மதுரை மகபூப்பாளையத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற 6 பேருக்கு கொரோனா அறிகுறி..!!!

மதுரையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 54 வயது நபர் உயிரிழந்தார். அவர் தொடர்புடைய 180 பேரை கண்டறிந்து அவர்களை சுகாதாரத் துறையினர் வீட்டில் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொரானாவால் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் 2 மகன்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும் மதுரையை சேர்ந்த 9 பேருக்கு ஒரே நாளில் தொற்று உறுதியானதால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
மதுரை மகபூப்பாளையத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தொடர் போராட்டம் நடந்தது. இதில் பலர் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்ற மகபூப்பாளையம் அன்சாரி நகரைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி ஏற்பட்டுள்ளது.
அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.