யாழ்.போதனா வைத்தியசாலையில் கிளினிக் பெறும் தீவகத்தைச் சேர்ந்தோருக்கான அறிவிப்பு!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கிளினிக்கில் சிகிச்சை பெறுகின்ற தீவகப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு வைத்தியசாலைப் பணிப்பாளர் அவசர அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.
கொரோனா தொற்று தாக்கம் காரணமாக ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ளதால் நோயாளர் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக மருத்துவ கிளினிக்கில் சிகிச்சை பெறுகின்றவர்கள் எதிர்நோக்கும் பாதிப்பையடுத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய நாளை 27 ஆம் திகதி தீவகத்தைச் சேர்ந்த மருத்துவ கிளினிக் பெறும் நோயாளர்களுக்கு மருந்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது.
இதற்கமைய நாளை காலை 9 மணிமுதல் 1 மணிவரையிலான நேரத்திற்குள் 0212222268 என்ற தொலை பேசி இலக்கத்திற்கு அழைத்த்து தெரிவிக்குமாறு பணிப்பாளர் கேட்டுள்ளார்.
அவ்வாறு தெரிவிக்குமிடத்தே உங்களுக்கு தேவையான மருந்துகள் உங்களது பிரதேசத்திற்கு அருகிலுள்ள அரச வைத்தியசாலைகளுக்கு பொதி செய்து அனுப்பி வைக்கப்படுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே நாளை தீவகப் பிரதேசத்திற்காக முதலில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ள இந்த நடவடிக்கை தொடர்ந்தும் ஏனைய பிரதேசங்களுக்கும் ஆரம்பிக்க உள்ளதாகவும் அது தொடர்பான அறிவித்தல்கள் பின்னர் வெளியிடப்படுமென்றும் குறிப்பிட்டள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”
அரசாங்கம் விடுக்கும் எச்சரிக்கை ! அடுத்த இரு வாரங்களில் கொரோனா அதிகரிக்கலாம்!!
24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் எவருக்கும் கொரோனா இல்லை!!
யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதான சந்தைகள் மூடப்படும் – அரசாங்க அதிபர்!!
திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம்!!
கொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!
பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்!!
சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய 18 பேர் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில்!! (வீடியோ)
யாழ் வந்த மதபோதகருக்கு கொரோனா ! – மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல் !!
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு!!
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.!!
கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள வலயங்களாக கொழும்பு ,கம்பஹா மற்றும் களுத்தறை!!
நாளை முதல் உலர் உணவுப்பொருள்கள் வழங்க ஏற்பாடு – மாவட்டச் செயலாளர்!!
யாழ்ப்பாணம் தாவடி – சுதுமலை வீதியானது போக்குவரத்துக்கு தடை!! (படங்கள்)