;
Athirady Tamil News

அந்த தொலைபேசி அழைப்பால் அழுதே விட்டேன்: கொரோனாவால் வெளிநாட்டில் வீட்டுச்சிறையில் சிக்கிய ஜேர்மானியர்..!!

0

கல்வி நிமித்தம் நியூசிலாந்தில் தங்கிவரும் ஜேர்மானிய இளம்பெண் ஒருவர் கொரோனாவால் தமக்கு ஏற்பட்டுவரும் சிக்கலை பதிவு செய்துள்ளார்.

ஜேர்மனியின் Lower Saxony மாநிலத்தை சேர்ந்தவர் 17 வயதான அன்னா. இவர் கல்வி நிமித்தம் நியூசிலாந்தில் கட்டணம் செலுத்தும் விருந்தினராக அங்குள்ள ஒரு குடும்பத்தினருடன் தங்கி வருகிறார்.

இவரையே கொரோனா பீதியில் அந்த குடும்பத்தின் தாயார் குட்டி அறை ஒன்றில் வைத்து பூட்டியுள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அன்னாவும் இவரைப்போன்று தங்கி வரும் இன்னொரு நண்பரும் சேர்ந்து வெலிங்டனில் உள்ள தேசிய அருங்காட்சியகம் சென்று திரும்பியுள்ளனர்.

இச்சம்பவம் நடந்து ஒரு வாரம் கடந்த நிலையில், அந்த நண்பர் தொலைபேசியில் அன்னாவை தொடர்பு கொண்டு அந்த அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

அன்னாவும் அவர் நண்பரும் வெலிங்டனில் உள்ள தேசிய அருங்காட்சியகம் பார்வையிட்டு வந்த அதே காலை வேளையில் கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் அந்த அருங்காட்சியகத்தில் காணப்பட்டதாக நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது.

மட்டுமின்றி, அதே வேளையில் அந்த அருங்காட்சியகத்தில் இருந்த அனைவரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது.

இந்த தகவலே அன்னாவை வீட்டுச்சிறையில் தள்ள காரணமாக அமைந்துள்ளது. அன்றைய நாள் அன்னா குடியிருப்பு திரும்பிய நேரம், அந்த தாயார் அவரை தடுத்து நிறுத்தி கிருமி நீக்கம் செய்துள்ளார்.

மட்டுமின்றி, கீழ்தளத்தில் உள்ள ஒரு குட்டி அறையில் தங்கவும் உத்தரவிட்டுள்ளார். ஒரே ஒரு கழிவறை இருப்பதால், அந்த தாயாரிடம் அன்னா குறுந்தகவல் அனுப்பி சம்மதம் பெற வேண்டும்.

அன்னா குளித்து முடித்து வெளியே வங்த பின்னர் கழிவறையும் குளியலறையும் மீண்டும் கிருமி நீக்கம் செய்யப்படும்.

மட்டுமின்றி அன்னாவுக்கு உணவு வழங்கும் தட்டு உள்ளிட்ட பாத்திரங்களை அவர்கள் தொடுவதில்லை என்பதால், ஒருகட்டத்தில் அன்னாவே கழிவறையில் வைத்து சுத்தம் செய்துள்ளார்.

அன்னாவை அந்த தாயார் வெளியே இறங்கவே ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அவர் அவரது அறைக்குள் சென்ற பின்னரே அன்னா வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்.

தற்போது இந்த தகவல் அன்னாவின் பெற்றோருக்கு தெரியவர, ஜேர்மனிக்கு திரும்பும்படி அவர்கள் விமான டிக்கெட் ஒன்றை மகளுக்காக பதிவு செய்துள்ளனர்.

ஏப்ரல் 4 ஆம் திகதி அந்த விமானம் நியூசிலாந்தில் இருந்து கிளம்பும் என கூறப்படுகிறது. அன்னா விமான நிலையம் சென்றாரா இல்லையா என்ற தகவல் வெளியாகவில்லை

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + eighteen =

*