பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில் மருதமுனை மக்களுக்கான நிவாரண பொதிகள் !!!! (படங்கள்)
மருதமுனை ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில் மருதமுனை மக்களுக்கான நிவாரண பொதிகள் விநியோகம் மருதமுனை மஸ்ஜிதுந்நூர் ஜூம்ஆப்பள்ளிவாசலில் நடைபெற்றது.
மருதமுனை ஜம்மியதுல் உலமா சபை மற்றும் அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி அல்ஹாஜ் எம்.ஐ. ஹுசைனுத்தீன் (றியாழி) தலைமையில் சனிக்கிழமை (04) நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே. எச்.சுஜித் பிரியந்த, கல்முனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் தர்மசேன, பொதுசுகாதார பரிசோதகர்கள், ஆகியோருடன் மருதமுனையின் அனைத்து பள்ளிவாசல்களின் முக்கிய நிர்வாகிகள், பிரதேச முக்கியஸ்தர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந் நிகழ்வில் மருதமுனை பிரதேச பள்ளிவாசல்களின் நிருவாகங்களினூடாக நிவாரண பொதிகளினை பெறுவதற்கு தகுதியாக இனம்காணப்பட்ட பயனாளிகள் பட்டியலிலுள்ள சுமார் 3100 பேர்களுக்கான நிவாரணப் பொதிகள் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பரிசோதித்த பின்னர் குறித்த 16 பள்ளிவாசல்களின் தலைவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த பள்ளிவாசல்களினூடாக பயனாளிகளின் வீடுகளிற்கு பொதிகளை விநியோகிக்கும் ஏற்பாடுகளினை குறித்த பள்ளிவாசல்களின் நிருவாகங்களே பொறுபேற்றுள்ளதாகவும் செயலனியின் செயலாளர் எம்.எல்.எம். ஜமால்டீன் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”
இரணைமடு விமானபடை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 172 பேர் வீடு திரும்பினர்.!! (வீடியோ,படங்கள்)
யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்! – பிரதி பொலிஸ் மா அதிபர்!!
அரசாங்கம் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே செயற்படுகிறது – பிரதமர்!!
வைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலைகளை நாடுங்கள்!!
கொவிட்–19 ஜனாஸா விவகாரம்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?
இறுதி சடங்கிற்கு ஒன்றுகூடும் மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!
ஆஹா.. குட் நியூஸ்.. கொரோனாவுக்கு காசநோய் தடுப்பூசி.. மகிழ்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!! (படங்கள்)
மருதானை பொலிஸ் பிரிவு உட்பட்ட இமாமுல் அரூஸ் மாவத்தை முற்றாக முடக்கம்!! (படங்கள்)
கொவிட் 19 தொற்றாளரைக் காப்பாற்ற இலங்கை வைத்தியரால் புதிய கருவி கண்டுபிடிப்பு!!
கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 150 ஆக அதிகரிப்பு!!
ஊரடங்கு தளர்த்தப்படும் போது அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது !!
யாழ்.மக்களிடத்தில் சுகாதார அமைச்சர் விடுக்கும் முக்கிய கோரிக்கை!!
யாழில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு!!
மலேசியாவிலிருந்து வந்தவருக்கு கொரோனோ; விமானத்தில் வந்தோரை பதிவு செய்யக் கோரல்!!
கொரோனாவை வைத்து எவரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை!!