;
Athirady Tamil News

கொரோனா நோயாளியின் சடலம் எரிக்கப்பட்டமைக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம்!!

0

இலங்கையில் கொரோனா (COVID-19) தொற்று காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபரின் சடலம் இஸ்லாமிய சமய வரையறைகளுக்கு முரணான வகையில் எரிக்கப்பட்டது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தமது பலத்த கண்டனத்தை வெளியிட்டுள்ளர்.

அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நீர்கொழும்பு, கொச்சிக்கடை பலகத்துறை பிரதேசத்தில் வசித்து வந்த முஹம்மத் ஜமால் COVID-19 தொற்று காரணமாக உயிரிழந்த பின்னர், இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு அமைவாக அவரது சடலம் நல்லடக்கம் செய்யப்பட அனுமதிக்கப்படாமை துரதிர்ஷ்டவசமானதும் வருத்தத்தக்கதுமாகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

குறுகிய நேரத்துக்குள் அரசாங்க மற்றும் மருத்துவ துறையினருடன் தொடர்புகொண்டு சடலம் எரியூட்டப்படுவதை தடுப்பதற்கு அவசரம் அவசரமாக மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

பாரியளவில் வியாபித்து பரவிவரும் தொற்றுநோய் என்றாலும், சமய உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மேற்படி சடலம் நல்லடக்கடம் செய்யப்பட வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தில் பதவிவகிக்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் டொக்டர் சுஹைல் மற்றும் எமது கட்சியின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா போன்றோர் நடுநிசிவரை முயற்சித்துள்ளனர்.

நல்லடக்கம் செய்வதுபற்றி எடுத்துக்கூறப்பட்ட போதிலும், நீர்கொழும்பு பிரதேசத்தில் பத்து அடி ஆழத்தில் குழி தோண்ட வேண்டியுள்ளதால் அங்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்வாக இருப்பதனால், தண்ணீர் கசிவு அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து கொழும்பு, மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், மாவட்டத்துக்கு வெளியில் சடலத்தை கொண்டு செல்வதற்கு சட்ட மருத்து அதிகாரியினால் அனுமதி வழங்கப்படவில்லை. மரணத்துக்கான காரணம் கண்டறியப்பட்டிருந்த நிலையில் நீதவானின் விசாரணைகூட ஒரு பொருட்டாக இருந்திருக்க மாட்டாது.

குடும்பத்தவர்களின் உணர்வுகளையும், வேண்டுகோளையும் கருத்திற்கொள்ளாது சடலத்தை எரிப்பதில் அவசரம் காட்டப்பட்டுள்ளது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எமது நிலைப்பாட்டுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக அறிகிறோம். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கும், சட்ட மருத்துவ அதிகாரிகளுக்கும் இடையில் இது சம்பந்தமான கூட்டத்தில் உரிய சுற்றறிக்கையை மீளாய்வு செய்வதுபற்றி ஆராயப்பட்டு வருவதாகவும் அறிகிறோம்.

எங்களது சமயரீதியான உரிமையை நாங்கள் வலியுறுத்தும் அதேவேளையில், தற்போதுள்ள அசாதாரண சுழ்நிலையில் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு நிலைமையை மேலும் சிக்கலாக்காமல், யதார்த்தபூர்வமான நடைமுறைச் சாத்தியமுள்ள தீர்க்கமான முடிவை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இதுதொடர்பில் “COVID-19 தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை அகற்றுதல் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்” என்ற தலைப்பிலான நீதியரசர் சலீம் மர்ஸுபின் ஆய்வறிக்கையை வாசித்தால் இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளின்போது கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து தெளிவாக புரிந்துகொள்ளலாம்.

டிக்கோயா பகுதியில் 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் இன்று தனிமை!! (படங்கள்)

என்ன ஆனார் கைலாசா “பிரதமர்” நித்தியானந்தா.. கொரோனாவில் சிக்கினாரா?.. நோ சவுண்டு..!! (வீடியோ, படங்கள்)

கொரோனாவால் நிலைகுலைந்த அமெரிக்கா… கோவத்தில் டிரம்ப் செய்த காரியம்… இப்போதான் வேகம் எடுக்குது…!! (வீடியோ, படங்கள்)

ரண கொரோனாவிலும் கிளுகிளுப்பா.. கொரோனா வார்டிலிருந்து பெண் டிக்டாக்.. ரசித்த 3 ஊழியர்கள் டிஸ்மிஸ்!! (வீடியோ, படங்கள்)

வவுனியா இருந்து 310 விமான பயணிகள் விடுவிப்பு!! (படங்கள்)

கொரோனா தொற்று காரணமாக களுபோவில வைத்தியசாலையின் ஒரு வாட்டிற்கு பூட்டு!!

இரண்டாவது கோரோனா நோயாளி உயிரிழப்பு – சுகாதார அமைச்சு!!

யாழ் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று என்ற சந்தேகத்தில் 7 பேர்!!

கொரோனா குறித்த இன்னும் ஒரு ஃபேக் நியூஸ்.. அது குறித்து நாஸ்டிரடாமஸ் கணிக்கலை.. நம்பாதீங்க! (வீடியோ, படங்கள்)

யாழ். பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ வைரஸ் அறிகுறிகள்!!

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 6850 பேர் இதுவரையில் கைது!!

இலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் முழுமையாக சேகரிப்பு!!

குறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை!!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை சுகாதார அமைச்சு!!

ராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி!! (வீடியோ)

தர்மசிறி ஜனானந்தவின் உடல் சர்வதேச சுகாதார விவரக்குறிப்புகளின் கீழ் தகனம்!! (படங்கள்)

கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் இறுதி கிரிகைகள் செய்யப்படும் முறை!!

புத்தளம் சாஹிரா கல்லூரி கொரோனா கண்காணிப்பு நிலையமாக தெரிவு!!

இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கான அவசர அறிவுறுத்தல்!!

அக்குரணை பகுதியில் ஒரு ஊர் முடக்கம்!!

5 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து நீடிக்கும் !!

ஊரடங்கு நேரத்தில் நடமாடிய குற்றச்சாட்டில் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் கைது!!

கொரோனா நோயால் உயிரிழந்தவரின் சடலம் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது!!

இலங்கையில் முதலாவது கொரோனா நோயாளி உயிரிழப்பு!!

சென்னையில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

உணவுப் பொருட்களை கொண்டுசெல்வதற்கு அனுமதி வழங்குமாறு பிரதமர் ஆலோசனை!!

நானே 2 வாரமா தனியாத்தான் இருக்கேன்.. கமல் கிளீன் ஸ்டேட்மென்ட்.. அந்த அட்ரஸில் மநீம ஆபீஸ்தான் இருக்கு!! (வீடியோ, படங்கள்)

9 நாட்களில் விமானப்படை கட்டிய விடுதி கையளிப்பு!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × one =

*