;
Athirady Tamil News

கொரோனா சந்தேகிக்கப்படுபவர்களை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானம்!! (படங்கள்)

0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள், தொற்றுக்குள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மற்றும் அவர்களுடன் பழகியவர்களை மீண்டும் மீண்டும் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தொற்றை கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்ட ஏனைய நாடுகளும் இத்தகைய நடைமுறைகளையே பின்பற்றியுள்ளன. தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் அவர்களுடன் பழகியவர்களை சரியாக இனம்காண முடிந்திருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 வைரஸ் நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடல் குறத்து ஜனாதிபதி போடடாபய ராஜபக்ஷ தெரிவித்து;ளளதாவது: –

“கொவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று எனது தலைமையில் இன்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அநுருத்த பாதெனிய வைரஸின் உலகளாவிய பரவல் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்ட செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து விளக்கினார்.

நாட்டினுள் வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட முதல் சந்தர்ப்பத்திலேயே எனது தலைமையில் அரசாங்கம் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளின் காரணமாக இந்த சுகாதார பிரச்சினை கட்டுப்பாட்டை மீறிச் செல்ல இடமளிக்காது முகாமைத்துவம் செய்ய முடிதுயுமாக இருந்ததாக இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

எனது தலைமையில் அரசாங்கம் இதுவரையில் செயற்பட்டதைப் போன்று வைரஸை ஒழிக்க தொடர்ந்தும் சுகாதார, மருத்துவ, பாதுகாப்பு மற்றும் சட்டம் உள்ளிட்ட குறித்த துறைகளின் நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.

நோயின் உலகளாவிய பரவலை கண்காணித்து உலக சுகாதார தாபனம் அவ்வப்போது செய்யும் பரிந்துரைகளை ஆராய்ந்து பொருத்தமான வகையில் பின்பற்றுவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்படும். தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள கொரோனா ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை மேலும் முறையாக தொடர்ந்தும் முன்னெடுக்க கலந்துரையாடலில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

தொற்றுக்குள்ளானவர்கள், தொற்றுக்குள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மற்றும் அவர்களுடன் பழகியவர்களை மீண்டும் மீண்டும் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. தொற்றை கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்ட ஏனைய நாடுகளும் இத்தகைய நடைமுறைகளையே பின்பற்றியுள்ளன. தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் அவர்களுடன் பழகியவர்களை சரியாக இனம்காண முடிந்திருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனது ஆலோசகர் லலித் வீரதுங்க, முன்னாள் ஆளுநர் வைத்தியர் சீதா அரம்பேபொல, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன, அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் அதிகாரிகள், தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனத்தின் தலைவர் ஜயன்த டி சில்வா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.”
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

யாழில் 32 பேருக்கு கொரோனா பரிசோதணை!! -17 பேருக்கு இல்லை!!

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வீடு திரும்பியவருக்கு கொரோனா!!

எச்சரிக்கை! இருமல், தும்மலால் மட்டும் கொரோனா வைரஸ் பரவாதாம்… இப்படியும் பரவுமாம்.. !! (வீடியோ, படங்கள்)

தனிமைப்படுத்தும் முகாமிலிருந்த இளைஞன் தப்பியோட்டம்!!

131 நாடுகளில் மக்களின் செயற்பாடுகள் குறித்து கூகுள் ஆய்வு!!

நெல்லியடியில் இளைஞர்களை முழங்காலில் இருத்திய இராணுவம்!!

வீடுகளில் வீட்டுத்தோட்ட சவால்!! (படங்கள்)

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குழந்தை பிறந்தது!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு !!

இரணைமடு விமானபடை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 172 பேர் வீடு திரும்பினர்.!! (வீடியோ,படங்கள்)

யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்! – பிரதி பொலிஸ் மா அதிபர்!!

கோப்பாய் பிரதேச பிரிவில் நாளை நடமாடும் வங்கிச் சேவை!!

அரசாங்கம் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே செயற்படுகிறது – பிரதமர்!!

வைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலைகளை நாடுங்கள்!!

உத்தரவை மீறி ஊரடங்கில் பயணித்த கார் மீது சூடு!!

கொவிட்–19 ஜனாஸா விவகாரம்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

இறுதி சடங்கிற்கு ஒன்றுகூடும் மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1264 பேர் கைது!!

அரியாலையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கிராமத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறல்!! (படங்கள்)

ஆஹா.. குட் நியூஸ்.. கொரோனாவுக்கு காசநோய் தடுப்பூசி.. மகிழ்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!! (படங்கள்)

மருதானை பொலிஸ் பிரிவு உட்பட்ட இமாமுல் அரூஸ் மாவத்தை முற்றாக முடக்கம்!! (படங்கள்)

1800 பேர்தான் மீதம்.. 76,408 பேரை டிஸ்சார்ஜ் செய்த சீனா.. தொடரும் மர்மம்.. விடை தெரியாத 2 கேள்விகள்! (வீடியோ, படங்கள்)

கொவிட் 19 தொற்றாளரைக் காப்பாற்ற இலங்கை வைத்தியரால் புதிய கருவி கண்டுபிடிப்பு!!

கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 150 ஆக அதிகரிப்பு!!

ஊரடங்கு தளர்த்தப்படும் போது அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது !!

தெஹிவளையில் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி!!

யாழ்.மக்களிடத்தில் சுகாதார அமைச்சர் விடுக்கும் முக்கிய கோரிக்கை!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு !!

யாழில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு!!

மலேசியாவிலிருந்து வந்தவருக்கு கொரோனோ; விமானத்தில் வந்தோரை பதிவு செய்யக் கோரல்!!

கொழும்பில் விசேட சோதனை நடவடிக்கை – 16 வீதித்தடைகள்!!

கொரோனாவை வைத்து எவரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை!!

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல் !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 5 =

*