;
Athirady Tamil News

யாழ் மாவட்டத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் திடீர் உச்சம்!

0

யாழ் மாவட்டத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் திடீர் உச்சம்! உடன் நடவடிக்கை எடுக்குமாறு அங்கஜன் இராமநாதன் யாழ் அரச அதிபரிடம் வலியுறுத்தல்

யாழ் மாவட்டத்தில் தற்போது ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுலில் உள்ள காரணத்தினால் யாழ் மாவட்ட மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாரியளவு பாதித்துள்ளது. இதனால் மக்கள் அருகில் உள்ள கடைகளில் அல்லது நடமாடும் சேவை மூலம் தமது அத்தியாவசிய உணவு மற்றும் வேறு இதர பொருட்களை கொள்வனவு செய்யும் போது பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் கட்டுப்பாட்டு விலைகளிலும் பார்க்க மிக கூடுதலான விலையில் விற்பனை செய்யப்படுகின்றது என பலரும் முறைப்பாடு செய்துள்ளனர். இதனால் பெரிதும் பாதிப்படைவது நலிவுற்ற வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்களேயாகும்.

ஆனால் இவ் அசாதாரண சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி யாழ் மாவட்டத்தில் உள்ள சில மொத்த மற்றும் சில்லறை வியாபார நிறுவனங்கள், பலசரக்கு கடைகள், சதொசா கிளைகள், நடமாடும் வியாபார விநியோக சேவையினர் மற்றும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் தற்போது ஒரு வியாபார உத்தியோக அத்தியாவசிய உணவு பொருட்களை அளவுக்கு அதிகமாக தமது களஞ்சியசாலைகளில் பதுக்கி வைத்து சந்தையில் செயற்கை தட்டுப்பாட்டின் மூலம் மக்கள் மத்தியில் பயபீதியை ஏற்படுத்தி இரட்டிப்பு விலைகளில் விற்பனை செய்ய முயற்சிப்பதாக பல முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன.

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அங்கஜன் இராமநாதன் இதனை கருத்தில் கொண்டு அதே சந்தர்பத்தில் அரசாங்கத்தின் நிவாரண திட்டத்தின் மூலம் முதியோருக்கான கொடுப்பனவு, மாற்றுத் திறனாளிகளுக்கான கொடுப்பனவு, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவோருக்கான கொடுப்பனவு, சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு, சமூர்த்தி பயனாளிகள் மற்றும் சமுர்த்தி தகைமை உள்ளோருக்கான கொடுப்பனவு என தலா 5000 ரூபாய்கள் விசேட உதவித் தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இவ் அத்தியாவசிய உணவு பொருட்கள் நியாயமான விலையில் விற்றால் மாத்திரமே அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவு மூலம் இவர்கள் பயனடைவர் .

ஆனால் அத்தியாவசிய உணவு மற்றும் இதர பொருட்களின் விலைகள் அபரிமிதமாக அதிகரித்து விற்றகப்படும் பட்சத்தில் இக் கொடுப்பனவு கிடைக்கப்பெறுபவர்களுக்கு அந்த கொடுப்பனவு அவர்களது அத்தியாவசிய உணவு தேவைக்கு போதுமானதாக இருக்காது என்பதை சுட்டிகாட்டியுள்ளார்.

இவ்வாறு அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கி வைத்து கட்டுபாட்டு விலையை மீறி விற்பனை செய்வோரை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை விசாரணை அதிகாரிகள் உடனடியாக அடையாளம் கண்டு உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் மக்களுக்கு நியாயமான விலைகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கான வழிவகைகள் செய்ய வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு !!

இரணைமடு விமானபடை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 172 பேர் வீடு திரும்பினர்.!! (படங்கள்)

யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்! – பிரதி பொலிஸ் மா அதிபர்!!

கோப்பாய் பிரதேச பிரிவில் நாளை நடமாடும் வங்கிச் சேவை!!

அரசாங்கம் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே செயற்படுகிறது – பிரதமர்!!

வைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலைகளை நாடுங்கள்!!

உத்தரவை மீறி ஊரடங்கில் பயணித்த கார் மீது சூடு!!

கொவிட்–19 ஜனாஸா விவகாரம்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

இறுதி சடங்கிற்கு ஒன்றுகூடும் மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1264 பேர் கைது!!

அரியாலையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கிராமத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறல்!! (படங்கள்)

ஆஹா.. குட் நியூஸ்.. கொரோனாவுக்கு காசநோய் தடுப்பூசி.. மகிழ்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!! (படங்கள்)

மருதானை பொலிஸ் பிரிவு உட்பட்ட இமாமுல் அரூஸ் மாவத்தை முற்றாக முடக்கம்!! (படங்கள்)

1800 பேர்தான் மீதம்.. 76,408 பேரை டிஸ்சார்ஜ் செய்த சீனா.. தொடரும் மர்மம்.. விடை தெரியாத 2 கேள்விகள்! (வீடியோ, படங்கள்)

கொவிட் 19 தொற்றாளரைக் காப்பாற்ற இலங்கை வைத்தியரால் புதிய கருவி கண்டுபிடிப்பு!!

கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 150 ஆக அதிகரிப்பு!!

ஊரடங்கு தளர்த்தப்படும் போது அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது !!

தெஹிவளையில் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி!!

யாழ்.மக்களிடத்தில் சுகாதார அமைச்சர் விடுக்கும் முக்கிய கோரிக்கை!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு !!

யாழில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு!!

மலேசியாவிலிருந்து வந்தவருக்கு கொரோனோ; விமானத்தில் வந்தோரை பதிவு செய்யக் கோரல்!!

கொழும்பில் விசேட சோதனை நடவடிக்கை – 16 வீதித்தடைகள்!!

கொரோனாவை வைத்து எவரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை!!

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல் !!

கொரோனா மிக வேகமாக பரவும்!! -இலங்கை மக்களை எச்சரிக்கும் W.H.O..!!

மேலும் 10 பேருக்கு கொரோனா – கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 142!!

கொரோனா நோயாளியின் சடலம் எரிக்கப்பட்டமைக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம்!!

டிக்கோயா பகுதியில் 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் இன்று தனிமை!! (படங்கள்)

என்ன ஆனார் கைலாசா “பிரதமர்” நித்தியானந்தா.. கொரோனாவில் சிக்கினாரா?.. நோ சவுண்டு..!! (வீடியோ, படங்கள்)

கொரோனாவால் நிலைகுலைந்த அமெரிக்கா… கோவத்தில் டிரம்ப் செய்த காரியம்… இப்போதான் வேகம் எடுக்குது…!! (வீடியோ, படங்கள்)

ரண கொரோனாவிலும் கிளுகிளுப்பா.. கொரோனா வார்டிலிருந்து பெண் டிக்டாக்.. ரசித்த 3 ஊழியர்கள் டிஸ்மிஸ்!! (வீடியோ, படங்கள்)

வவுனியா இருந்து 310 விமான பயணிகள் விடுவிப்பு!! (படங்கள்)

கொரோனா தொற்று காரணமாக களுபோவில வைத்தியசாலையின் ஒரு வாட்டிற்கு பூட்டு!!

இரண்டாவது கோரோனா நோயாளி உயிரிழப்பு – சுகாதார அமைச்சு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 5 =

*