அருணலு மக்கள் முன்னணியால் வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு!! (படங்கள்)
அருணலு மக்கள் முன்னணியால் வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாகவும் வரட்சி காரணமாகவும் மலையகப்பகுதியில் வாழும் தோட்டத்தொழிலாளர்கள் உட்பட பல வறிய குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. சில குடும்பங்கள் தங்களுடைய அன்றாட உணவினை கூட பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இவ்வாறு மிகவும் எவ்வித நிவாரணமும் இன்றி மிகவும் வறிய நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் பல தோட்டங்களில் வாழுகின்ற பல குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை பெற்றுக்கொடுக்கும் வேலைத்தி;ட்டம் ஒன்றினை அருணலு மக்கள் முன்னணி இன்று (28) திகதி முதல் ஆரம்பித்துள்ளது.
இதன் போது வெளி ஓயா சென் எலியாஸ் தோட்டத்தில் வாழும் குடும்பங்களுக்கு இந்த உலர் உணவு பொருட்கள் அக்கட்சியின் தலைவர் வைத்தியர் கே.ஆர் .கிசான் தலைமையில் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
ஒவ்வொரு உலர் உணவு பொதியிலும் அரசி,பருப்பு,சீனி,சோயாமீட் ஆகிய அடங்குகின்றன.
குறித்த உலர் உணவு பொருட்கள் வழங்கும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,இந்த காலத்தில் சுகயீனமுற்று ஹெப்பி லைப் தனியார் வைத்தியசாலைக்கு வருபவர்களுக்கு இலவசமாக மருந்து வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் அவர இதன் போது தெரிவித்தார்.
இந் நிகழ்வுக்கு அக்கட்சியின் முக்கியஸ்த்தர்கள் வைத்தியர் அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”