;
Athirady Tamil News

வீடுகளுக்கு சென்று முடி திருத்தினால் நடவடிக்கை! அழகக சங்கம் எச்சரிக்கை!!

0

வீடுகளுக்கு சென்று முடி திருத்தும் வேலையில் ஈடுபட்டால் குறித்த தொழிலாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வவுனியா அழகக கூட்டுறவுச் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

‘கொரோனா’ நோய் பரவாமல் தடுப்பதற்காக அரசாங்கம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அதன் ஒரு கட்ட நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு மூலமாக மக்களை ஒன்று கூடாமல் சமுதாய இடைவெளியை ஏற்படுத்தி மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையை அரசு முன்னெடுத்துள்ளது.

அந்தவகையில் அரசின் செயற்பாட்டுக்கு வவுனியா மாவட்ட அழகக கூட்டுறவுச் சங்கம் முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றது. இருந்த போதும் வவுனியா மாவட்ட அழகக கூட்டுறவு சங்கத்தின் அங்கத்தவர்கள் சிலர் கிராமங்கள் மற்றும் வீடுகளுக்கு சென்று முடி திருத்தும் தொழிலில் ஈடுபட்டு வருவதாக அறிகிறோம். இதன் காரணமாக ‘கொரோனா’ தொற்று பரவும் வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுவதாக சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆகவே கிராமங்கள் மற்றும் வீடுகளுக்கு சென்று முடி திருத்தும் தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது நோய் பரவல் குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வவுனியா அழகக கூட்டுறவுச் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ் அறிவித்தலை மீறும் அழகக சங்க உறுப்பினர்கள் மீது மாவட்ட சுகாதார பரிசோதகர் மற்றும் பொலிசார் ஊடாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதோடு இவ்விடயத்தை வாடிக்கையாளர்களும் கவனத்தில் எடுத்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ளுமாறு வவுனியா அழகக கூட்டுறவுச் சங்கம் கோருகின்றது.

வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து அழகக நிலையங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட வேண்டும் என்பதுடன் இவ் அறிவுறுத்தல்களை மீறும் நபர்கள் குறித்து பொதுமக்கள் முறைப்பாடுகளை 077-8089698, 077-2032972 ஆகிய இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் வவுனியா அழகக கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் பலி !!

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான்!!

கொத்தமல்லி, இஞ்சி மற்றும் மரமஞ்சளை இறக்குமதி செய்ய தீர்மானம்!!

ஊரடங்கு உத்தரவு நீடிப்பு !!

மன்னார் தாராபுரம் கிராமம் முழுமையாக ஒரு வாரத்திற்கு முடக்கம்!!

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல் !!

வரும் 2 வாரம் அவதானம்; இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!!

பிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு இன்று!!

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு !!

கொழும்பில் குடும்பங்களுக்கு நன்கொடை வழங்க நடவடிக்கை!!

சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பதிவோர் மட்டுமல்ல பகிர்வோரும் கைதாவர்!!

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 6 ஆவது நோயாளி உயிரிழந்துள்ளார்.!!!

அரநாயக்க பகுதியில் கொரோனா பரவும் அபாயம் !!

விரைந்து செய்வதற்கு எம்மிடம் வசதிகளும் இல்லை – மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன்!!

தனிமைப்படுத்தும் விடயம் பெரும் சிக்கலாக அமையும் – Dr.தேவநேசன்!! (படங்கள்)

வெளிமாவட்டக்காரர்கள் பஸ், ரயில் மூலம் தமது ஊர்களுக்கு அனுப்பப்படும் நடைமுறை இவ்வாரம் ஆரம்பமாகும்!!

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!!

காரணமின்றி நகருக்குள் வருகை தந்த 37 பேர் பொலிஸாரால் தடுத்துவைப்பு!! (படங்கள்)

வவுனியா நகரில் பொருள் கொள்வனவில் அதிகளவான மக்கள்!! (படங்கள்)

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 174ஆக அதிகரிப்பு.!!

இலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு பலி!!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.!! (படங்கள்)

கொடிகாமம் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 233 பேர் சற்று முன் விடுவிப்பு!! (படங்கள்)

கொரோனா சந்தேகிக்கப்படுபவர்களை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானம்!! (படங்கள்)

யாழில் 32 பேருக்கு கொரோனா பரிசோதணை!! -17 பேருக்கு இல்லை!!

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வீடு திரும்பியவருக்கு கொரோனா!!

எச்சரிக்கை! இருமல், தும்மலால் மட்டும் கொரோனா வைரஸ் பரவாதாம்… இப்படியும் பரவுமாம்.. !! (வீடியோ, படங்கள்)

தனிமைப்படுத்தும் முகாமிலிருந்த இளைஞன் தப்பியோட்டம்!!

131 நாடுகளில் மக்களின் செயற்பாடுகள் குறித்து கூகுள் ஆய்வு!!

நெல்லியடியில் இளைஞர்களை முழங்காலில் இருத்திய இராணுவம்!!

வீடுகளில் வீட்டுத்தோட்ட சவால்!! (படங்கள்)

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குழந்தை பிறந்தது!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு !!

இரணைமடு விமானபடை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 172 பேர் வீடு திரும்பினர்.!! (வீடியோ,படங்கள்)

யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்! – பிரதி பொலிஸ் மா அதிபர்!!

கோப்பாய் பிரதேச பிரிவில் நாளை நடமாடும் வங்கிச் சேவை!!

அரசாங்கம் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே செயற்படுகிறது – பிரதமர்!!

வைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலைகளை நாடுங்கள்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − 5 =

*