;
Athirady Tamil News

சிறுபான்மையினரின் உரிமையை இலங்கை மதிக்கவேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை!!

0

மத சிறுபான்மையினர் தங்கள் சொந்த மரபுகளிற்கு ஏற்ப உறவினர்களின் இறுதிசடங்குகளை செய்வதற்கு உள்ள உரிமையை இலங்கை அதிகாரிகள் மதிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

நெருக்கடியான தருணத்தில் அதிகாரிகள் சமூகங்களை இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் ஏற்கனவே உள்ள விரிசல்களை ஆழமாக்க முயலக்கூடாது என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் பிராஜ் பட்நாயக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொவிட் 19 காரணமாக துயரத்தில் உள்ள உறவினர்கள் தாங்கள் விரும்பும் விதத்தில் தங்கள் குடும்பத்தவர்களிற்கு இறுதி மரியாதையை செலுத்தவேண்டு;ம் என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச வழிகாட்டுதல்களிற்கு ஏற்ப இது சாத்தியமாக உள்ள பட்சத்தில் அதற்கான அனுமதி வழங்கப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் மார்ச் 27 ம் திகதி வெளியிட்ட அறிவுறுத்தல்கள் இறந்தவர்களின் உடல்களை பாதுகாப்பாக கையாள்வது குறித்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தல்களை அடிப்படையானவையாக காணப்பட்டன.

இதில் இறந்தவர்களின் உடல்களை புதைப்பது அல்லது தகனம் செய்வது குறித்து சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

எனினும் மார்ச் 31 ம் திகதி கொரோன வைரசினால் உயிரிழப்பவர்களின் உடல்களை தகனம் செய்யும் விதத்தில் இலங்கை அரசாங்கம் தனது கொள்கையை மாற்றியமைத்தது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களில் இருந்து விலகியமைக்கான காரணத்தை இலங்கை அரசாங்கம் இன்னமும் வெளியிடவில்லை.

இதன் காரணமாக இந்த நடைமுறைகள் பொது சுகாதாரத்தை பாதுகாப்பதற்கு அவசியமற்றவை என்ற கரிசனை எழுந்துள்ளது.

இலங்கையில் 9 வீதமாக காணப்படும் முஸ்லீம் சமூகத்தினரிற்கு இஸ்லாமிய பாரம்பரியத்தின் அடிப்படையில் உடல்களை புதைப்பது அவசியம் என கருதுகின்றனர்.

நீர்கொழும்பில் உயிரிழந்தவரின் உடல் உறவினர்கள் சமூக தலைவர்கள் முஸ்லீம் அரசியல்வாதிகளின் எதிர்ப்பிற்கு மத்தியிலும் எரியூட்டப்பட்டது.

உயிரிழந்த இரண்டாவது முஸ்லீம் பிரஜையின் உடலும் தகனம் செய்யப்பட்டது.

பலவந்தமாக தகனம் செய்யப்படுவது முஸ்லீம் மக்கள் மத்தியில் தாங்கள் அதிகாரிகளால் இலக்குவைக்கப்படுகின்றோம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத மற்றும் கலாச்சார உணர்வுகளை கருத்தில் கொள்ளும்போது இலங்கை அரசாங்கம் மத இறுதிசடங்குகளும் நடைமுறைகளும் மதிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுக்கின்றது.

மேலும் சர்வதேச விதிமுறைகள் பின்பற்றப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ள மன்னிப்புச்சபை குறிப்பிட்ட சமூகத்தினருடன் கலந்தாலோசனைகளை மேற்கொண்ட பின்னர் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றது.

கொவிட் 19 குழுக்களிடையே பாரபட்சம் பார்ப்பதில்லை,அனைத்து மதத்தவர்களும்,அதனால் பாதிக்கப்படடுள்ளனர் என பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்! – பிரதி பொலிஸ் மா அதிபர்!!

கோப்பாய் பிரதேச பிரிவில் நாளை நடமாடும் வங்கிச் சேவை!!

அரசாங்கம் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே செயற்படுகிறது – பிரதமர்!!

வைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலைகளை நாடுங்கள்!!

உத்தரவை மீறி ஊரடங்கில் பயணித்த கார் மீது சூடு!!

கொவிட்–19 ஜனாஸா விவகாரம்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

இறுதி சடங்கிற்கு ஒன்றுகூடும் மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1264 பேர் கைது!!

அரியாலையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கிராமத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறல்!! (படங்கள்)

ஆஹா.. குட் நியூஸ்.. கொரோனாவுக்கு காசநோய் தடுப்பூசி.. மகிழ்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!! (படங்கள்)

மருதானை பொலிஸ் பிரிவு உட்பட்ட இமாமுல் அரூஸ் மாவத்தை முற்றாக முடக்கம்!! (படங்கள்)

1800 பேர்தான் மீதம்.. 76,408 பேரை டிஸ்சார்ஜ் செய்த சீனா.. தொடரும் மர்மம்.. விடை தெரியாத 2 கேள்விகள்! (வீடியோ, படங்கள்)

கொவிட் 19 தொற்றாளரைக் காப்பாற்ற இலங்கை வைத்தியரால் புதிய கருவி கண்டுபிடிப்பு!!

கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 150 ஆக அதிகரிப்பு!!

ஊரடங்கு தளர்த்தப்படும் போது அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது !!

தெஹிவளையில் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி!!

யாழ்.மக்களிடத்தில் சுகாதார அமைச்சர் விடுக்கும் முக்கிய கோரிக்கை!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு !!

யாழில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு!!

மலேசியாவிலிருந்து வந்தவருக்கு கொரோனோ; விமானத்தில் வந்தோரை பதிவு செய்யக் கோரல்!!

கொழும்பில் விசேட சோதனை நடவடிக்கை – 16 வீதித்தடைகள்!!

கொரோனாவை வைத்து எவரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை!!

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல் !!

கொரோனா மிக வேகமாக பரவும்!! -இலங்கை மக்களை எச்சரிக்கும் W.H.O..!!

மேலும் 10 பேருக்கு கொரோனா – கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 142!!

கொரோனா நோயாளியின் சடலம் எரிக்கப்பட்டமைக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம்!!

டிக்கோயா பகுதியில் 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் இன்று தனிமை!! (படங்கள்)

என்ன ஆனார் கைலாசா “பிரதமர்” நித்தியானந்தா.. கொரோனாவில் சிக்கினாரா?.. நோ சவுண்டு..!! (வீடியோ, படங்கள்)

கொரோனாவால் நிலைகுலைந்த அமெரிக்கா… கோவத்தில் டிரம்ப் செய்த காரியம்… இப்போதான் வேகம் எடுக்குது…!! (வீடியோ, படங்கள்)

ரண கொரோனாவிலும் கிளுகிளுப்பா.. கொரோனா வார்டிலிருந்து பெண் டிக்டாக்.. ரசித்த 3 ஊழியர்கள் டிஸ்மிஸ்!! (வீடியோ, படங்கள்)

வவுனியா இருந்து 310 விமான பயணிகள் விடுவிப்பு!! (படங்கள்)

கொரோனா தொற்று காரணமாக களுபோவில வைத்தியசாலையின் ஒரு வாட்டிற்கு பூட்டு!!

இரண்டாவது கோரோனா நோயாளி உயிரிழப்பு – சுகாதார அமைச்சு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × one =

*