;
Athirady Tamil News

45,792 பேர்.. சைலன்ட்டாக பரவிய கொரோனா.. இத்தாலியை நாசம் செய்தது இந்த ஒருநாள் தான்! (வீடியோ, படங்கள்)

0

கொரோனா வைரஸ் முதலில் காலடி எடுத்து வைத்த சீனாவைவிட இத்தாலியில் தான் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது.

மற்ற நாடுகளை விட இத்தாலியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவ காரணம் என்ன? இது குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. பிப்ரவரி 19 அன்று இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் தான் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி உள்ளது. அது இத்தாலி மட்டுமில்லாமல், ஸ்பெயினில் கொரோனா பரவவும் முக்கிய காரணமாக இருந்துள்ளது.

சாம்பியன்ஸ் லீக் எனும் ஐரோப்பிய கால்பந்து தொடரின் லீக் ஒன்று இத்தாலியில் பிப்ரவரி 19 அன்று நடைபெற்றது. இத்தாலியின் பெர்காமோ நகரை சேர்ந்த கால்பந்து கிளப் அணியான அட்லாண்டா அணி, ஸ்பெயினின் வாலென்சியா அணியை சந்தித்தது. அட்லாண்டா வரலாற்றில் பெரிய போட்டி அட்லாண்டா வரலாற்றில் பெரிய போட்டி இந்த போட்டி அட்லாண்டா அணியின் வரலாற்றில் மிகப் பெரிய போட்டியாகும். எனவே, இந்தப் போட்டியை நடத்த பெரிய மைதானம் பெர்காமோ நகரில் இல்லை என்பதால், அருகே இருந்த மிலன் நகரில் போட்டி நடைபெற்றது. ஸ்பெயின் மக்கள் ஸ்பெயின் மக்கள் வாலென்சியா அணி ரசிகர்கள் சுமார் 3000 பேரும் ஸ்பெயினில் இருந்து இந்தப் போட்டியைக் காண வந்திருந்தார்கள். பெர்காமோ நகரில் இருந்து 40,000 அட்லாண்டா அணி ரசிகர்கள் சுமார் 60 பேருந்துகளில் இந்த பெரிய போட்டியைக் காண திரண்டார்கள்.

யாருக்கும் விழிப்புணர்வு இல்லை போட்டியை நடத்திய நிர்வாகத்துக்கோ, பங்கேற்ற அணிகளுக்கோ, போட்டியை காண திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கோ சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் நம்மையும் தாக்கக் கூடும் என்ற விழிப்புணர்வு இல்லை. ஆனால், இவர்களில் யாரோ ஒருவருக்கோ, ஒரு சிலருக்கோ அந்த வைரஸ் பாதிப்பு இருந்துள்ளது. ரசிகர்கள் எண்ணிக்கை ரசிகர்கள் எண்ணிக்கை இந்த போட்டி நடந்த போது மைதானத்தில் 45,792 ரசிகர்கள் இருந்தனர். போட்டி சுவாரஸ்யமாக ஒருபுறம் நடக்க, மறுபுறம் அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் இடையே கொரோனா வைரஸ் பல்வேறு வழிகளில் பரவி உள்ளது. அப்போது அதை யாருமே உணரவில்லை.

இரு நாட்கள் கழித்து.. அந்தப் போட்டியில் அட்லாண்டா அணி 4 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டிக்கு பின் இரு நாட்களில் விபரீதம் லேசாக வெளியே தெரிந்தது. பெர்காமோ நகரில் இருந்து 60 கிலோமீட்டரில் உள்ள கொடோக்னோ நகரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அது தான் இந்த போட்டி மூலம் ஏற்பட்ட முதல் பாதிப்பு என கருதப்படுகிறது.

பெர்காமோ நிலை அதன் பின், லாம்பார்டி பகுதியிலும், குறிப்பாக பெர்காமோ நகரிலும் தான் கொரோனா வைரஸ் வேகமாக, அதிகமாக பரவியது. அவர்களில் சுமார் 6000 பேரை ஆய்வு செய்ததில், சுமார் 388 பேருக்கு பிப்ரவரி 19 அன்று கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. வாலென்சியாவிலும் பரவியது வாலென்சியாவிலும் பரவியது பிப்ரவரி 27 அன்று ஸ்பெயினின் வாலென்சியா நகரில் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. வாலென்சியா அணியில் மூன்றில் ஒரு பங்கு வீரர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது.

ஐந்து பேர் மரணம் மறுபுறம் அட்லாண்டா அணியில் இதுவரை ஐந்து முன்னாள் ஊழியர்கள் மரணம் அடைந்துள்ளனர். ஆனால், அந்த அணி ஒருவர் மட்டுமே மரணித்துள்ளதாக கூறி வருகிறது. அந்த அணியின் சில வீரர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது. இத்தாலி, ஸ்பெயின் மட்டுமல்ல.. இத்தாலி, ஸ்பெயின் மட்டுமல்ல.. இந்த ஒரு போட்டியால் இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் சில நாட்களில் மிக வேகமாக பரவியது. சீனாவில் கிட்டத்தட்ட கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி விட்ட நிலையில், இத்தாலி மற்றும் ஸ்பெயின் மூலம் உலகுக்கு கொரோனா வைரஸ் பரவி வந்தது.

