புத்தளம் சாஹிரா கல்லூரி கொரோனா கண்காணிப்பு நிலையமாக தெரிவு!!

புத்தளம் சாஹிரா கல்லூரி கொரோனா வைரஸ் கண்காணிப்பு நிலையமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.
இதுதொடர்பிர் அவர் மேலும் ௯றியதாவது, புத்தளம் நகர சபைக்குற்பட்ட கடுமையங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது நேற்று முன்தினம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தனேசியாவுக்கு சென்று கடந்த 17 ஆம் திகதி புத்தளத்திற்கு வருகை தந்த குறித்த நபர், நேற்று முன்தினம் (27) மாலை சுகவீனமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்ட குறித்த நபர், கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனையை மேற்கொள்ள குருநாகல் வைத்தியசாலைக்கு அன்றைய தினமே மாற்றப்பட்டு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபருடைய குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவரோடு நெருங்கிப் பழகி, தொடர்பை பேணி வந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அடையாளம் காணும் நபர்களை புத்தளம் சாஹிரா கல்லூரியில் அமைக்கப்படவுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தங்க வைத்து கண்காணிக்கப்படவுள்ளனர்.
இலங்கை இராணுவத்தின் முழுமையான கண்காணிப்பில் புத்தளம் நகர சபை, புத்தளம் சுகாதார பிரிவு, புத்தளம் பொலிஸார் ஆகியோரின் ஒத்துழைப்பில் இந்த நிலையம் முன்னெடுத்துச் செல்லப்படவுள்ளது.
புத்தளம் மக்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று (28) மாலை மாவட்ட செயலர் தலைமையில் இடம்பெற்ற அவசர கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என்று ௯றினார்.
அத்துடன், புத்தளம் கடுமையங்குளம் பகுதியில் கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்ட நபரோடு பழகியவர்கள் , தொடர்பை பேணி வந்தவர்கள் உடனடியாக தமது பெயர்களை பதிவு செய்து தங்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறும் புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் கேட்டுள்ளார்.
இவ்வாறு முன்வராதவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் ௯றினார்.
இதேவேளை, புத்தளத்தில் கொரோனா தொற்றாளர் வசித்து வந்த கடுமையங்குளம் பகுதி தீவிர கண்காணிப்பு பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்த பகுதிக்குள் தேவையின்றி உள்நுழைவதும், வெளியேறுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனா வைரஸிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பு பெற தங்களது வீட்டுக்குள்ளேயே இருந்துகொள்ளுமாறும், சட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவித்தலையும் விடுத்துள்ளார்.
இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கான அவசர அறிவுறுத்தல்!!
5 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து நீடிக்கும் !!
ஊரடங்கு நேரத்தில் நடமாடிய குற்றச்சாட்டில் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் கைது!!
கொரோனா நோயால் உயிரிழந்தவரின் சடலம் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது!!
சென்னையில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!
உணவுப் பொருட்களை கொண்டுசெல்வதற்கு அனுமதி வழங்குமாறு பிரதமர் ஆலோசனை!!
புத்தளத்தில் கொரியப் பிரஜைகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!! (படங்கள்)
இந்தியாவில் 17 பேர் உயிரிழப்பு; 724 பேருக்கு கொரோனா தொற்று!!
கொரோனா தொற்றை கண்டுபிடிக்க 5 நிமிடங்கள் போதும்- புதிய கருவி!! (வீடியோ)
பாவனைக்கு உதவாத ரொட்டி மற்றும் பழுதடைந்த நிலையில் உணவுகள் மீட்பு!! (படங்கள்)
திருகோணேஸ்வர் ஆலயத்தில் கலசமுடைந்துள்ளது; செய்தியில் உண்மையில்லை.!!
அடி வேலைக்கு ஆகவே ஆகாது… தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்..!! (வீடியோ, படங்கள்)
ஊரடங்கு சட்டத்தை கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!!
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு !! (வீடியோ)
வவுனியாவில் 8 மணி நேரம் ஊரடங்கு தளர்வு !சில வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை!! (படங்கள்)