;
Athirady Tamil News

போலீஸ்காரரை சரமாரியாக தாக்கிய மக்கள்.. இவங்களுக்கெல்லாம் கொரோனா வரனும்.. கொதித்த பிரபல நடிகை! (வீடியோ, படங்கள்)

0

போலீஸ்காரர் ஒருவரை மக்கள் சரமாரியாக தாக்குவதை பார்த்த நடிகை வரலக்ஷ்மி, அவர்கள் அனைவரையும் கொரோனா வைரஸ் தாக்க வேண்டும் என கொந்தளித்துள்ளார்.

உலகம் முழுவதும் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவிலும் நுழைந்துள்ள கொரோனா வைரஸால் இதுவரை 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் மரணமடைந்துள்ளனர்.

சீரியஸ்னஸ் தெரியாமல் இந்தியாவில் நுழைந்துள்ள கொரோனாவை ஒழித்துக்கட்ட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால் அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மக்கள் கொரோனா வைரஸின் சீரியஸ்னஸ் தெரியாமல் வெளியே சுற்றி வருகின்றனர்.

உயிரை பணயம் வைத்து வெளியில் சுற்றும் நபர்களை போலீசார், வீட்டிற்கு செல்லும்படி கூறும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிறது. சில போலீசார் அன்பாக சொல்லி அனுப்புகின்றனர். சில போலீசார் அவர்களின் ஸ்டைலில் சொல்கின்றனர். மக்கள் வெளியில் சுற்றுவதை தடுக்க போலீசார் தங்களின் உயிரை பணயம் வைத்து இரவு பகலாக வேலை பார்த்து வருகின்றனர்.

கண்டித்த போலீசார் இந்நிலையில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்றான கர்நாடகா மாநிலத்தின் சில இடங்களிலும் மக்கள் அதன் தீவிரத்தை பொருட்படுத்தாமல் ஊர் சுற்றி வருகின்றனர். அந்த வகையில் பெங்களூரு சஞ்சய் நகரில் தெருவில் சுற்றிய இளைஞர்களை 2 போலீசார் கண்டித்தனர்.

கண்மூடித்தனமாக தாக்குதல் இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஒன்று சேர்ந்துகொண்டு, இரண்டு போலீஸ்காரர்களையும் சரமாரியாக தாக்கினர். கன்னத்தில் அறைந்தும், முதுகில் அடித்தும் கீழே தள்ளிவிட்டும் அவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைளதங்களில் வைரலாகி வருகிறது.

என்ன முட்டாள்தனம் இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள நடிகை வரலக்ஷ்மி போலீசாரை தாக்கியவர்களை கடுமையாக விளாசியுள்ளார். என்ன முட்டாள்தனம்.. !!! காவல்துறையினர் தங்கள் உயிரை நமக்காக பணயம் வைக்கிறார்கள். நீங்கள் அவர்களுக்கு இப்படிதான் திருப்பிச் செலுத்துகிறீர்கள்.. மன்னிப்பு கேட்கிறேன் இந்த மக்கள் கொரோனா வைரஸை பெற தகுதியானவர்கள்!!! கொடூரம்.. இரத்தக்களரியான கொடூரம்.. அந்த முட்டாள்கள் சார்பாக நான் அந்த காவலரிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்!!! இவ்வாறு நடிகை வரலக்ஷ்மி தனது டிவிட்டில் பதிவிட்டுள்ளார்.

போலீசார் தாக்குதல் அதே வீடியோவின் தொடர்ச்சியாக மற்றொரு வீடியோவையும் ஷேர் செய்திருக்கிறார் வரலக்ஷ்மி. அது இதற்கு முன் நடந்த சம்பவத்திற்கு முன்னதாக நடந்தது. அதில் இரு போலீசாரும் கடைக்கு முன்பு நின்றிருந்த இளைஞரை சரமாரியாக தாக்குகின்றனர். லத்தியால் அடித்தும் காலால் எட்டி உதைத்தும் வெறித்தனமாக தாக்கியிருக்கின்றனர்.

மோசமாக்காதீர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகை வரலக்ஷ்மி, நான் இப்போதுதான் இதனை பார்க்கிறேன். ஒரு நாணயத்திற்கு எப்போதும் 2 பக்கங்கள் இருப்பதை இது நிரூபிக்கிறது. போலீஸ் மக்களை அடிக்க கூடாது.. இது ஊரடங்கு மக்களை அடிக்க இது ஒன்றும் குற்றம் அல்ல.. இதுவும் கண்டிக்கப்பட வேண்டும்.. எல்லோரும் நியாயமாக இருக்க வேண்டும் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. எல்லோரும் வீட்டுக்குள் இருங்கள் நிலைமையை மோசமாக்க வேண்டாம்.. என பதிவிட்டுள்ளார்.






100 பேருக்கு ஆபத்து.. 23 பேருக்கு பாதிப்பு.. மரணமடைந்த 70 வயது தாத்தா மூலமாக பரவிய கொரோனா! (வீடியோ, படங்கள்)

உலகமே பாராட்டுன ரஷ்யாவுக்கும் இந்த நிலையா.. கொரோனா நோயாளிகள் கிடுகிடு உயர்வு.. ஷட் டவுன் ஆரம்பம் !! (வீடியோ, படங்கள்)

ஊரடங்கு சட்டத்தை கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு !! (வீடியோ)

வவுனியாவில் 8 மணி நேரம் ஊரடங்கு தளர்வு !சில வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை!! (படங்கள்)

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 4018 பேர் இதுவரையில் கைது!!

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு !!

இத்தாலியை முந்தும்.. திரும்பிய இடமெல்லாம் டிரம்பிற்கு சிக்கல்.. கொரோனாவிடம் அமெரிக்கா திணறுவது ஏன்? (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் நகரப்பகுதி சுத்தமாக்கும் பணி!! (படங்கள்)

அரசாங்கம் விடுக்கும் எச்சரிக்கை ! அடுத்த இரு வாரங்களில் கொரோனா அதிகரிக்கலாம்!!

24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் எவருக்கும் கொரோனா இல்லை!!

டெட்லி டே.. கருப்பு நாளாக அறிவித்த ஸ்பெயின்.. 3434 பேரை தொட்ட பலி எண்ணிக்கை.. சீனாவை முந்தியது!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதான சந்தைகள் மூடப்படும் – அரசாங்க அதிபர்!!

திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம்!!

கொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் பூரண குணமடைந்தார்!!

பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்!!

சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய 18 பேர் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில்!! (வீடியோ)

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

யாழ் வந்த மதபோதகருக்கு கொரோனா ! – மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல் !!

சுவிஸ்நாட்டு மதபோதகருக்கு கொரோனா தொற்று!!

ஒசுசல மருந்தகங்கள் திறக்கப்படும்!!

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு!!

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + 5 =

*