;
Athirady Tamil News

தோட்டத் தொழிலாளர்களிடம் போதுமானளவு பணம் இருக்கவில்லை!! (படங்கள்)

0

பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று (09.04.2020) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்திலுள்ள பிரதான நகரங்களுக்கு காலைவேளையில் குறைந்தளவான மக்களே வருகை தந்திருந்தனர். நண்பகலுக்கு பிறகே தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டதால் அதன் பின்னரே பெருமளவானவர்கள் நகரங்களை நோக்கி வாகங்களும், நடைபயணமாகவும் வந்தனர்.

இன்று மாலை 4 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச்சட்டம் எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 6 மணிவரை அமுலில் இருப்பதாலும், இடையில் தமிழ், சிங்கள புத்தாண்டு மலர்வதாலும் மக்கள் நீண்டவரிசையில் காத்திருந்து அத்தியாவசியப் பொருட்கள் உட்பட ஏனைய பொருட்களை கொள்வனவு செய்தனர்.

வேலை நாட்கள் குறைவு என்பதால் தோட்டத் தொழிலாளர்களிடம் போதுமானளவு பணம் இருக்கவில்லை. சிலர் நகைகளை அடகுவைத்து – அதன்மூலம் கிடைத்த பணத்திலே பொருட்களை வாங்கினர்.

ச.தொ.ச விற்பனை நிலையங்கள், சுப்பர் மார்க்கெட்டுகள், சில்லறை மற்றும் மொத்த வியாபார நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ச.தொ.காவில் தமக்கு தேவையானளவு பொருட்களை கொள்வனவு செய்யமுடியாமல் இருந்ததாக நுகர்வோர் தெரிவித்தனர்.

தலவாக்கலை, கொட்டகலை, பொகவந்தலாவ ஆகிய நகரங்களில் இந்நிலைமையைக் காணக்கூடியதாக இருந்தது. பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி, சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதை காணக்கூடியதாக இருந்தது. எனினும், ஒரு சிலர் எவ்வித நடைமுறைகளையும் பின்பற்றுவதாக தெரியவில்லை.

அதேவேளை, ஒரு சில வர்த்தகர்கள் கட்டுப்பாட்டு விலையைவிடவும் கூடுதல் தொகைக்கு பொருட்களை விற்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

நகரப்பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், ரோந்து நடவடிக்கையிலும் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

விவசாயிகளுக்கு தமது விளைச்சல்களை விற்பனை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது!!! (படங்கள்)

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் பலி !!

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான்!!

கொத்தமல்லி, இஞ்சி மற்றும் மரமஞ்சளை இறக்குமதி செய்ய தீர்மானம்!!

ஊரடங்கு உத்தரவு நீடிப்பு !!

மன்னார் தாராபுரம் கிராமம் முழுமையாக ஒரு வாரத்திற்கு முடக்கம்!!

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல் !!

வரும் 2 வாரம் அவதானம்; இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!!

பிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு இன்று!!

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு !!

கொழும்பில் குடும்பங்களுக்கு நன்கொடை வழங்க நடவடிக்கை!!

சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பதிவோர் மட்டுமல்ல பகிர்வோரும் கைதாவர்!!

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 6 ஆவது நோயாளி உயிரிழந்துள்ளார்.!!!

அரநாயக்க பகுதியில் கொரோனா பரவும் அபாயம் !!

விரைந்து செய்வதற்கு எம்மிடம் வசதிகளும் இல்லை – மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன்!!

தனிமைப்படுத்தும் விடயம் பெரும் சிக்கலாக அமையும் – Dr.தேவநேசன்!! (படங்கள்)

வெளிமாவட்டக்காரர்கள் பஸ், ரயில் மூலம் தமது ஊர்களுக்கு அனுப்பப்படும் நடைமுறை இவ்வாரம் ஆரம்பமாகும்!!

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!!

காரணமின்றி நகருக்குள் வருகை தந்த 37 பேர் பொலிஸாரால் தடுத்துவைப்பு!! (படங்கள்)

வவுனியா நகரில் பொருள் கொள்வனவில் அதிகளவான மக்கள்!! (படங்கள்)

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 174ஆக அதிகரிப்பு.!!

இலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு பலி!!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.!! (படங்கள்)

கொடிகாமம் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 233 பேர் சற்று முன் விடுவிப்பு!! (படங்கள்)

கொரோனா சந்தேகிக்கப்படுபவர்களை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானம்!! (படங்கள்)

யாழில் 32 பேருக்கு கொரோனா பரிசோதணை!! -17 பேருக்கு இல்லை!!

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வீடு திரும்பியவருக்கு கொரோனா!!

எச்சரிக்கை! இருமல், தும்மலால் மட்டும் கொரோனா வைரஸ் பரவாதாம்… இப்படியும் பரவுமாம்.. !! (வீடியோ, படங்கள்)

தனிமைப்படுத்தும் முகாமிலிருந்த இளைஞன் தப்பியோட்டம்!!

131 நாடுகளில் மக்களின் செயற்பாடுகள் குறித்து கூகுள் ஆய்வு!!

நெல்லியடியில் இளைஞர்களை முழங்காலில் இருத்திய இராணுவம்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + 9 =

*