;
Athirady Tamil News

வீடுகளில் வீட்டுத்தோட்ட சவால்!! (படங்கள்)

0

கொரோனா வைரஸ் எனப்படும் கொவிட் 19 தொற்றுக் காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் பெரும் சவால்களை நாளுக்குநாள் சந்திக்க வேண்டியுள்ளதுடன் அரசாங்கமும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் தற்போது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வீட்டுத்தோட்டங்களை மக்கள் மத்தியில் ஊக்குவிக்க அரசாங்கமும் முக்கிய பிரபலங்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை வீடுகளில் வீட்டுத் தோட்டங்களை ஏற்படுத்த அரசாங்கம் இணையத்தளமொன்றையும் ஆரம்பித்து அதனூடாக பொதுமக்களுக்கு பயிர்களின் விதைகள் மற்றும் வீட்டுத் தோட்டத்திற்கு தேவையானவற்றை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இச்செயற்திட்டத்திற்கென www.saubagya.lk என்ற புதிய இணையத்தளப் பக்கமொன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன், தமது வீட்டுத்தோட்டத்திற்கு அவசியமான விதைகளை அந்த இணைப்பக்கத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

இத்தருணத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் அவரின் பாரியார் ஷிராந்தியும் இணைந்து வீட்டுத்தோட்ட சவாலில் (HomeGardenChallenge) ஈடுப்பட்டுள்ளார்கள்.

இதுகுறித்த புகைப்படத்தை பிரதமர் அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

Home Garden Challenge-இல் பங்கேற்பதில் ஷிராந்தியும் நானும் பெருமகிழ்ச்சியடைகிறோம். கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் உலகைப் பெருமளவில் பாதித்துள்ள அதேநேரத்தில், எமது எதிர்காலச் சந்ததிகளுக்காக நிலைத்திருக்கக்கூடிய வாழ்க்கைமுறைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியத்தையும் இது கற்றுக்கொடுத்துள்ளது.

மேலும், அனைவரையும் தத்தமது பங்கை இவ்விடயத்தில் ஆற்றுமாறு நான் ஊக்குவிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவைளை, நாமல் ராஜபக்ஷவும் அவரது பாரியாரும் இந்த திட்டத்தி்ல் தம்மை இணைத்துக்கொண்டுள்ளனர்.

இவர்களை தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வீரர்களான இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன, டினேஸ் சந்திமல், திஸர பெரேரா உள்ளிட்டசிலரும் வீட்டுத்தோட்ட சவாலில் ஈடுப்பட்டு தங்களது புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்கள்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

யாழில் கொரோனா சிகிச்சைக்கு உதவி!! -5 இலட்சம் வழங்கி வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம்!!

கொரோனா பரவுவதை 3 மாத ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்!!

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குழந்தை பிறந்தது!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு !!

இரணைமடு விமானபடை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 172 பேர் வீடு திரும்பினர்.!! (வீடியோ,படங்கள்)

யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்! – பிரதி பொலிஸ் மா அதிபர்!!

கோப்பாய் பிரதேச பிரிவில் நாளை நடமாடும் வங்கிச் சேவை!!

அரசாங்கம் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே செயற்படுகிறது – பிரதமர்!!

வைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலைகளை நாடுங்கள்!!

உத்தரவை மீறி ஊரடங்கில் பயணித்த கார் மீது சூடு!!

கொவிட்–19 ஜனாஸா விவகாரம்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

இறுதி சடங்கிற்கு ஒன்றுகூடும் மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1264 பேர் கைது!!

அரியாலையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கிராமத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறல்!! (படங்கள்)

ஆஹா.. குட் நியூஸ்.. கொரோனாவுக்கு காசநோய் தடுப்பூசி.. மகிழ்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!! (படங்கள்)

மருதானை பொலிஸ் பிரிவு உட்பட்ட இமாமுல் அரூஸ் மாவத்தை முற்றாக முடக்கம்!! (படங்கள்)

1800 பேர்தான் மீதம்.. 76,408 பேரை டிஸ்சார்ஜ் செய்த சீனா.. தொடரும் மர்மம்.. விடை தெரியாத 2 கேள்விகள்! (வீடியோ, படங்கள்)

கொவிட் 19 தொற்றாளரைக் காப்பாற்ற இலங்கை வைத்தியரால் புதிய கருவி கண்டுபிடிப்பு!!

கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 150 ஆக அதிகரிப்பு!!

ஊரடங்கு தளர்த்தப்படும் போது அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது !!

தெஹிவளையில் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி!!

யாழ்.மக்களிடத்தில் சுகாதார அமைச்சர் விடுக்கும் முக்கிய கோரிக்கை!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு !!

யாழில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு!!

மலேசியாவிலிருந்து வந்தவருக்கு கொரோனோ; விமானத்தில் வந்தோரை பதிவு செய்யக் கோரல்!!

கொழும்பில் விசேட சோதனை நடவடிக்கை – 16 வீதித்தடைகள்!!

கொரோனாவை வைத்து எவரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை!!

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல் !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × five =

*