;
Athirady Tamil News

ஸ்பெயினில் கொரோனாவில் இருந்து தப்பிய மலை அடிவார கோட்டை! சாத்தியப்படுத்திய மேயர்..!!!

0

ஸ்பெயினில் மலை அடிவார பகுதியான Zahara de la Sierra-ல் ஒரு கொரோனா வழக்குகள் கூட இல்லாமல் 40வயது மேயர் சாத்திய படுத்தியுள்ளார்.

விலைமதிப்பற்ற இடமாக இருக்கும் Zahara de la Sierra ஒரு கொரோனா தொற்று வழக்கு கூட இதுவரை பதிவாகவில்லை. ஆனால், ஸ்பெயினில், இதுவரை 100,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதில், 10,000பேர் பலியாகியுள்ளனர்.

எனவே 40 வயதான சாண்டியாகோ கால்வன் Zahara de la Sierra-ன் மேயர், எல்லைகளை மூட முடிவு எடுத்துள்ளார்.

ஸ்பெயினில் எச்சரிக்கை நிலை அமலுக்கு வந்ததும் இந்த முடிவை சாண்டியாகோ எடுத்துள்ளார். அதன்படி ஒரு எல்லை மட்டும் திறந்திருக்கும். 1,400 மக்கள் வசிக்கும் இந்த பகுதியில் பாதுகாப்பை சாண்டியாகோ கருத்தில் கொண்டுள்ளார் என்று சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது

Zahara-ல் வசிப்பதில் கால்பகுதியினர் 65வயதை கடந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு அதரவாக சாண்டியாகோ உள்ளார்

சாண்டியாகோ கால்வன Zahara குறுகிய வீதிகள், மலைபாதைகள், நீர்தேக்கங்கள், ஆலிவ் மர தோப்புகள் கொண்ட பகுதியாகும். இங்கு சுற்றுலாவருபவர்கள் வாகனங்கள் மூலம் 1மணி நேரத்தில் கடக்கலாம்.

திறந்திருக்கும் எல்லை பகுதியில், பொலிஸ் அதிகாரி ஒருவர், முழு பாதுகாப்பு உடையில் இருப்பார். மேலும், வாகனங்களின் டயர்கள் உள்ளிட்டவை முழுவதும் கிரிமிநாசினி மூலம் சுத்தம் செய்தபின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றது

நகரவீதியில், 10பேர் கொண்ட குழு திங்கள்வியாழக்கிழமைகளில் சுற்றி திரிந்து கிரிமிநீக்க பணிகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

பிரசவம் உள்ளிட்ட அவசர தேவைக்கு Zahara வீதிகள் திறந்திருக்கின்றன. மேலும், மற்ற தேவைகளை பெண்கள் குழுவினர் இருந்து பார்த்து கொள்கின்றனர் என்று சிஎன்என் தெரிவித்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × three =

*