;
Athirady Tamil News

வெளிமாவட்டக்காரர்கள் பஸ், ரயில் மூலம் தமது ஊர்களுக்கு அனுப்பப்படும் நடைமுறை இவ்வாரம் ஆரம்பமாகும்!!

0

கொழும்பிலிருந்து வெளிமாவட்டத்துக்காரர்கள் முதற்கட்ட மருத்துவ பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டு, பஸ் மற்றும் ரயில் மூலமாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற. “கொரோனா நிலைமை தொடர்பான ஒருங்கிணைப்பு குழு’ கூட்டத்தில் முடிவு என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

இன்று காலை கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற. “கொரோனா நிலைமை தொடர்பான ஒருங்கிணைப்பு குழு’ கூட்டத்தில், கொழும்பில் வாழும் வெளிமாவட்ட மக்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

கொழும்பிலிருந்து வெளிமாவட்டத்துக்காரர்கள் முதற்கட்ட மருத்துவ பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டு, பஸ் மற்றும் ரயில் மூலமாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அங்கே அவ்வந்த மாவட்ட, பிரதேச பொது சுகாதார அதிகாரிகள், இவர்களை பொறுப்பேற்று, தத்தமது வீடுகளில் இவர்கள் தனிமை நிலைமையில் இருப்பதை கண்காணிப்பார்கள்.

இவர்களை இவர்களது வீடுகளில் தனிமை நிலையில் வைக்க முடியாவிட்டால் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இப்படி கொழும்பில் இருந்து வருகின்ற நபர்களுக்கான “கொரோனா தனிமை நிலையங்கள்” அமைக்கப்பட்டு அங்கே இவர்கள் தங்க வைக்கப்பட்டு, மருத்துவ அனுமதியின் பின் வீடு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என நான் இக்கூட்டத்தில் ஆலோசனை கூறினேன்.

வெளிமாவட்ட மக்கள் கொழும்பிலிருந்து வெளியேறுவது, கொழும்பில் சமூக இடைவெளிக்கு இடையூறாக இருக்கின்ற நெருக்கடியையும் தணிக்க உதவும். இது கொழும்பில் நிரந்தரமாக வசிக்கும் மக்களுக்கு நன்மை தரும் எனவும் நான் இக்கூட்டத்தில் கூறினேன்.

இந்த நபர்களை அடையாளம் கண்டு அனுப்பி வைக்கும் நடைமுறை இவ்வாரம் ஆரம்பமாகும். இதுபற்றி இன்று நடக்கும் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் பிரஸ்தாபித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன உறுதியளித்தார். எக்காரணம் கொண்டும் இந்நடவடிக்கை தாமதாமாகும் பட்சத்தில் இந்த பிரிவினருக்கு கொழும்பிலே வாழ்வதற்கான வாழ்வாதார உதவிகள் அரசால் வழங்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளேன்.

கொழும்பு மாவட்ட முன்னாள் எம்பீக்களும், மாவட்ட செயலாளர் தலைமையில் அனைத்து பிரதேச செயலாளர்களும், அதிகாரிகளும் கலந்துகொண்ட இந்த ஒருங்கிணைப்பு குழுவின் அடுத்த கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறும் போது, இது தொடர்பான முன்னேற்ற அறிக்கையை மாவட்ட செயலாளர் சமர்பிப்பார்.

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!!

காரணமின்றி நகருக்குள் வருகை தந்த 37 பேர் பொலிஸாரால் தடுத்துவைப்பு!! (படங்கள்)

வவுனியா நகரில் பொருள் கொள்வனவில் அதிகளவான மக்கள்!! (படங்கள்)

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 174ஆக அதிகரிப்பு.!!

இலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு பலி!!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.!! (படங்கள்)

கொடிகாமம் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 233 பேர் சற்று முன் விடுவிப்பு!! (படங்கள்)

கொரோனா சந்தேகிக்கப்படுபவர்களை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானம்!! (படங்கள்)

யாழில் 32 பேருக்கு கொரோனா பரிசோதணை!! -17 பேருக்கு இல்லை!!

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வீடு திரும்பியவருக்கு கொரோனா!!

எச்சரிக்கை! இருமல், தும்மலால் மட்டும் கொரோனா வைரஸ் பரவாதாம்… இப்படியும் பரவுமாம்.. !! (வீடியோ, படங்கள்)

தனிமைப்படுத்தும் முகாமிலிருந்த இளைஞன் தப்பியோட்டம்!!

131 நாடுகளில் மக்களின் செயற்பாடுகள் குறித்து கூகுள் ஆய்வு!!

நெல்லியடியில் இளைஞர்களை முழங்காலில் இருத்திய இராணுவம்!!

வீடுகளில் வீட்டுத்தோட்ட சவால்!! (படங்கள்)

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குழந்தை பிறந்தது!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு !!

இரணைமடு விமானபடை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 172 பேர் வீடு திரும்பினர்.!! (வீடியோ,படங்கள்)

யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்! – பிரதி பொலிஸ் மா அதிபர்!!

கோப்பாய் பிரதேச பிரிவில் நாளை நடமாடும் வங்கிச் சேவை!!

அரசாங்கம் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே செயற்படுகிறது – பிரதமர்!!

வைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலைகளை நாடுங்கள்!!

உத்தரவை மீறி ஊரடங்கில் பயணித்த கார் மீது சூடு!!

கொவிட்–19 ஜனாஸா விவகாரம்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

இறுதி சடங்கிற்கு ஒன்றுகூடும் மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − fifteen =

*