அம்பாறையில் உள்ள பட்டதாரி பயிலூனர் பிரதேச செயலகங்களுக்கு வர வேண்டாம்!!

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பட்டதாரி பயிலூனர்களாக தெரிவுசெய்யப்பட்ட எவரும் பிரதேச செயலகங்களுக்கு வர வேண்டாம்
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள் தெரிவிப்பு
தத்தமது விபரங்களை கிராமசேவகர்களிடம் ஒப்படைக்க வேண்டுகோள்
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பட்டதாரி பயிலூனர்களாக தெரிவுசெய்யப்பட்ட எவரும் பிரதேச செயலகங்களுக்கு வர வேண்டாம் என
அம்பாறை மாவட்டத்தின் புதிய மேலதிக அரசாங்க அதிபர்களாக வி.ஜெகதீஷன், ஏ.எம்.அப்துல் லத்தீப் ஆகியோர் தெரிவித்தனர்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பட்டதாரி பயிலூனர்களாக தெரிவுசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களால் சனிக்கிழமை(28) கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு இவ்வாறு தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் தெரிவித்ததாவது
நாட்டில் உள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் 3ம் கட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்களாக தெரிவு செய்யப்பட்ட அனைவரும் எதிர்வரும் திங்கள்கிழமை அம்பாறை மாவட்டத்தில் உள்ள எந்தவொரு பிரதேச செயலகங்களிலும் வருகை தர வேண்டாம் என்றும் அவர்கள் அனைவரும் தங்களின் கிராம சேவர்களிடம் வங்கி கணக்கு இலக்கம்,அடையாள அட்டை பிரதி,கல்விச் சான்றுதழ்களின் பிரதிகளை எடுத்து சென்று பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இது சம்மந்தமான அறிவுறுத்தல்கள் அனைத்தும் அந்தந்த பிரதேச செயாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள் தெரிவித்தனர்.
இதே வேளை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீ.எம்.எல்.பண்டாரநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”
பாவனைக்கு உதவாத ரொட்டி மற்றும் பழுதடைந்த நிலையில் உணவுகள் மீட்பு!! (படங்கள்)
திருகோணேஸ்வர் ஆலயத்தில் கலசமுடைந்துள்ளது; செய்தியில் உண்மையில்லை.!!
அடி வேலைக்கு ஆகவே ஆகாது… தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்..!! (வீடியோ, படங்கள்)
ஊரடங்கு சட்டத்தை கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!!
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு !! (வீடியோ)
வவுனியாவில் 8 மணி நேரம் ஊரடங்கு தளர்வு !சில வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை!! (படங்கள்)
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு !!
அரசாங்கம் விடுக்கும் எச்சரிக்கை ! அடுத்த இரு வாரங்களில் கொரோனா அதிகரிக்கலாம்!!
24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் எவருக்கும் கொரோனா இல்லை!!
யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதான சந்தைகள் மூடப்படும் – அரசாங்க அதிபர்!!
திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம்!!
கொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!
பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்!!