;
Athirady Tamil News

100 பேருக்கு ஆபத்து.. 23 பேருக்கு பாதிப்பு.. மரணமடைந்த 70 வயது தாத்தா மூலமாக பரவிய கொரோனா! (வீடியோ, படங்கள்)

0

இறந்துபோன கொரோனா வைரஸ் நோயாளி மூலமாக 23 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் பஞ்சாபில் நடந்துள்ளது அனைவரையும் இது பதட்டமடைய வைத்துள்ளது.

கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது… இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.. எனினும் உயிரிழப்புகளும் நடந்து வருகின்றன. அதன்படி கடந்த 18-ம் தேதி பஞ்சாபில் ஒரு முதியவர் உயிரிழந்தார்.. கொரோனா வைரஸ் தாக்கி இறந்த 4-வது நபர் இவர் ஆவார்.. 70 வயதான இவர் ஜெர்மனியிலிருந்து இத்தாலி வழியாக பஞ்சாப் திரும்பினார்.. ஜெர்மனி, இத்தாலியில் 2 வாரத்துக்கு டூர் போய்விட்டு வந்தவர் தனிமைப்படுத்தப்பட்டார்.. ஆனாலும் மொத்த விதிகளையும் மீறிவிட்டார்.. மார்ச் 6 ஆம் தேதி டெல்லிக்கு வந்த அவர் திரும்பவும் பஞ்சாபிற்கு சென்றிருக்கிறார்.

கிராமம் மார்ச் 8 மற்றும் 10-ம் தேதிகளில் ஆனந்த்பூர் சாஹிப்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஷாஹீத் பகத் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள தன்னுடைய கிராமத்திற்கு திரும்பியிருக்கிறார்.. வைரஸ் தொற்றுக்கான எந்த டெஸ்ட்டும் எடுக்கப்படவில்லை.. அதற்கு முன்னதாகவே அவர் 100 பேர் வரை தொடர்பு கொண்டுள்ளார்… இவருடன் மேலும் 2 பேர் சேர்ந்து மாநிலம் முழுவதும் 15 கிராமங்களுக்கு விசிட் அடித்து வந்துள்ளனர்.

இறந்துவிட்டார் இதற்கு பிறகுதான் வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இவர் இறந்துவிட்டார்.. ஆனால் இவர் மற்றவர்களுடன் தொடர்பில் இருந்ததால் அதன் விளைவு என்ன தெரியுமா? அவரது குடும்பத்தில், 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது… அவரது பேத்தி, பேரன் ஒவ்வொருவரும் ஏராளமான மக்களை சந்தித்து உள்ளனர். அதனால் ஒட்டு மொத்த கிராம மக்களுக்கும் இந்த தொற்று இருக்கிறதா என்ற சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தனிமைப்படுத்துதல் சமூக விலகல் என்பது ரொம்பவும் முக்கியம்.. அவசியம்.. இந்த 3 பேரின் பொறுப்பற்ற செயல்தான், COVID-19 க்கு ஆளான ஒவ்வொரு நபரையும் அந்த கிராமத்திலிருந்து அதிகாரிகள் தனிமைப்படுத்தி வருகிறார்கள். இது எல்லாவற்றையும் விட இன்னொரு ஷாக், இந்த 3 பேரும் நவன்ஷஹர், மொஹாலி, அமிர்தசரஸ், ஹோஷியார்பூர், ஜலந்தர் போன்ற இடங்களில் டூர் போனதால், அந்த பகுதியிலும் வைரஸ் தொற்றை பரப்பியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

17 பேருக்கு தொற்று இன்றைய தினம், இந்தியா முழுதும் கிட்டத்தட்ட 700 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் இறந்துள்ளனர்.. இதை பார்த்தும் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் சிலர் உள்ளது அதிர்ச்சியாக உள்ளது.. வைரஸின் தீவிரத்தை முதலில் உணர வேண்டும்.. நம் உயிரையும் பாதுகாத்து, அடுத்தவர் உயிரையும் காப்பாற்றுவதுதான் சமூக விலகல்.

அலட்சியம் வேண்டாம் ஒருவருடைய அலட்சியம்.. ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும் அளவுக்க இந்த வைரஸ் பரவல் உள்ளதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாத இந்த வைரஸை கண்டு உலக வல்லரசு நாடுகளே பயந்து கிடக்கும்போது, நம் நாடெல்லாம் எம்மாத்திரம்? அதனால் சமூக விலகலும், தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்வதும்தான் இப்போதைக்கு நமக்கு உடனடி மருந்து.. தயவு செய்து வீட்டை விட்டு வெளியே வராதீங்க!






உலகமே பாராட்டுன ரஷ்யாவுக்கும் இந்த நிலையா.. கொரோனா நோயாளிகள் கிடுகிடு உயர்வு.. ஷட் டவுன் ஆரம்பம் !! (வீடியோ, படங்கள்)

ஊரடங்கு சட்டத்தை கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு !! (வீடியோ)

வவுனியாவில் 8 மணி நேரம் ஊரடங்கு தளர்வு !சில வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை!! (படங்கள்)

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 4018 பேர் இதுவரையில் கைது!!

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு !!

இத்தாலியை முந்தும்.. திரும்பிய இடமெல்லாம் டிரம்பிற்கு சிக்கல்.. கொரோனாவிடம் அமெரிக்கா திணறுவது ஏன்? (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் நகரப்பகுதி சுத்தமாக்கும் பணி!! (படங்கள்)

அரசாங்கம் விடுக்கும் எச்சரிக்கை ! அடுத்த இரு வாரங்களில் கொரோனா அதிகரிக்கலாம்!!

24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் எவருக்கும் கொரோனா இல்லை!!

டெட்லி டே.. கருப்பு நாளாக அறிவித்த ஸ்பெயின்.. 3434 பேரை தொட்ட பலி எண்ணிக்கை.. சீனாவை முந்தியது!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதான சந்தைகள் மூடப்படும் – அரசாங்க அதிபர்!!

திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம்!!

கொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் பூரண குணமடைந்தார்!!

பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்!!

சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய 18 பேர் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில்!! (வீடியோ)

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

யாழ் வந்த மதபோதகருக்கு கொரோனா ! – மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல் !!

சுவிஸ்நாட்டு மதபோதகருக்கு கொரோனா தொற்று!!

ஒசுசல மருந்தகங்கள் திறக்கப்படும்!!

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு!!

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × four =

*