இந்தியாவில் 17 பேர் உயிரிழப்பு; 724 பேருக்கு கொரோனா தொற்று!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 724ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. அவர்களில் நேற்று வரை 64 பேர் முழு உடல் நலன் பெற்றுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, நேற்று வரை 35 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஆறு பேர் குணமடைந்துள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மதுரையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கு தொற்று இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என தேசிய சுகாதார அமைப்பு (தமிழகம்)தெரிவித்துள்ளது.
அதேபோல தாய்லாந்தில் இருந்து ஈரோடு வந்திருந்த நபர்களுடன் தொடர்பில் இருந்த இரண்டு நபர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த இரண்டு நபர்களுக்கும் கொரோனா பாதிப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் அரியலூரில் இருப்பதால், அவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை கொரோனா தாக்கம் உள்ளவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்தவர்களாக இருப்பதால், 2020 பெப்ரவரி மாதம் 15ம் திகதி முதல் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்த 96,663 பேரை கண்டறிய வேண்டியுள்ளது என தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தனிமைப்படுத்திக்கொள்ளுதல் மட்டுமே தற்போதைய தீர்வாக இருப்பதால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்கள் மற்றும் மற்ற இன்றியமையாத தொழில்களை செய்பவர்களுக்கு ரோஜா பூக்களை கொடுத்த பொலிசார் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இதனிடையே, கேரளாவுக்கு அடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் ஏற்பட்டவர்களை கொண்ட மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.
இந்திய தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த வேற்று மாநிலத்தை சேர்ந்தவர்கள் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலையால் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் சூழ்நிலை தொடர்கிறது.
இதுதொடர்பாக பேசிய ஒருவர், ‘எங்களிடம் இருந்த மொத்த பணமும் தீர்ந்து விட்டது. ராஜஸ்தானை சேர்ந்த நாங்கள் டெல்லியிலுள்ள பூங்காவில் தங்கி பணிபுரிந்து வந்தோம். இப்போது பணத்திற்கு வழியில்லை என்பதால், நாங்கள் மூன்று நாட்கள் நடந்தே எங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்’ என்று கூறினார்.
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள 724 பேரில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்களே. எனவே, இந்திய விமான நிலையங்களில் இதுவரை அடிப்படை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் 14 நாட்கள் கட்டாய சுய தனிமைப்படுத்தலை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
எனினும், அதை மீறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், இரண்டு வாரத்திற்கு முன்னதாக அமெரிக்காவிலிருந்து ஆந்திரப்பிரதேசம் வந்த இரண்டு வெளிநாடுவாழ் இந்தியர்கள் கட்டாய சுய தனிமைப்படுத்துதலை மீறி தப்பி சென்றதாக பொலிசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையிலிருந்து அந்தமான் சென்ற ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது வியாழக்கிழமை உறுதிசெய்யப்பட்டிருந்த சூழ்நிலையில், அவருடன் சேர்ந்து பயணித்த மற்றொருவருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக அந்தமான், நிக்கோபார் நிர்வாகம் அறிவித்துள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”
கொரோனா தொற்றை கண்டுபிடிக்க 5 நிமிடங்கள் போதும்- புதிய கருவி!! (வீடியோ)
பாவனைக்கு உதவாத ரொட்டி மற்றும் பழுதடைந்த நிலையில் உணவுகள் மீட்பு!! (படங்கள்)
திருகோணேஸ்வர் ஆலயத்தில் கலசமுடைந்துள்ளது; செய்தியில் உண்மையில்லை.!!
அடி வேலைக்கு ஆகவே ஆகாது… தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்..!! (வீடியோ, படங்கள்)
ஊரடங்கு சட்டத்தை கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!!
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு !! (வீடியோ)
வவுனியாவில் 8 மணி நேரம் ஊரடங்கு தளர்வு !சில வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை!! (படங்கள்)
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு !!
அரசாங்கம் விடுக்கும் எச்சரிக்கை ! அடுத்த இரு வாரங்களில் கொரோனா அதிகரிக்கலாம்!!
24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் எவருக்கும் கொரோனா இல்லை!!
யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதான சந்தைகள் மூடப்படும் – அரசாங்க அதிபர்!!
திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம்!!
கொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!
பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்!!