;
Athirady Tamil News

வெளிநாட்டில் சாலை மார்க்கம் 600 மைல்கள் பயணம் செய்த பிரித்தானிய தாயாரும் மகளும்: கொரோனாவால் ஏற்பட்ட சோதனை..!!

0

கொரோனாவால் இந்தியாவில் அமுலில் இருக்கும் 21 நாள் ஊரடங்கில் சிக்கிக்கொண்ட பிரித்தானிய தாயாரும் மகளும் அங்கிருந்து தப்பிய சம்பவத்தை அதிர்ச்சி மாறாமல் வெளிப்படுத்தியுள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் உலகின் பல்வேறு நாடுகள் தற்போது ஊரடங்கு உத்தரவை அமுலில் வைத்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் விடுமுறையை கழித்து வந்த பிரித்தானிய தாயார் டான் ஹார்ட்விக்(50) மற்றும் அவரது 6 வயது மகள் ரோஸி ஆகிய இருவரும் இந்திய அரசால் திடீரென்று அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் சிக்கிக்கொண்டுள்ளனர்.

21 நாட்கள் ஊரடங்கு அறிவிப்பு வெளியாகும் போதும் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் பகுதியில் இருந்துள்ளனர் தாயாரும் மகளும்.

பல முறை இந்தியாவுக்கு சென்று வந்துள்ள டான், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரத்தில் அங்குள்ள மக்களின் மன நிலை மாறியதையும்,தம்மை கொரோனாவை பரப்ப வந்த வெளிநாட்டினர் என முகத்திற்கு நேரே திட்டியதையும் டான் நினைவுகூர்ந்துள்ளார்.

நிலைமை தலைகீழாக மாறுவதை உணர்ந்த அவர் அங்கிருந்து டெல்லிக்கு திரும்ப வழி தேடியுள்ளார். உள்ளூர் விமான சேவைகள் மொத்தமாக முடக்கப்பட்ட நிலையில்,ஜெய்சால்மர் பகுதியில் இருந்து 5 மணி நேரம் வாடகை டாக்ஸியில் பயணம் செய்து ஜோத்பூர் சென்று சேர்ந்துள்ளார்.

அங்கிருந்து மேலும் ஒரு 5 மணி நேரம் பயணம் செய்து புஷ்கர் பகுதிக்கு சென்று சேர்ந்துள்ளார். புஷ்கர் பகுதியில் இருந்து டெல்லிக்கு மேலும் ஒரு 9 மணி நேர பயணம்.

இறுதியில் டெல்லி வந்து சேர்ந்த அவருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. டெல்லியில் அமைந்துள்ள பிரித்தானிய தூதரகம் மூடப்பட்டிருந்தது.

ஆனால் வேறு ஐரோப்பிய நாடுகளின் தூதரகங்கள் செயல்பட்டு வந்ததை கவனித்த டான், உடனடியாக ஜேர்மன் தூதரகத்தை தொடர்பு கொண்டுள்ளார்.

தமது நிலையை உணர்ந்த ஜேர்மன் தூதரக அதிகாரிகள் தம்மையும் மகளையும் அவர்கள் ஏற்பாடு செய்துள்ள விமானத்தில் அனுமதித்ததாக டான் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழனன்று டான் மற்றும் ரோஸி ஆகிய இருவரும் ஜேர்மன் தூதரகத்தின் உதவியுடன் Frankfurt சென்றடைந்தனர்.

தொடர்ந்து வெள்ளிக்கிழமை லண்டனுக்கு திரும்பியுள்ளனர். ஜெய்சால்மர் பகுதியில் இருந்து டெல்லி வரை சுமார் 600 மைல்கள் வாடகை டாக்ஸிகளில் மேற்கொண்ட பயணம் உண்மையில் மறக்க முடியாதது என்கிறார் டான்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + seventeen =

*