இறுதி சடங்கிற்கு ஒன்றுகூடும் மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

கொவிட் 19 வைரசு தொற்றினால் உயிரிழந்தால் அந்த நபரின் இறுதி சடங்கிற்காக சடலத்தை எடுத்து செல்லும் பிரதேசங்களுக்கு பொதுமக்கள் ஒன்றுகூவார்களாயின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண தெரிவித்தார்.
கொவிட் 19 பரவுவதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கொவிட் 19 வைரசு காரணமான நோயாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சை செய்யும் விடயம் தெரிய வந்துள்ளது.
அவசர நோய் நிலமை ஏற்பட்டால் எத்தகைய வாகனங்களிலும் செல்ல முடியும். இதற்கு ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பொலிஸாரினால் வழங்கப்படும் ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதுடன் இது தொடர்பாக புலனாய்வு பிரிவை பயன்படுத்தி விசாரணை மேற்கொள்ளப்படும். இதே போன்று அவசரகால அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்வதற்காக போலி ஆவணம் சமர்ப்பிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளபடும் என்று கூறினார்.
பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண மேலும் தெரிவிக்கையில் ,ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் கைது செய்யப்பட்ட பெரும் எண்ணிக்கையானோர் என்ற ரீதியில் அதாவது நேற்று காலை 06.00 நிறைவடைந்த 24 மணிக்காலப்பகுதியில் 1017 சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டமையை குறிப்பிடலாம். இவர்களை பிணையில் விடுவிக்காது இவர்களது வாகனங்கள் தொற்று நோய் தடுப்பு சட்டம் மற்றும் சரத்துக்களுக்கு அமைவாக தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும்.
இதேபோன்று கொவிட் வைரசு தொற்றினால் யாராவது உயிரிழந்தால் அந்த நபரின் இறுதி சடங்கிற்காக சடலத்தை எடுத்து செல்லும் பிரதேசங்களுக்கு பொதுமக்கள் ஒன்றுகூடுவதாக தெரியவந்துள்ளதுடன் இதற்கு பின்னர் மக்கள் ஒன்றுகூடுவார்களாயின் அவர்களுக்கு எதிராக தொற்று நோய் தடுப்பு சட்டத்தைப் போன்றே இலங்கையில் உள்ள சட்ட விதிகளுக்கு அமைவாக தண்டணை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இருப்பினும் ஓய்வூதிய சம்பளத்தை பெற்றுக்கொள்வதற்காக செல்வோருக்கு அவசரகால சட்ட அனுமதி பத்திரத்திற்கு பதிலாக அவர்களது அடையாள அட்டை பயன்படுத்த முடியும். இதே போன்று இவர்களுக்கு தேவைவாயன மருந்தை பெற்றுக்கொள்வதற்கு இன்று மருந்தகங்களை திறப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
ஆஹா.. குட் நியூஸ்.. கொரோனாவுக்கு காசநோய் தடுப்பூசி.. மகிழ்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!! (படங்கள்)
மருதானை பொலிஸ் பிரிவு உட்பட்ட இமாமுல் அரூஸ் மாவத்தை முற்றாக முடக்கம்!! (படங்கள்)
கொவிட் 19 தொற்றாளரைக் காப்பாற்ற இலங்கை வைத்தியரால் புதிய கருவி கண்டுபிடிப்பு!!
கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 150 ஆக அதிகரிப்பு!!
ஊரடங்கு தளர்த்தப்படும் போது அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது !!
யாழ்.மக்களிடத்தில் சுகாதார அமைச்சர் விடுக்கும் முக்கிய கோரிக்கை!!
யாழில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு!!
மலேசியாவிலிருந்து வந்தவருக்கு கொரோனோ; விமானத்தில் வந்தோரை பதிவு செய்யக் கோரல்!!
கொரோனாவை வைத்து எவரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை!!
கொரோனா மிக வேகமாக பரவும்!! -இலங்கை மக்களை எச்சரிக்கும் W.H.O..!!
மேலும் 10 பேருக்கு கொரோனா – கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 142!!
கொரோனா நோயாளியின் சடலம் எரிக்கப்பட்டமைக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம்!!
டிக்கோயா பகுதியில் 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் இன்று தனிமை!! (படங்கள்)
கொரோனா தொற்று காரணமாக களுபோவில வைத்தியசாலையின் ஒரு வாட்டிற்கு பூட்டு!!