;
Athirady Tamil News

வவுனியாவில் மின்னல் தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் பலி!!

0

வவுனியா நாகர் இலுப்பைக்குளம் பகுதியில் இன்று (08.04.2020) மாலை 5.00 மணியளவில் மின்னல் தாக்கியதில் ஒரு பிள்ளையின் தந்தையான 25வயதுடைய இளைஞனொருவர் சம்பவ இடத்திலிலேயே மரணமடைந்துள்ளார்.

வவுனியாவில் மாலை நேரத்தில் பெய்த மழை காரணமாக வீதியில் ஓரத்தில் நின்ற தென்னை மரத்தில் குறித்த இளைஞன் நின்றுள்ளார். இதன் போது மரத்தின் மீது வீழ்ந்த மின்னல் இளைஞனையும் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இளைஞன் உயிரிழந்துள்ளார்.

பின்னர் அன்புலன்ஸ் சேவை மூலம் இளைஞனின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இச் சம்பவத்தில் இராசேந்திரகுளம் பகுதியினை சேர்ந்த ஒர் பிள்ளையின் தந்தையான 25வயதுடைய பெரியசாமி மங்கலேஸ்வரன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − three =

*