நிவாரண உதவிகளை கிடைக்கக் கூடிய ஏற்பாடு செய்ய வேண்டும் – சுரேஸ்!!

ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் நீடித்துக் கொண்டு போகின்ற நிலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை அனைவருக்கும் கிடைக்கக் கூடிய வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரியுள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இது தொடர்பான அறிவுறுத்தல்களையும் அரச அதிகாரிகளுக்கு வழங்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். கட்டப்பிராயிலுள்ள அவரது இல்லத்தில் இன்று நடாத்திய ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது.
கொரோனோ வைரஸ் தாக்கத்தையடுத்து இப்பொழுது ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டு ஏறத்தாழ இரண்டு வாரங்கள் முடிந்து விட்டது. இந்த இரண்டு வாரங்களாக கூலித் தொழிலுக்குப் போகக் கூடிய யாருக்கும் வேலை வாய்ப்புக்கள் என்பது கிடையாது. அன்றாடம் அவர்கள் வேலைக்குப் போனால் மாத்திரம் தான் அவர்களது வீடுகளில் அடுப்பு எரியும் என்ற சூழ்நிலை இருக்கிறது.
எனினும் அந்த மக்களுக்கு அரசாங்கம் நிவாரணங்கள் எதனையும் அரசாங்கம் வழங்கவில்லை. ஆனால் இப்போது தான் சமுர்த்தியினூடாக சில உதவிகள் கொடுப்பதற்கு ஆரம்பிப்பதாகச் சொல்லப்படுகிறது. அது எவ்வளவு தூரம் முழுமையாக மக்களைச் சென்றடையும் என்பதும் கேள்விக்குறியாகவும் இருக்கின்றது.
ஆகவே முதலாவதாக் தான் கொடுக்கும் நிவாரணங்களை இயன்றவரை பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் கிடைக்கக் கூடிய ஏற்பாடுகளை அரசாங்கம் செய்ய வேண்டும். ஆக நாங்கள் அறிகிற வரையில் முதியோருக்குக் கிடைக்கக் கூடிய இரண்டாயிரம் ருபாய் எடுப்பவர்களுக்கு கூட இந்த நிவாரண உதவிகள் போய்ச் சேராமல் இருக்கிறது.
இதெல்லாம் நிச்சயமாக ஏற்புடைய ஒரு விடயமல்ல. இப்போது அந்த மக்கள் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில் இருக்கின்றார்கள். ஆகவே அவர்களுக்கு;இரண்டாயிரம் ருபாய் கொடுக்கப்படுகிறது என்பதற்காக கொடுக்க வேண்டிய நிவாரணங்களை நிறுத்துவதைவிடுத்து பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் அந்த உதவிகளை வழங்க வேண்டும்.
குறிப்பாக கிராம சேவகர்களோ அல்லது பிரதேச செயலாளர்களோ உள்ளுராட்சி உறுப்பினர்கள் என எல்லோரும் சேர்ந்து அனைத்து கஸ்ரப்பட்ட மக்களுக்கும் இந்த நிவாரண உதவிகள் சென்றடைவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதனை விருப்பு வெறுப்பின்றி அனைவருக்கும் கிடைக்கக் கூடிய வகையிலான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது அவசியமானது.
பல்வேறுபட்ட தனிநபர்களும், அரசியல்க் கட்சிகளும், சமய ஸ்தாபனங்களும், தங்களால் இயன்றவரை தற்போது மக்களுக்கு உதவி செய்கின்றார்கள்.இவ்வாறான மிக இக்கட்டான நிலையில் தாங்கள் தாங்களாகவே முன்வந்து பல்வேறுபட்ட ஆலயங்களும் சரி பல்வேறுபட்ட ஸ்தாபனங்கள் தனிநபர்கள் என எல்லோருமே பல உதவிகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆகையினால் அவர்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றி கூறுகின்றோம். ஆனால் அந்த உதவிகள் கூட ஒருநாள் இரண்டு நாள் தேவைகளைக் கூட பூர்த்தி செய்யக் கூடிய உதவிகளாக இல்லை என்பது தான் உண்மை.
ஆகவே ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் நீடித்துக் கொண்டு போகின்ற அதே நேரம் கஸ்ரப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை அனைவருக்கும் கிடைக்கக் கூடிய வகையில் ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியமானது. இந்த விடயம் தொடர்பாக கிராம சேவகர்களுக்கும் கிராம மட்டங்களில் வேலை செய்கின்ற அனைவருக்கும் சரியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டுமென்றும் நாங்கள் கருதுகிறோம் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 174ஆக அதிகரிப்பு.!!
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.!! (படங்கள்)
கொடிகாமம் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 233 பேர் சற்று முன் விடுவிப்பு!! (படங்கள்)
கொரோனா சந்தேகிக்கப்படுபவர்களை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானம்!! (படங்கள்)
தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வீடு திரும்பியவருக்கு கொரோனா!!
இரணைமடு விமானபடை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 172 பேர் வீடு திரும்பினர்.!! (வீடியோ,படங்கள்)
யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்! – பிரதி பொலிஸ் மா அதிபர்!!
அரசாங்கம் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே செயற்படுகிறது – பிரதமர்!!
வைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலைகளை நாடுங்கள்!!
கொவிட்–19 ஜனாஸா விவகாரம்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?
இறுதி சடங்கிற்கு ஒன்றுகூடும் மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!
ஆஹா.. குட் நியூஸ்.. கொரோனாவுக்கு காசநோய் தடுப்பூசி.. மகிழ்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!! (படங்கள்)
மருதானை பொலிஸ் பிரிவு உட்பட்ட இமாமுல் அரூஸ் மாவத்தை முற்றாக முடக்கம்!! (படங்கள்)
கொவிட் 19 தொற்றாளரைக் காப்பாற்ற இலங்கை வைத்தியரால் புதிய கருவி கண்டுபிடிப்பு!!
கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 150 ஆக அதிகரிப்பு!!
ஊரடங்கு தளர்த்தப்படும் போது அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது !!
யாழ்.மக்களிடத்தில் சுகாதார அமைச்சர் விடுக்கும் முக்கிய கோரிக்கை!!
யாழில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரிப்பு!!
மலேசியாவிலிருந்து வந்தவருக்கு கொரோனோ; விமானத்தில் வந்தோரை பதிவு செய்யக் கோரல்!!
கொரோனாவை வைத்து எவரும் அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை!!