாறை மாவட்டத்திலும் நண்பகல் 2 மணியின் பின்னர் ஊரடங்கு நிலைமை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் வியாபாரிகளுக்கு தூர இடங்களில் இருந்து மரக்கறி மற்றும் கோழி முட்டை கொண்டு வந்து இறக்குமதி செய்யும் முறை வியாபாரிகளுக்கான அனுமதி இன்று கல்முனை பொலிஸ் நிலையத்தில் பிரதேச செயலாளர்களின் அனுமதியுடன் வழங்கப்பட்டது.நீண்ட வரிசையில் காத்திருந்த வியாபாரிகள் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை தூர இடங்களுக்கு சென்று பெற்றுக் கொண்டோம் இங்கு கல்முனைப் பிராந்தியத்தில் விற்பனை செய்வதற்கான அனுமதி கோரியிருந்தனர்.

இந்த விடயம் சம்பந்தமாக கல்முனைப் பிராந்தியத்தில் கல்முனை மாநகரசபை மேயர் மற்றும் கல்முனை பிரதேச செயலாளர்கள் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முப்படையினர் ஆகியோர் கலந்து ஆலோசித்து இதன்பின்னர் பிரதேசத்திற்கான நடமாடும் வியாபாரிகளுக்கான முதற் கட்ட அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து ஏனைய வியாபாரிகளுக்கான அனுமதிகள் புதிய பரிசோதனைகள் மற்றும் ஆவணங்கள் சமர்ப்பித்து அதனடிப்படையில் பொலிசாரினால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

யாழ்ப்பாணம் நகரப்பகுதி சுத்தமாக்கும் பணி!! (படங்கள்)

அரசாங்கம் விடுக்கும் எச்சரிக்கை ! அடுத்த இரு வாரங்களில் கொரோனா அதிகரிக்கலாம்!!

24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் எவருக்கும் கொரோனா இல்லை!!

டெட்லி டே.. கருப்பு நாளாக அறிவித்த ஸ்பெயின்.. 3434 பேரை தொட்ட பலி எண்ணிக்கை.. சீனாவை முந்தியது!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதான சந்தைகள் மூடப்படும் – அரசாங்க அதிபர்!!

திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம்!!

கொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் பூரண குணமடைந்தார்!!

பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்!!

சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய 18 பேர் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில்!! (வீடியோ)

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

யாழ் வந்த மதபோதகருக்கு கொரோனா ! – மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல் !!

சுவிஸ்நாட்டு மதபோதகருக்கு கொரோனா தொற்று!!

ஒசுசல மருந்தகங்கள் திறக்கப்படும்!!

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு!!

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.!!

கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள வலயங்களாக கொழும்பு ,கம்பஹா மற்றும் களுத்தறை!!

நாளை முதல் உலர் உணவுப்பொருள்கள் வழங்க ஏற்பாடு – மாவட்டச் செயலாளர்!!

யாழ்ப்பாணம் தாவடி – சுதுமலை வீதியானது போக்குவரத்துக்கு தடை!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 8 =

*