;
Athirady Tamil News

திருமணம் முடித்து 51 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி: 6 நிமிட இடைவெளியில் பிரித்துச் சென்ற கொரோனா..!!

0

அமெரிக்காவில் திருமணம் முடித்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்த தம்பதி ஒன்று 6 நிமிட இடைவெளியில் கொரோனாவால் மரணமடைந்த சம்பவம் வெளியாகியுள்ளது.

புளோரிடா மாகாணத்தில் குடியிருந்து வந்த சுமார் 72-74 வயதுடைய ஸ்டூவர்ட் மற்றும் அட்ரியன் பேக்கர் தம்பதியே கொரோனாவால் மரணமடைந்தவர்கள்.

பெற்றோரை ஒரே நாளில் கொரோனாவுக்கு பலிகொடுத்த அவர்களது மகன், தமது பெற்றோரின் மரணம் வீணாவதில்லை. அமெரிக்கர்கள் கண்டிப்பாக இந்த கொலைகார கொரோனாவை தீவிரமாக எடுத்துக் கொள்வார்கள் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

மூன்று வாரங்களுக்கு முன்னர் வரையும் ஸ்டூவர்ட் மற்றும் அட்ரியன் பேக்கர் தம்பதி மகிழ்ச்சியுடனும், மிகுந்த ஆரோக்கியத்துடனுமே இருந்துள்ளனர்.

ஆனால் திடீரென்று இருவரும் கொரோனா அறிகுறிகளை காட்டத் தொடங்கியுள்ளனர். இதேவேளை அமெரிக்காவில் இந்த அளவுக்கு கொரோனா பாதிப்புகள் தீவிரமடையவில்லை.

இருவரும் சுய தனிமைப்படுத்தலில் மருத்துவரின் பரிந்துரையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் நோயின் தீவிரம் காரணமாக மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.

இருவரும் ஒரே அறையில் தீவிர சிகிச்சையில் இருந்துள்ளனர். ஆனால் இனிமேலும் காப்பார்றுவது கடினம் என மருத்துவர்கள் தரப்பு தெரிவித்துள்ள நிலையில், இருவரது செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 6 நிமிட இடைவெளியில் ஸ்டூவர்ட் மற்றும் அட்ரியன் பேக்கர் தம்பதி மரணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 14 பேர் மரணமடைந்துள்ள நிலையில், புதிதாக 449 பேர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 277,610 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7,406 பேர்கள் இதுவரை கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 5 =

*