;
Athirady Tamil News

எதிர்ப்பு அறிக்கை… மன்னிப்பு கோர மறுத்த கே.பி.ராமலிங்கம்… கட்சியை விட்டு கட்டம் கட்டிய ஸ்டாலின்!! (படங்கள்)

0

திமுகவிலிருந்து அக்கட்சியின் முன்னாள் விவசாய அணி செயலாளரான கே.பி.ராமலிங்கம் அதிரடியாக இன்று நீக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் கே.பி.ராமலிங்கம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விவாதிக்க காணொலி மூலம் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில், அதற்கு எதிரான நிலைப்பாட்டை ராமலிங்கம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

வாரியத் தலைவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கே.பி.ராமலிங்கம் திமுகவில் விவசாய அணி மாநிலச் செயலாளராக இருந்தவர். கடந்த 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் தென்னை விவசாயிகள் நல வாரியத் தலைவராகவும், திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். தொடக்கம் முதலே மு.க.அழகிரியின் ஆதரவாளராக இருந்து வந்த ராமலிங்கம், அழகிரி மீதான கட்சி நடவடிக்கைகளுக்கு பிறகு சற்று அடங்கி ஒடுங்கி நடக்கத் தொடங்கினார். அதற்கு முன்னர் வரை ஆரவாரமாக அழகிரி புராணத்தை பாடி அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்துவார். இவரிடம் இருந்த கட்சிப் பதவியை இரண்டு நாட்களுக்கு முன்பு பறித்த ஸ்டாலின், இன்று கட்சியை விட்டே அதிரடியாக நீக்கிவிட்டார்.

நியாயம் மு.க.அழகிரியை திமுகவில் இருந்து நீக்கியவுடன் அவருக்காக கருணாநிதியிடம் பரிந்து பேசச் சென்று வாங்கிக் கட்டிக்கொண்டு வெளியே வந்தவர் கே.பி.ராமலிங்கம். ஆரம்பத்தில் மு.க.ஸ்டாலினுடன் கருத்து வேறுபாட்டுடன் இருந்த இவர், கால ஒட்டத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றி ஒத்த கருத்துடைய கட்சி நீரோட்டத்தில் ஐக்கியமானார். இந்நிலையில் அவரது நடவடிக்கைகளில் மீண்டும் மாற்றம் தென்படத் தொடங்கியது. காரணம் மீண்டும் மாநிலங்களவை சீட் எதிர்பார்த்த ராமலிங்கத்துக்கு ஸ்டாலின் சீட் கொடுக்காததால் மீண்டும் முரண்டு பிடிக்கத் தொடங்கினார் ராமலிங்கம்.

எதிர்ப்பு அறிக்கை இந்நிலையில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விரிவாக விவாதிக்க காணொலி மூலம் அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அதன் தோழமைக் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லாதது என்றும், முதல்வர் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தக் கூடாது எனவும் தெரிவித்திருந்தார் கே.பி.ராமலிங்கம்.

பதவி பறிப்பு இதனால் கோபம் அடைந்த ஸ்டாலின் ராமலிங்கம் தொடர்பாக துரைமுருகன், டி,ஆர். பாலு ஆகியோரிடம் ஆலோசனை செய்து முதற்கட்டமாக கட்சிப் பதவியை மட்டும் இரண்டு நாட்களுக்கு முன்பு பறித்தார். ஆனாலும் ராமலிங்கம் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரமாட்டேன் என்றதாலும் தொடர்ந்து தலைமைக்கு எதிராக கருத்துக் கூறத் தொடங்கியதாலும் கட்சியை விட்டே நீக்கி இன்று ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார் ஸ்டாலின். அன்பழகன் மறைவுக்கு பிறகு ஸ்டாலின் தனது பெயரிலேயே எடுத்துள்ள முதல் நடவடிக்கை இதுவாகும்.

ஊரடங்கு தளர்த்தப்படும் போது அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது !!

தெஹிவளையில் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி!!

யாழ்.மக்களிடத்தில் சுகாதார அமைச்சர் விடுக்கும் முக்கிய கோரிக்கை!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு !!

யாழில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு!!

மலேசியாவிலிருந்து வந்தவருக்கு கொரோனோ; விமானத்தில் வந்தோரை பதிவு செய்யக் கோரல்!!

கொழும்பில் விசேட சோதனை நடவடிக்கை – 16 வீதித்தடைகள்!!

கொரோனாவை வைத்து எவரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை!!

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல் !!

கொரோனா மிக வேகமாக பரவும்!! -இலங்கை மக்களை எச்சரிக்கும் W.H.O..!!

மேலும் 10 பேருக்கு கொரோனா – கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 142!!

கொரோனா நோயாளியின் சடலம் எரிக்கப்பட்டமைக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம்!!

டிக்கோயா பகுதியில் 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் இன்று தனிமை!! (படங்கள்)

என்ன ஆனார் கைலாசா “பிரதமர்” நித்தியானந்தா.. கொரோனாவில் சிக்கினாரா?.. நோ சவுண்டு..!! (வீடியோ, படங்கள்)

கொரோனாவால் நிலைகுலைந்த அமெரிக்கா… கோவத்தில் டிரம்ப் செய்த காரியம்… இப்போதான் வேகம் எடுக்குது…!! (வீடியோ, படங்கள்)

ரண கொரோனாவிலும் கிளுகிளுப்பா.. கொரோனா வார்டிலிருந்து பெண் டிக்டாக்.. ரசித்த 3 ஊழியர்கள் டிஸ்மிஸ்!! (வீடியோ, படங்கள்)

வவுனியா இருந்து 310 விமான பயணிகள் விடுவிப்பு!! (படங்கள்)

கொரோனா தொற்று காரணமாக களுபோவில வைத்தியசாலையின் ஒரு வாட்டிற்கு பூட்டு!!

இரண்டாவது கோரோனா நோயாளி உயிரிழப்பு – சுகாதார அமைச்சு!!

யாழ் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று என்ற சந்தேகத்தில் 7 பேர்!!

கொரோனா குறித்த இன்னும் ஒரு ஃபேக் நியூஸ்.. அது குறித்து நாஸ்டிரடாமஸ் கணிக்கலை.. நம்பாதீங்க! (வீடியோ, படங்கள்)

யாழ். பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ வைரஸ் அறிகுறிகள்!!

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 6850 பேர் இதுவரையில் கைது!!

இலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் முழுமையாக சேகரிப்பு!!

குறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை!!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை சுகாதார அமைச்சு!!

ராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி!! (வீடியோ)

தர்மசிறி ஜனானந்தவின் உடல் சர்வதேச சுகாதார விவரக்குறிப்புகளின் கீழ் தகனம்!! (படங்கள்)

கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் இறுதி கிரிகைகள் செய்யப்படும் முறை!!

புத்தளம் சாஹிரா கல்லூரி கொரோனா கண்காணிப்பு நிலையமாக தெரிவு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + 4 =

*