கொரோனா தொற்றாளிகள் பயணித்ததாக கூறப்படும் வேனுக்கு இனந்தெரியாதோர் தீவைப்பு!!

அக்குறணை பிரதேசத்தில் அண்மையில் இனம்காணப்பட்ட கொரோனா தொற்றாளர் பயணித்ததாக நம்பப்படும் வேன் ஒன்றை கம்பளை பொலிஸார் இனம்கண்டுள்ளனர். இந்த நிலையில் குறித்த வேன் தொற்று நீக்கம் செய்யப்படாமையினால் பிரதேசவாசிகள் அச்சமடைந்தனர்.பின்னர் குறித்த வேன் இனம் தெரியாத நபர்களினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, புஸல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்குச் சொந்தமான குறித்த வேனை ராகலை பகுதியைச் சேர்ந்த சாரதி ஒருவர் நீர் கொழும்பு பிரதேசத்தில் வாடகை அடிப்படையில் செலுத்தி வந்ததாகவும் இந்நிலையிலேயே கடந்த 15 ஆம் திகதி குறித்த வேனில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் கட்டுநாயக்காவில் இருந்து அக்குறணை பகுதிக்கு பயணித்ததாக தெரியவந்துள்ளது
இந்த நிலையில், கம்பளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உளவுப் பிரிவு பொலிஸார் கம்பளை சிங்ஹாப்பிட்டிய பகுதியில் வாகனம் பழுது பார்க்கும் இடம் ஒன்றில் நிறுத்தி வைத்திருந்த நிலையில் குறித்த வேனை நேற்று (31) கண்டுபிடித்துள்ளனர்.
இதேவேளை, கண்டுபிடிக்கப்பட்ட வேனில் கொரோனா நோயாளி பயணித்து 14 நாட்களுக்கு மேல் கடந்துள்ளமையால் அதில் தொற்று நீக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லையென உடபளாத்த பிரதேசத்துக்குப் பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி பொலிஸாரிடம் தெரிவித்ததாக தெரிய வருகிறது.
இந்நிலையில், நேற்று (31) இரவு 10 மணியளவில் குறித்த. வேன் இனம் தெரியாத நபர்களால் தீ மூட்டி எரிக்கப்பட்டுள்ளது இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”
கொரோனாவை வைத்து எவரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை!!
கொரோனா மிக வேகமாக பரவும்!! -இலங்கை மக்களை எச்சரிக்கும் W.H.O..!!
மேலும் 10 பேருக்கு கொரோனா – கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 142!!
கொரோனா நோயாளியின் சடலம் எரிக்கப்பட்டமைக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம்!!
டிக்கோயா பகுதியில் 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் இன்று தனிமை!! (படங்கள்)
கொரோனா தொற்று காரணமாக களுபோவில வைத்தியசாலையின் ஒரு வாட்டிற்கு பூட்டு!!
யாழ் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று என்ற சந்தேகத்தில் 7 பேர்!!
யாழ். பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ வைரஸ் அறிகுறிகள்!!
இலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் முழுமையாக சேகரிப்பு!!
குறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை!!
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை சுகாதார அமைச்சு!!
ராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி!! (வீடியோ)
தர்மசிறி ஜனானந்தவின் உடல் சர்வதேச சுகாதார விவரக்குறிப்புகளின் கீழ் தகனம்!! (படங்கள்)
கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் இறுதி கிரிகைகள் செய்யப்படும் முறை!!
புத்தளம் சாஹிரா கல்லூரி கொரோனா கண்காணிப்பு நிலையமாக தெரிவு!!
இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கான அவசர அறிவுறுத்தல்!!