;
Athirady Tamil News

நானே 2 வாரமா தனியாத்தான் இருக்கேன்.. கமல் கிளீன் ஸ்டேட்மென்ட்.. அந்த அட்ரஸில் மநீம ஆபீஸ்தான் இருக்கு!! (வீடியோ, படங்கள்)

0

“அந்த அட்ரஸில் நான் சில வருஷமாகவே இல்லை.. அங்கு மநீம ஆபீஸ் செயல்பட்டு வருகிறது.. வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக, நான் கடந்த 2 வாரமாகவே தனிமைப்படுத்துதலை மேற்கொண்டிருக்கிறேன், அதனால் நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல” என்று கமல்ஹாசன் ஒரு அறிக்கை மூலம் தெளிவுபடுத்தி உள்ளார்.

கமல்ஹாசனின் வீட்டில் மாநகராட்சி சார்பில் தனிமைப்படுத்தப்பட்டதாக எச்சரிக்கை நோட்டீஸ் இன்று காலை ஒட்டப்பட்டது.. ஆனால் ஆழ்வார்பேட்டை வீட்டில் கமல் இப்போது இல்லை.. ஏனென்றால் கமல் இதை அலுவலகமாகத்தான் பயன்படுத்தி வருகிறார்.

அது மட்டுமல்ல, தற்சமயம் அவர் ஈசிஆரில் உள்ள வீட்டில்தான் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் ஆழ்வார்பேட்டை வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.. இதனால் மய்ய உறுப்பினர்களும் கொந்தளித்து விட்டனர்.

நோட்டீஸ்

நோட்டீஸ் ஒட்டப்பட்ட விவகாரம் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி சர்ச்சையாக வெடிக்க தொடங்கியதும், ஒட்டப்பட்ட நோட்டீஸை மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக அகற்றினர். பிறகு கமல்ஹாசன் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியதில் தவறு நடந்து விட்டது என்று சென்னை மாநகராட்சியும் ஒப்புதல் தெரிவித்தது. “இமிகிரேஷன் அதிகாரிகள் தரும் பட்டியலை வைத்து நோட்டீஸ் ஒட்டப்படுகிறது. அதில் இந்த சிறு தவறு நடந்து விட்டது. இனிமேல் கவனமாக இருப்போம்” என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷூம் விளக்கம் தந்திருந்தார்.

கமல்ஹாசன்

அதேபோல கமல்ஹாசனும் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில், “உங்கள் அனைவரின் அன்புக்கும், அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள்.. என்னுடைய வீட்டின் வெளியே ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸ் வைத்து நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

முன்னெச்சரிக்கை

ஆனால் அந்த அட்ரஸில் நான் கடந்த சில வருடங்களாகவே இல்லையென்பதும், அந்த இடத்தில் மக்கள் நீதி மய்யத்தின் ஆபீஸ் செயல்பட்டு வந்ததும் உங்களில் பலரும் அறிந்ததுதான். அதனால் நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல. நான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளியை வீட்டிலும், வெளியிலும் பின்பற்றி வருகிறேன்.. நான் சமூக இடைவெளியை எங்கும் பின்பற்றுவேன் என்றும் சொல்லி கொள்கிறேன்.

விளக்கம்

வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் கடந்த 2 வாரங்களாகவே தனிமைப்படுத்துதலை மேற்கொண்டிருக்கிறேன் என்பதையும், அன்புள்ளம் கொண்டோர் எல்லாருமே அவ்வாறே செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். அதே நேரத்தில் செய்தியாளர்கள் செய்தி வெளியிடும் முன்னர் அதை உறுதி செய்துவிட்டு வெளியிட வேண்டி கொள்கிறேன்.. உண்மையா, பொய்யா என தெரிந்து பதிவிட்டால் தவறான செய்தி பரவுவதையும் தடுக்க முடியும்” என்று கமல் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.







9 நாட்களில் விமானப்படை கட்டிய விடுதி கையளிப்பு!! (படங்கள்)

புத்தளத்தில் கொரியப் பிரஜைகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!! (படங்கள்)

இந்தியாவில் 17 பேர் உயிரிழப்பு; 724 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா தொற்றை கண்டுபிடிக்க 5 நிமிடங்கள் போதும்- புதிய கருவி!! (வீடியோ)

வதந்தின்னாலும் ஒரு அளவு வேணாமா.. கொடூர கொரானாவுக்கு மஞ்சளும், வேப்பிலையும் மருந்தா? (வீடியோ, படங்கள்)

பாவனைக்கு உதவாத ரொட்டி மற்றும் பழுதடைந்த நிலையில் உணவுகள் மீட்பு!! (படங்கள்)

வடக்கு மாகாண கிளினிக் நோயாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்!!

திருகோணேஸ்வர் ஆலயத்தில் கலசமுடைந்துள்ளது; செய்தியில் உண்மையில்லை.!!

ஏப்ரல் 3 ஆம் திகதிவரை ஊரடங்கு தொடரும் நிலை!!

அடி வேலைக்கு ஆகவே ஆகாது… தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்..!! (வீடியோ, படங்கள்)

போலீஸ்காரரை சரமாரியாக தாக்கிய மக்கள்.. இவங்களுக்கெல்லாம் கொரோனா வரனும்.. கொதித்த பிரபல நடிகை! (வீடியோ, படங்கள்)

100 பேருக்கு ஆபத்து.. 23 பேருக்கு பாதிப்பு.. மரணமடைந்த 70 வயது தாத்தா மூலமாக பரவிய கொரோனா! (வீடியோ, படங்கள்)

உலகமே பாராட்டுன ரஷ்யாவுக்கும் இந்த நிலையா.. கொரோனா நோயாளிகள் கிடுகிடு உயர்வு.. ஷட் டவுன் ஆரம்பம் !! (வீடியோ, படங்கள்)

ஊரடங்கு சட்டத்தை கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு !! (வீடியோ)

வவுனியாவில் 8 மணி நேரம் ஊரடங்கு தளர்வு !சில வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை!! (படங்கள்)

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 4018 பேர் இதுவரையில் கைது!!

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு !!

இத்தாலியை முந்தும்.. திரும்பிய இடமெல்லாம் டிரம்பிற்கு சிக்கல்.. கொரோனாவிடம் அமெரிக்கா திணறுவது ஏன்? (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் நகரப்பகுதி சுத்தமாக்கும் பணி!! (படங்கள்)

அரசாங்கம் விடுக்கும் எச்சரிக்கை ! அடுத்த இரு வாரங்களில் கொரோனா அதிகரிக்கலாம்!!

24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் எவருக்கும் கொரோனா இல்லை!!

டெட்லி டே.. கருப்பு நாளாக அறிவித்த ஸ்பெயின்.. 3434 பேரை தொட்ட பலி எண்ணிக்கை.. சீனாவை முந்தியது!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதான சந்தைகள் மூடப்படும் – அரசாங்க அதிபர்!!

திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம்!!

கொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் பூரண குணமடைந்தார்!!

பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 2 =

*