;
Athirady Tamil News

கொரோனாவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 117ஆக அதிகரிப்பு!!

0

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இரண்டு பேர் கொழும்பு – அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் இன்று மாலை சேர்க்கப்பட்டுள்ளனர்.

சிலாபம் மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளிலிருந்து தலா ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு (ஐடிஎச்) மாற்றப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியோர் எண்ணிக்கை 117ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் முழுமையாகக் குணமடைந்த நிலையில் இன்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனா தொற்றுக்குள்ளாகிய 105 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய 117 பேர் இன்று வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் இன்று இரண்டு பேர் உள்பட 11 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் நேற்று சனிக்கிழமை உயிரிழந்தார்.
கொழும்பு மாவட்டத்தில் அதிகப்படியாக 29 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். களுத்துறையில் 17 பேர், புத்தளத்தில் 11 பேர், கம்பஹாவில் 10 பேர், இரத்தினபுரியில் 4 பேர், யாழ்ப்பாணம், குருணாகல், காலி, கேகாலை, மட்டக்களப்பு, பதுளை, மாத்தறை, கண்டி சிலாபம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருமாக 117 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளுடன் 117 பேர் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.அவர்களின் குருதி மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளன. அதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை எனக் கண்டறியப்பட்டால் வீடு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு புனாணை மற்றும் வெலிகந்தை தனிமைப்படுத்தல் நிலையங்களில் கண்காணிக்கப்பட்டு வந்த 77 பேரைக் கொண்ட குழுவின் இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இவர்கள் இத்தாலி மற்றும் தென்கொரியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள்.
இராணுவ மற்றும் தனியார் பேருந்துகளில் இவர்கள் காலி, மாத்தறை, கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றுவரையில் சுமார் ஆயிரத்து 500 பேர் தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பை நிறைவு செய்து வீடுதிரும்பியுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

குறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை!!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை சுகாதார அமைச்சு!!

ராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி!! (வீடியோ)

தர்மசிறி ஜனானந்தவின் உடல் சர்வதேச சுகாதார விவரக்குறிப்புகளின் கீழ் தகனம்!! (படங்கள்)

கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் இறுதி கிரிகைகள் செய்யப்படும் முறை!!

புத்தளம் சாஹிரா கல்லூரி கொரோனா கண்காணிப்பு நிலையமாக தெரிவு!!

இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கான அவசர அறிவுறுத்தல்!!

அக்குரணை பகுதியில் ஒரு ஊர் முடக்கம்!!

5 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து நீடிக்கும் !!

ஊரடங்கு நேரத்தில் நடமாடிய குற்றச்சாட்டில் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் கைது!!

கொரோனா நோயால் உயிரிழந்தவரின் சடலம் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது!!

இலங்கையில் முதலாவது கொரோனா நோயாளி உயிரிழப்பு!!

சென்னையில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

உணவுப் பொருட்களை கொண்டுசெல்வதற்கு அனுமதி வழங்குமாறு பிரதமர் ஆலோசனை!!

நானே 2 வாரமா தனியாத்தான் இருக்கேன்.. கமல் கிளீன் ஸ்டேட்மென்ட்.. அந்த அட்ரஸில் மநீம ஆபீஸ்தான் இருக்கு!! (வீடியோ, படங்கள்)

9 நாட்களில் விமானப்படை கட்டிய விடுதி கையளிப்பு!! (படங்கள்)

புத்தளத்தில் கொரியப் பிரஜைகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!! (படங்கள்)

இந்தியாவில் 17 பேர் உயிரிழப்பு; 724 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா தொற்றை கண்டுபிடிக்க 5 நிமிடங்கள் போதும்- புதிய கருவி!! (வீடியோ)

வதந்தின்னாலும் ஒரு அளவு வேணாமா.. கொடூர கொரானாவுக்கு மஞ்சளும், வேப்பிலையும் மருந்தா? (வீடியோ, படங்கள்)

பாவனைக்கு உதவாத ரொட்டி மற்றும் பழுதடைந்த நிலையில் உணவுகள் மீட்பு!! (படங்கள்)

வடக்கு மாகாண கிளினிக் நோயாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்!!

திருகோணேஸ்வர் ஆலயத்தில் கலசமுடைந்துள்ளது; செய்தியில் உண்மையில்லை.!!

ஏப்ரல் 3 ஆம் திகதிவரை ஊரடங்கு தொடரும் நிலை!!

அடி வேலைக்கு ஆகவே ஆகாது… தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்..!! (வீடியோ, படங்கள்)

போலீஸ்காரரை சரமாரியாக தாக்கிய மக்கள்.. இவங்களுக்கெல்லாம் கொரோனா வரனும்.. கொதித்த பிரபல நடிகை! (வீடியோ, படங்கள்)

100 பேருக்கு ஆபத்து.. 23 பேருக்கு பாதிப்பு.. மரணமடைந்த 70 வயது தாத்தா மூலமாக பரவிய கொரோனா! (வீடியோ, படங்கள்)

உலகமே பாராட்டுன ரஷ்யாவுக்கும் இந்த நிலையா.. கொரோனா நோயாளிகள் கிடுகிடு உயர்வு.. ஷட் டவுன் ஆரம்பம் !! (வீடியோ, படங்கள்)

ஊரடங்கு சட்டத்தை கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு !! (வீடியோ)

வவுனியாவில் 8 மணி நேரம் ஊரடங்கு தளர்வு !சில வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 2 =

*