;
Athirady Tamil News

உத்தரவை மீறி ஊரடங்கில் பயணித்த கார் மீது சூடு!!

0

பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த காரின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 03 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (02) இரவு 10.20 மணியளவில் மொரட்டுவையிலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த குறித்த காரை நிறுத்துமாறு, எகொடஉயன பழைய வீதியில் உள்ள வீதித் தடையில் பணியிலிருந்த பொலிஸார் சமிக்ஞை வழங்கியுள்ளனர் ஆயினும் அதனை மீறி குறித்த கார் பயணித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மோதறை புதிய பாலத்திற்கு அருகில் மாவட்ட எல்லையில் அமைக்கப்பட்டுள்ள, வீதித் தடையிலுள்ள அதிகாரிகளுக்கு இது அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வீதித்தடையிலுள்ள பொலிஸாரின் உத்தரவையும் மீறி குறித்த கார் பயணித்த நிலையில் இதன்போது கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கார் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தியதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனையும் மீறி குறித்த கார் பயணித்துள்ளதோடு, புதிய பாலத்திற்கு அடுத்த பக்கமாக உள்ள பாணந்துறை தெற்கு, பொலிஸ் நிலைய வீதித் தடையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களும் இவ்வாகனத்தை நிறுத்துமாறு சமிக்ஞை செய்த போதிலும் இக்கார் நிறுத்தப்படாது சென்றுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டபோது, குறித்த கார் பாணந்துறை வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காரில் பயணித்த நால்வரில் மூவர் காயமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காரின் சாரதி உள்ளிட்ட காயமடைந்த 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எகொடஉயன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

கொவிட்–19 ஜனாஸா விவகாரம்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

இறுதி சடங்கிற்கு ஒன்றுகூடும் மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1264 பேர் கைது!!

அரியாலையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கிராமத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறல்!! (படங்கள்)

ஆஹா.. குட் நியூஸ்.. கொரோனாவுக்கு காசநோய் தடுப்பூசி.. மகிழ்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!! (படங்கள்)

மருதானை பொலிஸ் பிரிவு உட்பட்ட இமாமுல் அரூஸ் மாவத்தை முற்றாக முடக்கம்!! (படங்கள்)

1800 பேர்தான் மீதம்.. 76,408 பேரை டிஸ்சார்ஜ் செய்த சீனா.. தொடரும் மர்மம்.. விடை தெரியாத 2 கேள்விகள்! (வீடியோ, படங்கள்)

கொவிட் 19 தொற்றாளரைக் காப்பாற்ற இலங்கை வைத்தியரால் புதிய கருவி கண்டுபிடிப்பு!!

கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 150 ஆக அதிகரிப்பு!!

ஊரடங்கு தளர்த்தப்படும் போது அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது !!

தெஹிவளையில் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி!!

யாழ்.மக்களிடத்தில் சுகாதார அமைச்சர் விடுக்கும் முக்கிய கோரிக்கை!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு !!

யாழில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு!!

மலேசியாவிலிருந்து வந்தவருக்கு கொரோனோ; விமானத்தில் வந்தோரை பதிவு செய்யக் கோரல்!!

கொழும்பில் விசேட சோதனை நடவடிக்கை – 16 வீதித்தடைகள்!!

கொரோனாவை வைத்து எவரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை!!

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல் !!

கொரோனா மிக வேகமாக பரவும்!! -இலங்கை மக்களை எச்சரிக்கும் W.H.O..!!

மேலும் 10 பேருக்கு கொரோனா – கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 142!!

கொரோனா நோயாளியின் சடலம் எரிக்கப்பட்டமைக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம்!!

டிக்கோயா பகுதியில் 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் இன்று தனிமை!! (படங்கள்)

என்ன ஆனார் கைலாசா “பிரதமர்” நித்தியானந்தா.. கொரோனாவில் சிக்கினாரா?.. நோ சவுண்டு..!! (வீடியோ, படங்கள்)

கொரோனாவால் நிலைகுலைந்த அமெரிக்கா… கோவத்தில் டிரம்ப் செய்த காரியம்… இப்போதான் வேகம் எடுக்குது…!! (வீடியோ, படங்கள்)

ரண கொரோனாவிலும் கிளுகிளுப்பா.. கொரோனா வார்டிலிருந்து பெண் டிக்டாக்.. ரசித்த 3 ஊழியர்கள் டிஸ்மிஸ்!! (வீடியோ, படங்கள்)

வவுனியா இருந்து 310 விமான பயணிகள் விடுவிப்பு!! (படங்கள்)

கொரோனா தொற்று காரணமாக களுபோவில வைத்தியசாலையின் ஒரு வாட்டிற்கு பூட்டு!!

இரண்டாவது கோரோனா நோயாளி உயிரிழப்பு – சுகாதார அமைச்சு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + 11 =

*