யாழ் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று என்ற சந்தேகத்தில் 7 பேர்!!

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 7 பேர் யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரிகள் கேரிக்கப்பட்டு அனுராதபுரம் வைத்திய சாலையில் உள்ள கொரோனா பரிசோதணைக் கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவச் சிப்பாய் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
மேலும் நேற்று திங்கட்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தாவடிப் பகுதியினைச் சேர்ந்தவரின் வீட்டிற்கு 300 மீற்றர் தூரத்தில் உள்ள வீட்டில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் குறித்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.
நெடுந்தீவிற்கு வெளிநாட்டவர் ஒருவருடன் சென்று வந்த ஆணைக்கோட்டைப் பகுதியினைச் சேர்ந்த நபர் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான சந்தேகத்துடன் வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
மேலும் உரும்பிராய் பகுதியினைச் சேர்ந்த பழ வியாபாரி ஒருவரும், மன்னார் மாவட்டத்தில் இருந்து இருவரும் நேற்று மாலை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த 7 பேரும் வைத்திய சாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அனுராதபுலம் வைத்திய சாலையில் உள்ள கொரோனா வைரஸ் பரிசோதணைக் கூட்த்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குறித்த பரிசோதனைக்காக முடிவுகள் இன்று (நேற்று) இரவு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”
யாழ். பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ வைரஸ் அறிகுறிகள்!!
இலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் முழுமையாக சேகரிப்பு!!
குறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை!!
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை சுகாதார அமைச்சு!!
ராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி!! (வீடியோ)
தர்மசிறி ஜனானந்தவின் உடல் சர்வதேச சுகாதார விவரக்குறிப்புகளின் கீழ் தகனம்!! (படங்கள்)
கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் இறுதி கிரிகைகள் செய்யப்படும் முறை!!
புத்தளம் சாஹிரா கல்லூரி கொரோனா கண்காணிப்பு நிலையமாக தெரிவு!!
இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கான அவசர அறிவுறுத்தல்!!
5 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து நீடிக்கும் !!
ஊரடங்கு நேரத்தில் நடமாடிய குற்றச்சாட்டில் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் கைது!!
கொரோனா நோயால் உயிரிழந்தவரின் சடலம் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது!!
சென்னையில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!
உணவுப் பொருட்களை கொண்டுசெல்வதற்கு அனுமதி வழங்குமாறு பிரதமர் ஆலோசனை!!
புத்தளத்தில் கொரியப் பிரஜைகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!! (படங்கள்)
இந்தியாவில் 17 பேர் உயிரிழப்பு; 724 பேருக்கு கொரோனா தொற்று!!
கொரோனா தொற்றை கண்டுபிடிக்க 5 நிமிடங்கள் போதும்- புதிய கருவி!! (வீடியோ)
பாவனைக்கு உதவாத ரொட்டி மற்றும் பழுதடைந்த நிலையில் உணவுகள் மீட்பு!! (படங்கள்)
திருகோணேஸ்வர் ஆலயத்தில் கலசமுடைந்துள்ளது; செய்தியில் உண்மையில்லை.!!
அடி வேலைக்கு ஆகவே ஆகாது… தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்..!! (வீடியோ, படங்கள்)
ஊரடங்கு சட்டத்தை கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!!
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு !! (வீடியோ)
வவுனியாவில் 8 மணி நேரம் ஊரடங்கு தளர்வு !சில வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை!! (படங்கள்)