;
Athirady Tamil News

இடம்மாற்றம் பெற்ற முன்னாள் கிராம உத்தியோகத்தர் நிர்வாகத்தில் தலையீடு!!

0

வவுனியாவில் அடையாள அட்டை முறைகேடு தொடர்பில் தண்டனை இடம்மாற்றம் வழங்கப்பட்ட முன்னாள் கிராம உத்தியோகத்தர் நிர்வாகத்தில் தலையீடு செய்து வருவதால் தாங்கள் பாதிக்கப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்

வவுனியாவில் அடையாள அட்டை முறைகேடு தொடர்பில் இடமாற்றம் பெற்று பிரதேச செயலகத்திற்கு மாறிய பின்னரும் முன்னர் கடமையாற்றிய கிராம நிர்வாக நடவடிக்கைளில் கிராம அலுவலர் ஒருவர் தலையிடுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பண்டாரிக்குளம் கிராமத்தில் முன்னர் பணியாற்றிய நிலையில் அக் கிராம மக்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கவனம் செலுத்திய நிலையில் கிராம அலுவலர் ஒருவருக்கு பிரதேச செயலகத்திற்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த இடமாற்றம் பெற்ற கிராம அலுவலர் மீண்டும் பண்டாரிக்குளம் கிராம நிர்வாக நடவடிக்கைகளில் தலையிடுவதாக அப் பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளதுடன், தமது பிழைகளை மறைக்க மக்களை தமக்கேற்ற வகையில் திசை திருப்ப முற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளர் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரியுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + 5 =

*