தவறை உணர்ந்தார்களா? இன்று குறைந்தது இத்தாலியில் 92.000 பேரும், ஸ்பெயினில் 78,000 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரு நாடுகளில் மட்டும் 16,500 பேருக்கும் மேல் மரணம் அடைந்துள்ளனர். இந்த கொடிய நிகழ்வுக்கு தாங்கள் ஆடிய கால்பந்து போட்டி தான் காரணம் என்பதை அந்த அணிகள் உணர்ந்ததா? என்பது தான் தெரியவில்லை.

கொரோனா குறித்த இன்னும் ஒரு ஃபேக் நியூஸ்.. அது குறித்து நாஸ்டிரடாமஸ் கணிக்கலை.. நம்பாதீங்க! (வீடியோ, படங்கள்)

யாழ். பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ வைரஸ் அறிகுறிகள்!!

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 6850 பேர் இதுவரையில் கைது!!

இலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் முழுமையாக சேகரிப்பு!!

குறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை!!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை சுகாதார அமைச்சு!!

ராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி!! (வீடியோ)

தர்மசிறி ஜனானந்தவின் உடல் சர்வதேச சுகாதார விவரக்குறிப்புகளின் கீழ் தகனம்!! (படங்கள்)

கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் இறுதி கிரிகைகள் செய்யப்படும் முறை!!

புத்தளம் சாஹிரா கல்லூரி கொரோனா கண்காணிப்பு நிலையமாக தெரிவு!!

இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கான அவசர அறிவுறுத்தல்!!

அக்குரணை பகுதியில் ஒரு ஊர் முடக்கம்!!

5 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து நீடிக்கும் !!

ஊரடங்கு நேரத்தில் நடமாடிய குற்றச்சாட்டில் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் கைது!!

கொரோனா நோயால் உயிரிழந்தவரின் சடலம் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது!!

இலங்கையில் முதலாவது கொரோனா நோயாளி உயிரிழப்பு!!

சென்னையில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

உணவுப் பொருட்களை கொண்டுசெல்வதற்கு அனுமதி வழங்குமாறு பிரதமர் ஆலோசனை!!

நானே 2 வாரமா தனியாத்தான் இருக்கேன்.. கமல் கிளீன் ஸ்டேட்மென்ட்.. அந்த அட்ரஸில் மநீம ஆபீஸ்தான் இருக்கு!! (வீடியோ, படங்கள்)

9 நாட்களில் விமானப்படை கட்டிய விடுதி கையளிப்பு!! (படங்கள்)

புத்தளத்தில் கொரியப் பிரஜைகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!! (படங்கள்)

இந்தியாவில் 17 பேர் உயிரிழப்பு; 724 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா தொற்றை கண்டுபிடிக்க 5 நிமிடங்கள் போதும்- புதிய கருவி!! (வீடியோ)

வதந்தின்னாலும் ஒரு அளவு வேணாமா.. கொடூர கொரானாவுக்கு மஞ்சளும், வேப்பிலையும் மருந்தா? (வீடியோ, படங்கள்)

பாவனைக்கு உதவாத ரொட்டி மற்றும் பழுதடைந்த நிலையில் உணவுகள் மீட்பு!! (படங்கள்)

வடக்கு மாகாண கிளினிக் நோயாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்!!

திருகோணேஸ்வர் ஆலயத்தில் கலசமுடைந்துள்ளது; செய்தியில் உண்மையில்லை.!!

ஏப்ரல் 3 ஆம் திகதிவரை ஊரடங்கு தொடரும் நிலை!!

அடி வேலைக்கு ஆகவே ஆகாது… தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்..!! (வீடியோ, படங்கள்)

போலீஸ்காரரை சரமாரியாக தாக்கிய மக்கள்.. இவங்களுக்கெல்லாம் கொரோனா வரனும்.. கொதித்த பிரபல நடிகை! (வீடியோ, படங்கள்)

100 பேருக்கு ஆபத்து.. 23 பேருக்கு பாதிப்பு.. மரணமடைந்த 70 வயது தாத்தா மூலமாக பரவிய கொரோனா! (வீடியோ, படங்கள்)

உலகமே பாராட்டுன ரஷ்யாவுக்கும் இந்த நிலையா.. கொரோனா நோயாளிகள் கிடுகிடு உயர்வு.. ஷட் டவுன் ஆரம்பம் !! (வீடியோ, படங்கள்)

ஊரடங்கு சட்டத்தை கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு !! (வீடியோ)

வவுனியாவில் 8 மணி நேரம் ஊரடங்கு தளர்வு !சில வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 3 =

*