;
Athirady Tamil News

இந்தியாவிலிருந்து நாளை ஒருதொகை மருந்து!!

0

கொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையே கலந்துரையாடலொன்று இன்று(திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.

கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் திட்டமிட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து ஜனாதிபதி இதன்போது விரிவாக விளக்கினார்.

கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது முதல் அரசாங்கம் என்ற வகையில் பொறுப்புடன் செயற்பட்ட விதம் குறித்து ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ஏனைய நாடுகளையும் விஞ்சும் வகையில் மக்களின் பாதுகாப்புக்காக உடனடி நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தது முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அன்றாட நடவடிக்கைகளை பேணிய வகையில் மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதன் காரணமாக கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு முடியுமானது. சுகாதாரத் துறை, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அரச மற்றும் தனியார் பொறிமுறைகளுடன் நிபுணர்களின் ஆலோசனைகளின் பிரகாரம் எப்போதும் செயற்பட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள், அவர்களுடன் பழகியவர்களை இனம்கண்டு வைத்திய நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் தொற்றுக்குள்ளானவர்களை ஏலவே அறிந்துகொள்வதற்கு முடியுமாக இருந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

40 மத்திய நிலையங்களில் நோய்த்தடுப்புக்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. நோயாளிகள் இனம்காணப்பட்ட பிரதேசங்களில் பொதுச் சுகாதார அதிகாரிகளின் உதவியுடன் வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நோயாளிகளை கண்காணித்தல் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளுக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வழங்கி வரும் ஒத்துழைப்புகளுக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார்.

அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளுக்கு ஜக்கிய மக்கள் சக்தியினர் தமது பாராட்டுக்களை தெரிவித்ததுடன், அரசியல் மற்றும் வேறு பேதங்களின்றி நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று இரு தரப்பினரும் கருத்துத் தெரிவித்தனர்.

அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களில் எவருக்கேனும் அநீதிகள் அல்லது குறைபாடுகள் ஏற்பட்டிருக்குமானால் அது தொடர்பில் உடனடியாக செயற்படுவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாளாந்த சம்பள அடிப்படையில் நிர்மாணத் துறை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்வதற்காக வருகை தந்து கிராமங்களுக்கு செல்ல முடியாதிருக்கின்றவர்களுக்கு குறித்த தொழில் வழங்குனர்களுக்கு கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் கேட்டுக்கொண்டனர்.

தொற்றாத நோய்கள் உள்ளிட்ட சுகாதார சேவைகளுக்கு தேவையான பல்வேறு மருந்துப் பொருட்கள் அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் இந்தியாவிலிருந்து நாளை நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது.

முழு உலகமும் முகம்கொடுத்துள்ள பொருளாதார, சமூக நிலைமைகளை கருத்திற் கொண்டு எமது நாட்டுக்கு பொருத்தமான பொருளாதார முறைமையொன்று தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விளக்கினார்.

வீழ்ச்சியடைந்துள்ள ஆடை மற்றும் சுற்றுலா கைத்தொழிலை கட்டியெழுப்புவது சம்பந்தமாக நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுவருவதாகவும், சந்தர்ப்பம் கிடைத்தவுடன் அவர்களின் ஆலோசனையின் பேரில் அரசாங்கம் செற்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சமூர்த்தி உதவி பெறுபவர்களுக்கு மேலதிகமாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளிகள் உள்ளிட்ட 7 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கான 5000 ரூபாய் கொடுப்பனவு எவ்வித பேதமுமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவருக்கேனும் அது கிடைக்காவிடின் கிராம சேவகரின் ஊடாக அதனைப் பெற்றுக்கொள்ள வழி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

சுகாதார மற்றும் பல்வேறு துறைகளின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் அரசாங்கமும் ஐக்கிய மக்கள் சக்தியினரும் கவனம் செலுத்தினர்.

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன, நிமல் சிறிபால டி சில்வா, விமல் வீரவங்ச, டலஸ் அழகப்பெரும, பந்துல குணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரும் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநித்துவப்படுத்தி அதன் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தர ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

விரைந்து செய்வதற்கு எம்மிடம் வசதிகளும் இல்லை – மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன்!!

தனிமைப்படுத்தும் விடயம் பெரும் சிக்கலாக அமையும் – Dr.தேவநேசன்!! (படங்கள்)

வெளிமாவட்டக்காரர்கள் பஸ், ரயில் மூலம் தமது ஊர்களுக்கு அனுப்பப்படும் நடைமுறை இவ்வாரம் ஆரம்பமாகும்!!

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!!

காரணமின்றி நகருக்குள் வருகை தந்த 37 பேர் பொலிஸாரால் தடுத்துவைப்பு!! (படங்கள்)

வவுனியா நகரில் பொருள் கொள்வனவில் அதிகளவான மக்கள்!! (படங்கள்)

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 174ஆக அதிகரிப்பு.!!

இலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு பலி!!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.!! (படங்கள்)

கொடிகாமம் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 233 பேர் சற்று முன் விடுவிப்பு!! (படங்கள்)

கொரோனா சந்தேகிக்கப்படுபவர்களை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானம்!! (படங்கள்)

யாழில் 32 பேருக்கு கொரோனா பரிசோதணை!! -17 பேருக்கு இல்லை!!

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வீடு திரும்பியவருக்கு கொரோனா!!

எச்சரிக்கை! இருமல், தும்மலால் மட்டும் கொரோனா வைரஸ் பரவாதாம்… இப்படியும் பரவுமாம்.. !! (வீடியோ, படங்கள்)

தனிமைப்படுத்தும் முகாமிலிருந்த இளைஞன் தப்பியோட்டம்!!

131 நாடுகளில் மக்களின் செயற்பாடுகள் குறித்து கூகுள் ஆய்வு!!

நெல்லியடியில் இளைஞர்களை முழங்காலில் இருத்திய இராணுவம்!!

வீடுகளில் வீட்டுத்தோட்ட சவால்!! (படங்கள்)

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குழந்தை பிறந்தது!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு !!

இரணைமடு விமானபடை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 172 பேர் வீடு திரும்பினர்.!! (வீடியோ,படங்கள்)

யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்! – பிரதி பொலிஸ் மா அதிபர்!!

கோப்பாய் பிரதேச பிரிவில் நாளை நடமாடும் வங்கிச் சேவை!!

அரசாங்கம் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே செயற்படுகிறது – பிரதமர்!!

வைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலைகளை நாடுங்கள்!!

உத்தரவை மீறி ஊரடங்கில் பயணித்த கார் மீது சூடு!!

கொவிட்–19 ஜனாஸா விவகாரம்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

இறுதி சடங்கிற்கு ஒன்றுகூடும் மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × five =

*