ஊரடங்கு நேரத்தில் நடமாடிய குற்றச்சாட்டில் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் கைது!!

கொடிகாமம் பொலிஸ் நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட வரணிப் பகுதியில் ஊரடங்கு நேரத்தில் நடமாடிய குற்றச்சாட்டில் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் ஒருவர் உள்பட நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த வாகனமும் பொலீசாரினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் வரணிப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வசதி குறைந்த குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்க முற்பட்ட சமயமே இவர்கள் கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் ஒருவரும், அவர் சார்ந்த கட்சியின் ஆதரவாளர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.
கைது செய்யப்பட்ட வேளையில், சாவகச்சேரிப் பகுதியில் உணவுப் பொருள்களை விநியோகிப்பதற்காக சாவகச்சேரி பொலிஸாரினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் அவர்களிடம் இருந்த போதிலும், கொடிகாமம் பொலிஸ் பிரிவினுள் ஊரடங்கு வேளையில் நடமாடுவதற்கான அனுமதிப்பத்திரம் எதனையும் அவர்கள் வைத்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நால்வரும், அவர்கள் பயணம் செய்த வாகனமும் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், ஊரடங்கு வேளையில் நடமாடுவோருக்குப் பொலிஸ் பிணை மறுக்கப்பட்ட நிலையில், நாளை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படுவார்கள் என அறியவருகிறது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”
கொரோனா நோயால் உயிரிழந்தவரின் சடலம் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது!!
சென்னையில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!
உணவுப் பொருட்களை கொண்டுசெல்வதற்கு அனுமதி வழங்குமாறு பிரதமர் ஆலோசனை!!
புத்தளத்தில் கொரியப் பிரஜைகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!! (படங்கள்)
இந்தியாவில் 17 பேர் உயிரிழப்பு; 724 பேருக்கு கொரோனா தொற்று!!
கொரோனா தொற்றை கண்டுபிடிக்க 5 நிமிடங்கள் போதும்- புதிய கருவி!! (வீடியோ)
பாவனைக்கு உதவாத ரொட்டி மற்றும் பழுதடைந்த நிலையில் உணவுகள் மீட்பு!! (படங்கள்)
திருகோணேஸ்வர் ஆலயத்தில் கலசமுடைந்துள்ளது; செய்தியில் உண்மையில்லை.!!
அடி வேலைக்கு ஆகவே ஆகாது… தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்..!! (வீடியோ, படங்கள்)
ஊரடங்கு சட்டத்தை கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!!
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு !! (வீடியோ)
வவுனியாவில் 8 மணி நேரம் ஊரடங்கு தளர்வு !சில வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை!! (படங்கள்)
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு !!
அரசாங்கம் விடுக்கும் எச்சரிக்கை ! அடுத்த இரு வாரங்களில் கொரோனா அதிகரிக்கலாம்!!
24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் எவருக்கும் கொரோனா இல்லை!!
யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதான சந்தைகள் மூடப்படும் – அரசாங்க அதிபர்!!
திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம்!!
கொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!
பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்!!