தாவடி மக்களுக்கு சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் பொருட்கள்!! (படங்கள்)
யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள தாவடி கிராம மக்களுக்கு சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் மானிய விலையில் அத்தியாவசிய பொருட்கள் இன்று விநியோகிக்கப்பட்டுள்ளது. உடுவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட தாவடி கிழக்கு கிராமத்தில் வசித்தவரே யாழ்ப்பாணத்தில் முதல் கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனால் குறித்த J/193 கிராம சேவகர் பிரிவு வெளித்தொடர்புகள் இன்றி தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளது. அந்த கிராம சேவகர் பிரிவில் வசிக்கின்ற சுமார் 300 குடும்பங்களின் நன்மை கருதி அத்தியாவசிய பொருட்களை வீடுவீடாக விநியோகிக்குமாறு உடுவில் பிரதேச செயலர் த.முகுந்தனால் சுன்னாகம் ப.நோ.கூ. சங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனடிப்படையிலேயே சுன்னாகம் ப.நோ.கூ.சங்க வர்த்தக முகாமையாளர் வே.செல்வகாந்தன் தலைமையில் ஒவ்வொரு வீடுவீடாகச் சென்று மானிய விலையில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”
அரசாங்கம் விடுக்கும் எச்சரிக்கை ! அடுத்த இரு வாரங்களில் கொரோனா அதிகரிக்கலாம்!!
24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் எவருக்கும் கொரோனா இல்லை!!
யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதான சந்தைகள் மூடப்படும் – அரசாங்க அதிபர்!!
திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம்!!
கொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!
பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்!!
சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய 18 பேர் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில்!! (வீடியோ)
யாழ் வந்த மதபோதகருக்கு கொரோனா ! – மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல் !!
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு!!
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.!!
கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள வலயங்களாக கொழும்பு ,கம்பஹா மற்றும் களுத்தறை!!
நாளை முதல் உலர் உணவுப்பொருள்கள் வழங்க ஏற்பாடு – மாவட்டச் செயலாளர்!!
யாழ்ப்பாணம் தாவடி – சுதுமலை வீதியானது போக்குவரத்துக்கு தடை!! (படங்கள்)