;
Athirady Tamil News

கொரோனா பாதிக்கப்பட்ட நபரின் வீட்டில் கைவரிசை காட்டிய திருடர்கள்..!!!

0

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 250-ஐ கடந்துள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் 48 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. அவர்களில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து 2 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கிடையில், காஷ்மீரின் பன்டிபுரா மாவட்டம் ஹிஜின் நகரின் சதர்கோட் பாலா பகுதியை சேர்ந்த நபர் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த நபரது குடும்பத்தினருக்கும் வைரஸ் பரவியிருக்கலாம் என அச்சம் எழுந்ததால் அவர்களும் தனிமைபடுத்தல் மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட நபர் குடும்பத்தினருடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையறிந்த திருடர்கள் நேற்று நள்ளிரவு அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள், பணம் என அனைத்தையும் கொள்ளையடித்து அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இந்த திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொரோனா பாதிக்கப்பட்ட நபர் குடும்பத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி திருடர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + nineteen =

*