யாழில் விவசாயிகளுக்கு பாஸ் வழங்குவதில் பாகுபாடு!!

யாழில் விவசாயிகளுக்கு பாஸ் வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுவதாக கவலை தெரித்துள்ள விவசாயிகள் அனைவருக்கும சமமான முறையில் பாஸ் வழங்கி தமது தொழில் செய்ய ஆவண செய்யுமாறு கோரியுள்ளனர்.
ஊரடங்கு நேரத்தில் விவசாயிகள் தமது உற்பத்திப் பொருள்களை கொண்டு செல்வதற்கும் விவசாய காணிகளுக்கு செல்வதற்கு பாஸ் தேவைப்படுகிறது.
அதனால் பிரதேச செயலகத்தில் பாஸ் பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து கொடுத்தால் அசமந்தப் போக்காக அதனை வாங்கி வைத்துவிட்டு பிரதேச செயலர்கள் திருப்பி அனுப்புவதாக விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலும் தமக்கு தெரிந்தவர்களுக்கு பாஸ் வழங்குவதாகவும் தெரியாதவர்களை கண்டுகொள்வதில்லை என்றும் இதனால் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்த முடியாத சூழல் ஏற்படுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
குறி;ப்பாக கோப்பாய் பிரதேச விவசாயிகளுக்கு இந்தப் பாகுபாடு பெரிதும் காட்டப்பட்டு வருவதாக தெரிவிக்ப்படுகிறது. அதாவது விவசாய பாரம்பரியத் தொழிலாக விளங்கிய இப் பிரதேசம் இன்று விவசாயம் செய்வோர் குறைந்து வரும் நிலையில் இப்படியான செயற்பாடுகளால் மேலும் விவசாயம் பின்நோக்கிச் செல்லும் என்பதில் ஐயப்பாடு இல்லை என்று விவசாயிகள் ஆரூடம் தெரிவிக்கின்றனர்.
விவாயிகளுக்கு பாஸ் வழங்குவதில் பாகுபாடு பார்ப்பதால் தான் உற்பத்திப் பொருள்களின் விலைகளும் அதிகரிக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தில் அக்கறை எடுத்து விவசாயிகள் தமது தொழிலை தடையின்றிச் செய்ய ஆவண செய்யுமாறு கேட்டு நிற்கின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”
மருதானை பொலிஸ் பிரிவு உட்பட்ட இமாமுல் அரூஸ் மாவத்தை முற்றாக முடக்கம்!! (படங்கள்)
கொவிட் 19 தொற்றாளரைக் காப்பாற்ற இலங்கை வைத்தியரால் புதிய கருவி கண்டுபிடிப்பு!!
கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 150 ஆக அதிகரிப்பு!!
ஊரடங்கு தளர்த்தப்படும் போது அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது !!
யாழ்.மக்களிடத்தில் சுகாதார அமைச்சர் விடுக்கும் முக்கிய கோரிக்கை!!
யாழில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு!!
மலேசியாவிலிருந்து வந்தவருக்கு கொரோனோ; விமானத்தில் வந்தோரை பதிவு செய்யக் கோரல்!!
கொரோனாவை வைத்து எவரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை!!
கொரோனா மிக வேகமாக பரவும்!! -இலங்கை மக்களை எச்சரிக்கும் W.H.O..!!
மேலும் 10 பேருக்கு கொரோனா – கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 142!!
கொரோனா நோயாளியின் சடலம் எரிக்கப்பட்டமைக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம்!!
டிக்கோயா பகுதியில் 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் இன்று தனிமை!! (படங்கள்)
கொரோனா தொற்று காரணமாக களுபோவில வைத்தியசாலையின் ஒரு வாட்டிற்கு பூட்டு!!
யாழ் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று என்ற சந்தேகத்தில் 7 பேர்!!
யாழ். பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ வைரஸ் அறிகுறிகள்!!
இலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் முழுமையாக சேகரிப்பு!!
குறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை!!
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை சுகாதார அமைச்சு!!
ராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி!! (வீடியோ)
தர்மசிறி ஜனானந்தவின் உடல் சர்வதேச சுகாதார விவரக்குறிப்புகளின் கீழ் தகனம்!! (படங்கள்)
கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் இறுதி கிரிகைகள் செய்யப்படும் முறை!!
புத்தளம் சாஹிரா கல்லூரி கொரோனா கண்காணிப்பு நிலையமாக தெரிவு!!