;
Athirady Tamil News

பிரதமர் நிவாரண நிதிக்கு ரிலையன்ஸ் சார்பில் ரூ.500 கோடி நிதியுதவி..!!

0

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை 251 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கை பின்பற்றி பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே, கொரோனா தடுப்பு பணிக்கு மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அரசுக்கு வழங்கலாம் என்று பிரதமர் மோடி சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து, முக்கிய பிரமுகர்கள் பலர் மத்திய, மாநில அரசுகளின் நிவாரண நிதிக்கு நிதியுதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் பிரதமரின் நிவாரண நிதி கணக்கிற்கு 500 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − ten =

*