;
Athirady Tamil News

அடங்காத கொரோனா.. விடாமல் தொடரும் பலிகள்.. தொடர்ந்து தவிக்கும் ஸ்பெயின்.. ஒரே நாளில் 932 பேர் மரணம் !! (வீடியோ, படங்கள்)

0

கொரோனாவ வைரஸ் பிடியிலிருந்து ஸ்பெயினுக்கு இன்னும் விமோச்சனம் பிறக்கவில்லை. நேற்று மட்டும் ஒரே நாளில் 932 பேர் பலியாகியுள்ளனர். இதனால் ஸ்பெயின் அரசு என்ன செய்வது என்று தெரியாமல் ஸ்தம்பித்துப் போயுள்ளது.

ஐரோப்பிய நாடுகளிலேயே அதிக பாதிப்பை சந்தித்தது இத்தாலிதான்.. ஆனால் இன்று இத்தாலியை மிஞ்சும் அளவுக்கு ஸ்பெயினில் வெறியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது கொரோனாவைரஸ்.

நேற்று ஒரே நாளில் 932 பேர் பலியாகியுள்ளனர். புதிய தொற்று ஏற்படுவதும், மரணங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக கூறப்படும் நிலையிலும் இத்தனை பேர் ஒரே நாளில் இறந்திருப்பது ஸ்பெயின் அரசை அதிர வைத்துள்ளது.

ஸ்பெயின்

உலக அளவில் இத்தாலிக்கு அடுத்து அதிக பாதிப்பைசந்தித்துள்ள நாடு ஸ்பெயின்தான். இதுவரை இத்தாலியில் 14,681 பேர் உயிரிழந்துள்ளனர்.ஸ்பெயினில் இந்த எண்ணிக்கை 11, 198 ஆக உயர்ந்துள்ளது.

ஸ்பெயினில் இதுவரை 1 லட்சத்து 19 ஆயிரத்து 199 பேர் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, புதிய தொற்று ஏற்படுவது சற்று குறைந்துள்ளதாகவும், பலியாவோர் எண்ணிக்கையும் லேசாக குறைய ஆரம்பித்திருப்பதாகவும் அரசுத் தரப்பு புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரண சதவீதம்

புதிய தொற்று விகிதம் வியாழக்கிழமை 7.9 சதவீதமாக இருந்தது. இது வெள்ளிக்கிழமை 6.8 சதவீதமாக குறைந்தது. இது கடந்த வார மத்தியில் 20 சதவீதமாக இருந்தது என்பது நினைவிருக்கலாம்.

அதேபோல தினசரி மரண சதவீதம் வெள்ளிக்கிழமை 9.3 சதவீதமாக குறைந்தது. இது வியாழக்கிழமையன்று 10.5 சதவீதமாக இருந்தது. மார்ச் 25ம் தேதி இது 27 சதவீதமாக இருந்தது.

கருவிகள்

கடந்த சில நாட்களாகவே ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் சற்று வீழ்ச்சி காணப்படுகிறது.

ஸ்பெயினைப் பொறுத்தவரை அதிக அளவில் வயதானவர்கள்தான் மரணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கு போதிய சுவாசக் கருவிகள் கிடைக்காமல் போனதால்தான் பலர் உயிரிழந்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னுரிமை

இந்த சுவாசக் கருவிகளை முதலில் இளைஞர்கள், நல்ல ஆரோக்கியத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பெயினில் இதுவரை உயிரிழந்தோரில் பெரும்பாலானவர்கள் கடந்த 7 நாட்களில்தான் இறந்துள்ளனர் என்பது இன்னொரு அதிர்ச்சித் தகவல்.கொரோனா வைரஸ் தும்மல், இருமல் மட்டுமல்லாமல் மூச்சுகாற்று பட்டால் கூட பரவக்கூடியது..!!!

அடங்காத கொரோனா.. விடாமல் தொடரும் பலிகள்.. தொடர்ந்து தவிக்கும் ஸ்பெயின்.. ஒரே நாளில் 932 பேர் மரணம் !! (வீடியோ, படங்கள்)

எச்சரிக்கை! இருமல், தும்மலால் மட்டும் கொரோனா வைரஸ் பரவாதாம்… இப்படியும் பரவுமாம்.. !! (வீடியோ, படங்கள்)

1.5 மில்லியன் ரூபாவினை நிவாரணத்திற்கு வழங்கிய புலம்பெயர் தமிழர்.!! (படங்கள்)

இந்நாட்டு கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

தனிமைப்படுத்தும் முகாமிலிருந்த இளைஞன் தப்பியோட்டம்!!

131 நாடுகளில் மக்களின் செயற்பாடுகள் குறித்து கூகுள் ஆய்வு!!

நெல்லியடியில் இளைஞர்களை முழங்காலில் இருத்திய இராணுவம்!!

வீடுகளில் வீட்டுத்தோட்ட சவால்!! (படங்கள்)

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குழந்தை பிறந்தது!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு !!

இரணைமடு விமானபடை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 172 பேர் வீடு திரும்பினர்.!! (வீடியோ,படங்கள்)

யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்! – பிரதி பொலிஸ் மா அதிபர்!!

கோப்பாய் பிரதேச பிரிவில் நாளை நடமாடும் வங்கிச் சேவை!!

அரசாங்கம் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே செயற்படுகிறது – பிரதமர்!!

வைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலைகளை நாடுங்கள்!!

உத்தரவை மீறி ஊரடங்கில் பயணித்த கார் மீது சூடு!!

கொவிட்–19 ஜனாஸா விவகாரம்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

இறுதி சடங்கிற்கு ஒன்றுகூடும் மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1264 பேர் கைது!!

அரியாலையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கிராமத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறல்!! (படங்கள்)

ஆஹா.. குட் நியூஸ்.. கொரோனாவுக்கு காசநோய் தடுப்பூசி.. மகிழ்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!! (படங்கள்)

மருதானை பொலிஸ் பிரிவு உட்பட்ட இமாமுல் அரூஸ் மாவத்தை முற்றாக முடக்கம்!! (படங்கள்)

1800 பேர்தான் மீதம்.. 76,408 பேரை டிஸ்சார்ஜ் செய்த சீனா.. தொடரும் மர்மம்.. விடை தெரியாத 2 கேள்விகள்! (வீடியோ, படங்கள்)

கொவிட் 19 தொற்றாளரைக் காப்பாற்ற இலங்கை வைத்தியரால் புதிய கருவி கண்டுபிடிப்பு!!

கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 150 ஆக அதிகரிப்பு!!

ஊரடங்கு தளர்த்தப்படும் போது அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது !!

தெஹிவளையில் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி!!

யாழ்.மக்களிடத்தில் சுகாதார அமைச்சர் விடுக்கும் முக்கிய கோரிக்கை!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு !!

யாழில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு!!

மலேசியாவிலிருந்து வந்தவருக்கு கொரோனோ; விமானத்தில் வந்தோரை பதிவு செய்யக் கோரல்!!

கொழும்பில் விசேட சோதனை நடவடிக்கை – 16 வீதித்தடைகள்!!

கொரோனாவை வைத்து எவரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை!!

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல் !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 1 =

*