கொழும்பிலிருந்து அத்தியாவசியப் பொருட்களுடன் போதைப் பொருட்கள் கடத்தல்!! (படங்கள்)
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்துக்கு லொறியில் அத்தியாவசியப் பொருட்களுடன் ஐஸ் போதைப் பொருள், கஞ்சா, மற்றும் ஹரோயின் போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற மூவரை இன்று (வெள்ளிக்கிழமை) கைதுசெய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த லொறியில், கொழும்பில் அத்தியாவசியப் பொருட்கள் நேற்று ஏற்றப்பட்டு மட்டக்களப்பிற்கு எடுத்துக்கொண்டுவந்த நிலையில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான இன்று (வெள்ளிக்கிழமை) குறித்த லொறி மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்குள் கொண்டுவரப்பட்டு பொருட்களை வெளியில் இறக்கி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது, குறித்த அத்தியாவசிய பொருட்களுடன் 13 கிராம் 20 மில்லிலீற்றர் ஜஸ்போதைப் பொருளும், 6 கிராம் 960 மில்லிக்கிராம் கஞ்சாவும், 104 மில்லிக்கிராம் ஹரோயின் போதைப் பொருட்களை மீட்டதுடன் லொறி சாரதி மற்றும் இரண்டு உதவியாளர்கள் உட்பட 3 பேரை கைது செய்ததுடன் லொறி ஒன்றையும் அத்தியாவசிய பொருட்களையும் கைப்பற்றினர்.
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும். இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”
ஊரடங்கு சட்டத்தை கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!!
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு !! (வீடியோ)
வவுனியாவில் 8 மணி நேரம் ஊரடங்கு தளர்வு !சில வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை!! (படங்கள்)
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு !!
அரசாங்கம் விடுக்கும் எச்சரிக்கை ! அடுத்த இரு வாரங்களில் கொரோனா அதிகரிக்கலாம்!!
24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் எவருக்கும் கொரோனா இல்லை!!
யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதான சந்தைகள் மூடப்படும் – அரசாங்க அதிபர்!!
திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம்!!
கொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!
பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்!!
சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய 18 பேர் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில்!! (வீடியோ)
யாழ் வந்த மதபோதகருக்கு கொரோனா ! – மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல் !!
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு!!