;
Athirady Tamil News

கொரோனாவால் தவிக்கும் மக்களுக்காக உழைக்கவும் வேண்டும்…மகனையும் காப்பாற்றவேண்டும்… செவிலியர் செய்த தியாக செயல்..!!

0

ஒரு செவிலியராக மக்கட்பணியாற்றவும் வேண்டும், கொரோனா தொற்றிலிருந்து மகனை காப்பாற்றவும் வேண்டும், என்ன செய்வதென்று யோசித்த ஒரு தாய், தன் மகனை கிராமத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு பணியைத் தொடர முடிவு செய்துள்ளார்.

பிரித்தானிய அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றுபவர் Myka Alex (31). அவரது மகன் Kade (10) ஆஸ்துமா பிரச்சினையால் அவதியுற்று வருகிறான்.

தான் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கவேண்டிய நிலையிலிருப்பதால், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போது கூடவே கொரோனாவைக் கொண்டுவந்து மகனுக்கு பரப்பிவிடும் அபாயம் உள்ளதை நன்கறிவார் Myka.

மகனையும் பாதுகாக்கவேண்டும், கொரோனா நோயாளிகளுக்காகவும் உழைக்கவேண்டும். என்ன செய்வதென்று யோசித்த Myka, மகனை கிராமத்திலிருக்கும் தன்னுடைய தந்தை வீட்டுக்கு கொண்டு விட்டு வந்துவிட்டார்

ஏற்கனவே உடல் நலம் குன்றி தாயின் அரவணைப்பில் இருந்த மகனை தன் தந்தை வீட்டில் விட்டு திரும்பும்போது கண்ணீர் விட்டுக் கதறியிருக்கிறார்கள் இருவரும்.

என் இதயமே நொறுங்கிப்போனது போல் உணர்ந்தேன் என்று கூறும் Myka, ஒரு கட்டத்தில், இப்படி ஒரு சூழலை உருவாக்கிவிட்ட ஒரு வேலையை நான் ஏன் தேர்ந்தெடுத்தேன் என்று கூட தோன்றியது என்கிறார் Myka

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − eight =

*