;
Athirady Tamil News

கனடாவிலிருந்து ஹேப்பி நியூஸ்.. கொரோனாவிலிருந்து குணமடைந்தார்.. பிரதமர் ஜஸ்டின் மனைவி!! (வீடியோ)

0

கனடா பிரதமர் ஜஸ்டினின் மனைவி சோபி கொரோனாவிலிருந்து பூரணமாக குணமடைந்தார்.

15 நாட்களாக கொரோனாவுக்காக சிகிச்சை எடுத்து வந்த சோபியின் உடல்நிலை நன்றாக உள்ளது என ஜஸ்டின் நேற்று கூறியிருந்த நிலையில் தற்போது அவர் முழுவதுமாக குணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அவருக்கு கொரோனா இல்லை என்பதை அவரது மருத்துவரும் ஒட்டாவா சுகாதாரத் துறையும் உறுதிப்படுத்தியுள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டினின் மனைவி சோபி இந்த மாத தொடக்கத்தில் பிரிட்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டு கனடா திரும்பினார். அவ்வாறு திரும்பிய நாள் முதல் அவருக்கு லேசான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டன.

இதையடுத்து மருத்துவரின் அறிவுரையின்படி அவருக்கு கொரோனா சோதனை எடுக்கப்பட்டது. அந்த முடிவுகள் வரும் வரை சோபி தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

இதையடுத்து சோபியின் கொரோனா பரிசோதனை முடிவுகள் கடந்த 12-ஆம் தேதி வந்தது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

இதுகுறித்து ஜஸ்டின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் துரதிருஷ்டவசமாக எனது மனைவி சோபிக்கு கொரோனா உள்ளது. அதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அவர் தன்னைத்தானே பார்த்துக் கொள்வார் என தெரிவித்தார்.

இதையடுத்து ஜஸ்டினுக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு அதில் அவருக்கு கொரோனா இல்லை என வந்தது.

இந்த நிலையில் அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக ஜஸ்டின் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில் சோபி கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சோபியும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு போட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில் நான் நன்றாக இருக்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த எனது நலவிரும்பிகளுக்கு இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

கனடாவில் 5,616 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 61 பேர் பலியாகி விட்டனர். 445 பேர் குணமடைந்து விட்டார்கள்.

கொரோனாவால் தனது மனைவி மருத்துவமனையில் இருந்த போதும் தனது நாட்டு மக்களுக்காக பொருளாதார ரீதியிலான அறிவிப்புகளை ஜஸ்டின் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







ராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி!! (வீடியோ)

தர்மசிறி ஜனானந்தவின் உடல் சர்வதேச சுகாதார விவரக்குறிப்புகளின் கீழ் தகனம்!! (படங்கள்)

கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் இறுதி கிரிகைகள் செய்யப்படும் முறை!!

புத்தளம் சாஹிரா கல்லூரி கொரோனா கண்காணிப்பு நிலையமாக தெரிவு!!

இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கான அவசர அறிவுறுத்தல்!!

அக்குரணை பகுதியில் ஒரு ஊர் முடக்கம்!!

5 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து நீடிக்கும் !!

ஊரடங்கு நேரத்தில் நடமாடிய குற்றச்சாட்டில் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் கைது!!

கொரோனா நோயால் உயிரிழந்தவரின் சடலம் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது!!

இலங்கையில் முதலாவது கொரோனா நோயாளி உயிரிழப்பு!!

சென்னையில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

உணவுப் பொருட்களை கொண்டுசெல்வதற்கு அனுமதி வழங்குமாறு பிரதமர் ஆலோசனை!!

நானே 2 வாரமா தனியாத்தான் இருக்கேன்.. கமல் கிளீன் ஸ்டேட்மென்ட்.. அந்த அட்ரஸில் மநீம ஆபீஸ்தான் இருக்கு!! (வீடியோ, படங்கள்)

9 நாட்களில் விமானப்படை கட்டிய விடுதி கையளிப்பு!! (படங்கள்)

புத்தளத்தில் கொரியப் பிரஜைகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!! (படங்கள்)

இந்தியாவில் 17 பேர் உயிரிழப்பு; 724 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா தொற்றை கண்டுபிடிக்க 5 நிமிடங்கள் போதும்- புதிய கருவி!! (வீடியோ)

வதந்தின்னாலும் ஒரு அளவு வேணாமா.. கொடூர கொரானாவுக்கு மஞ்சளும், வேப்பிலையும் மருந்தா? (வீடியோ, படங்கள்)

பாவனைக்கு உதவாத ரொட்டி மற்றும் பழுதடைந்த நிலையில் உணவுகள் மீட்பு!! (படங்கள்)

வடக்கு மாகாண கிளினிக் நோயாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்!!

திருகோணேஸ்வர் ஆலயத்தில் கலசமுடைந்துள்ளது; செய்தியில் உண்மையில்லை.!!

ஏப்ரல் 3 ஆம் திகதிவரை ஊரடங்கு தொடரும் நிலை!!

அடி வேலைக்கு ஆகவே ஆகாது… தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்..!! (வீடியோ, படங்கள்)

போலீஸ்காரரை சரமாரியாக தாக்கிய மக்கள்.. இவங்களுக்கெல்லாம் கொரோனா வரனும்.. கொதித்த பிரபல நடிகை! (வீடியோ, படங்கள்)

100 பேருக்கு ஆபத்து.. 23 பேருக்கு பாதிப்பு.. மரணமடைந்த 70 வயது தாத்தா மூலமாக பரவிய கொரோனா! (வீடியோ, படங்கள்)

உலகமே பாராட்டுன ரஷ்யாவுக்கும் இந்த நிலையா.. கொரோனா நோயாளிகள் கிடுகிடு உயர்வு.. ஷட் டவுன் ஆரம்பம் !! (வீடியோ, படங்கள்)

ஊரடங்கு சட்டத்தை கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு !! (வீடியோ)

வவுனியாவில் 8 மணி நேரம் ஊரடங்கு தளர்வு !சில வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + 17 =

*