ஒரே நாள் – ஸ்பெயின் 569 பேர், பிரான்ஸ் 299 பேர், இங்கிலாந்து 181 பேர், அமெரிக்கா 182 பேர் – திகைக்கும் நாடுகள்..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவியுள்ளது.
உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 79 ஆயிரத்து 892 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 26 ஆயிரத்து 518 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 4 லட்சத்து 22 ஆயிரத்து 698 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 676 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இத்தாலியில் இந்த வைரஸ் நேற்று ஒரே 919 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 134 ஆக அதிகரித்துள்ளது.
இத்தாலியை தொடர்ந்து பல நாடுகளில் நேற்று நூற்றுக்கணக்கானவர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
ஸ்பெயின் நாட்டில் 64 ஆயிரத்து 059 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் வைரசுக்கு 569 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 934 ஆக உயர்ந்துள்ளது.
பிரான்ஸ் நாட்டிலும் 32 ஆயிரத்து 964 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் அந்நாட்டில் வைரசுக்கு 299 பேர் பலியாகினர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 995 ஆக அதிகரித்துள்ளது.
இங்கிலாந்து நாட்டில் 14 ஆயிரத்து 543 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. அவர்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் 181 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 759 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் தற்போது வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு 96 ஆயிரத்து 968 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் 182 பேர் பலியாகினர். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 477 ஆக அதிகரித்துள்ளது.