;
Athirady Tamil News

விவசாயிகளுக்கு 5 ஆயிரம் கொடுப்பனவு வழங்கப்பட்டது.!! (படங்கள்)

0

விவசாயிகளுக்கு 5 ஆயிரம் கொடுப்பனவு வழங்கப்பட்டது.

விவசாய காப்புறுதி அதிகாரசபையால் விவசாயிகளுக்கான காப்புறுதி ஓய்வூதியக் கொடுப்பனவாக 5 ஆயிரம் ரூபாய் வீடு வீடாக வழங்கப்படுகின்றது! பதில் உதவிப் பணிப்பாளர் ப.கதிர்காமநாதன்

வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை மாவட்ட காரியாலயங்களின் ஊடாக விவசாயிகளுக்கான அதிகரிக்கப்பட்ட 5 ஆயிரம் ஓய்வூதியம் வீடு வீடாக வழங்கப்பட்டு வருகின்றது. அத்துடன் தபால் நிலையங்கள் ஊடாகவும் அதனைப் பெற முடியும் என கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையின் பதில் உதவிப் பணிப்பாளர் பஞ்சலிங்கம் கதிர்காமநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது,

வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை மாவட்ட காரியாலயங்களின் ஊடாக விவசாயிகளுக்கான அதிகரிக்கப்பட்ட 5 ஆயிரம் ஓய்வூதியம் வீடு வீடாக வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த மூன்று மாவட்டங்களிலும் நூற்றுக்கு மேற்பட்ட தபால் மற்றும் உப தபால் நிலையங்கள் ஊடாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இந்த மாதாந்த ஓய்வூதியத் திட்டம் வழங்கப்படுகிறது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் ஏற்பாட்டின் அடிப்படையில் கமத்தொழில் மற்றும் காப்புறுதி அதிகார சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகத்தின் ஏற்பாட்டில் இந்த காப்புறுதித் திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட தினத்தில் அதனை தபாலகத்தில் பெற்றுள்ளார்கள். 8 ஆம் திகதி மற்றும் 9 ஆம் திகதிகளிலும் கமக்கார காப்புறுதி பெறுவர்கள் அவர்களது தபாலகம் மற்றும் உப தபகாலகங்களிலும் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த காலங்களில் மாதாந்தம் 950 ரூபாய் எமக்கு மாதாந்தம் இந்த காப்புறுதி திட்டத்தின் மூலம் கிடைத்தது. தற்போது நாடு கெரனா அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள நிலையில் நாம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை இந்த காப்புறுதி சபை வீடு வீடாக வந்து வழங்குவதையிட்டு நாம் மகிழ்சியடைவதுடன், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம் என பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + 10 =

*